நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக செயல்படும் நெமிலி தாசில்தார் !ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா!?

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகா உட்பட்ட: உப்பரந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர்
அண்ணாமலை –
(த/பெ.வையாபுரி (அமரர்),
39/2, உலகாண்டார் தெரு,
சேரி அஞ்சல் )
செயல் துறை நடுவர் மற்றும் வருவாய் கோட்டாச்சியர் ,
வருவாய் வட்டாச்சியர் , அவர்களுக்கு
நீதிமன்ற சாசனமாம் இந்திய சாட்சிய சட்டம் – 1872 இன் 159வது பிரிவு படி நினைவூட்டும் விண்ணப்பம் இந்திய அஞ்சல் சட்டம் – 1898 பிரிவு 28 இன் படி ஒப்புகையுடன் மனு அனுப்பியுள்ளார்.

நெமிலி வருவாய் வட்டாச்சியர் அவர்களுக்கு பட்டா பெயர் மாற்றம் செய்யக் கோரிய விண்ணப்பம் – நாள் : 18.02.2019
2, சென்னை, உயர் நீதிமன்றம், வழக்கு எண் .W. P.No.9112 of 2019 தீர்ப்புரை நாள் : 28.03.2019.
3, மனுதாரரால் இராணிப்பேட்டை, வருவாய் கோட்டாச்சியர் அவர்களுக்கு பட்டா பெயர் மாற்றம் செய்யக் கோரி மேல் முறையீடு நாள் : 09.12.2019
1, மனுதாராகிய நான் இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம், சேரி அஞ்சல் , உப்பரந்தாங்கல் கிராமம், உலகாண்டார் தெரு, கதவு எண்.39/2 இல் குடியிருக்கும் அமரர் .வையாபுரியின் மகனான அண்ணா மலை, வயது – …. ஆகிய நான் பிரமாணமாக தாக்கல் செய்யும் நீதிமன்ற சாசனமாம் இந்திய சாட்சிய சட்டம் – 1872 இன் 159வது பிரிவு படி பணிந்தனுப்பும் நினைவூட்டும் விண்ணப்பம் .
2, பார்வை – 1 இல் கண்டுள்ள இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம், புதுப் பட்டு கிராமம், சர்வே எண்கள்585/17D மற்றும் புஞ்சை சர்வே எண்.491 / 1A2A1 மற்றும் 491 / 1B3 ஆகிய எங்களது அனுபவத்தில் இருந்து வரும் சொத்துக்களுக்கு பட்டா பெயர் மாற்றம் செய்யக் கோரும் விண்ணப்பத்தை நிறைவேற்றுகை செய்யாமல் நெமிலி, வருவாய் வட்டாச்சியர் அலுவலகம் வீணானகாலந் தாழ்த்தி வந்ததாலும், மனுதாராகிய என்னால் தமிழக அரசாணை எண்.210, (நி.அ.1 (1) ) துறை நாள் : 08.07.2011 விதிகளுக்கு முரணாக நெமிலி, வருவாய் வட்டாச்சியர் செயல்பட்டு வந்ததாலும் சென்னை, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அண்ணாமலைக்கு ஆதரவாக சென்னை உயர் நீதிமன்றம் பார்வை-2 இல் கண்டுள்ளவாறு தீர்ப்புரைத்துள்ளது.
3, மனுதாராகிய பட்டா பெயர் மாறுதல் செய்யக் கோரிய பார்வை – 1 இல் கண்டுள்ள விண்ணப்பத்தை நெமிலி, தாசில்தார் பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண்.31க்கு விரோதமாகவும், தமிழ்நாடு பட்டாப் பதிவு புத்தக சட்டம் – 1983 இன் பிரிவு 3 ( 7 ) ஐ தவறாக பயன்படுத்தி இந்த சொத்துக்கு எந்தவொரு சம்பந்தமோ / எந்தவொரு ஆவண மோ இல்லாத / சொத்தில் அனுபவமும் இல்லாத ஒரு நபரிடம் இந்தப் பட்டா பெயர் மாற்றத்தை ஆட்சேபணை செய்வதாக எழுதிப் பெற்றுக் கொண்டு சட்டவிரோதமாக சொத்து தொடர்பான எந்தவொரு ஆவணங்களையும் சான்றாக இணைக்காமல் உயர்நீதிமன்றத்தின் சட்டப் பரிகாரம் கோரினேன் என்ற காழ்ப்புணர்ச்சியோடும் / உள்நோக்கத்தோடும் / எனக்கு தீங்கிழைக்க வேண்டும் என்ற கெட்ட நோக்கத்தோடும் பார்வை-1 இல் கண்டுள்ள எனது பட்டா பெயர் மாற்றம் செய்யக் கோரிய எனது விண்ணப்பத்தை தள்ளுபடி செய்து நெமிலி, வருவாய் வட்டாச்சியர் அவர்களின் செயல்முறை ஆணை……… தேதி:….. அன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இது காலங்காலமாக இந்த சொத்தை நாளது தேதி வரையில் அனுபவித்து வரும் மனுதாராகிய நானும், எனது குடும்பத்தாரும் அநேக மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளோம்.
4, இதன் காரணங்களால் தமிழ்நாடு பட்டாபதிவு புத்தக சட்டம் – 1983 இன் பிரிவு 12 இன் படியும், தமிழ்நாடு பட்டா விவரக் குறிப்பு புத்தக விதி – 14 இன் படியும், உரிய காலங்களில் மதிப்பு மிகுந்த வருவாய் கோட்டாச்சியரான தங்களுக்கு மேல் முறையீடு பார்வை – 3 இல் கண்டுள்ளவாறு மனுதாராகிய என்னால் செய்யப்பட்டு நாளது தேதி வரையில் மதிப்பு மிகுந்த தங்கள் அலுவலகத்தினால் எந்தவொரு பதிலும் வழங்காமல் இருந்து வருகிறீர்கள்.
5. தமிழ்நாடு அரசாணை நிலை எண் 73 / 2018 நாள் : 11 – 06-2018 இல் பொதுமக்களின் குறை தீர் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான நடைமுறைகள் – அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளது –
தமிழ்நாடு அரசு அலுவலக நடைமுறை நூலில் அத்தியாயம் 22 இல் பத்தி 167 பிரிவு (ii) க்கு திருத்தம் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மனுக்களை பெற்றுக் கொண்ட 3 தினங்களுக்குள் மனுவை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதல் உடனடியாக அனுப்பப்பட வேண்டும் என்றும்
மனுவைப் பெற்றுக் கொண்ட 30 தினங்களுக்குள் குறை தீர்க்கப்பட வேண்டும் என்றும்
மனுதார் அம்மனு தொடர்பாக அலுவலகத்திற்கு நேரில் வந்து கேட்கும் போது அம்மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தெரிவித்தல் வேண்டும் என்றும்
ஏதேனும் காரணங்களுக்காக மனுவை இறுதி செய்ய கூடுதல் கால அவகாசம் தேவை என்றால் அது குறித்து மனுதாருக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்றும்
மனுதாரின் கோரிக்கையை ஏற்க இயலாத நிகழ்வில் அதற்குரிய காரணத்துடன் கூடிய பதிலை சம்பந்தப்பட்ட மனுதாருக்கு 30 தினங்களுக்குள் தெரிவிக்கலாம் என்றும்
தமிழ்நாடு அரசு அரசாணையை இயற்றியுள்ளது. இந்த அரசாணைக்கு முரணாகவும், கோரிக்கை மனு வழங்கிய தினத்தில் இருந்து 30 தினங்களுக்குள் குறை தீர் மனுக்கள் மீது நிறைவேற்றுகை செய்யப்பட வேண்மும் என சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு எண் .W. P.No.20452 of 2014 And M.P.No.1 of 2014 தேதி: 01.08.2014 இல் தீர்ப்புரைத்துள்ளது. இத்தீர்ப்புரைக்கு விரோதமாகவும் மதிப்பு மிகுந்த தங்கள் அலுவலகம் செயல்பட்டு மனு தாரால் கருதப்படுகிறது.
6. ஆகவே இந்த நினைவூட்டும் விண்ணப்பம் பணிந்து தங்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்த நினைவூட்டும் விண்ணப்பம் தங்களுக்கு கிடைத்த 7 தினங்களுக்குள் பார்வை – 1 இல் கண்டுள்ள எனது கோரிக்கை மனுவில் கண்டுள்ள இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம், புதுப் பட்டு கிராமம், சர்வே எண்கள்.585/17 D மற்றும் புஞ்சை சர்வே எண்.491 / 1 A2 A1 மற்றும் 491 / 1 B3ல் கண்டுள்ள மனுதாராகிய எனது அனுபவத்தில் இருந்து வரும் எங்களது குடும்பச்சொத்துக்கு பட்டா பெயர் மாற்றம் செய்யக் கோரிய கோரிக்கையினை நிறைவேற்றுகை செய்ய தவறும் பட்சத்திலும், நிறைவேற்றுகை செய்யக் கூடாது என்ற கெட்ட நோக்கத்தோடும் / வீணாண காலதாமதம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடும், தாங்கள் எனக்கு பதில் வழங்கினாலும், தங்களின் பதில் எனக்கு திருப்தியளிக்காத பட்சத்திலும் மேற்காணும் குற்றச் சங்கதிகள் அனைத்தையும் நீதிமன்ற சாசனமாம் இந்திய சாட்சிய சட்டம் – 1872 இன் 106 வது பிரிவு படிமறைமுகமாக ஒப்புக் கொள்வதாக கருதி நீதி நடவடிக்கை மேற்கொள்ள இதுவே ஆவணமாகி விடும் என்பதையும், இவ்வழக்குகளுக்கு ஆகும் செலவினங்கள் மற்றும் இதனால் எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் ஏற்பட்ட வீண் அலைச்சல், வேலையிழப்பு, வீண் செலவு, மன உளைச்சல் ஆகியவற்றுக்கு தாங்களே தார்மீகப் பொறுப்பு ஏற்க நேரிடும் என்பதையும், இதற்கான நஷ்ட ஈடாக தலா ரூ.10,00000 (ரூபாய் பத்து இலட்சம் மட்டும்) மதிப்பு மிகுந்த தங்களிடமும், மதிப்பு மிகுந்த நெமிலி தாசில்தார் அவர்களிடமும் வசூலிக்க நேரிடும் என்று அண்ணாமலையின் மனுவில் கூறப்பட்டுள்ளது.