நீதிமன்ற உத்தரவு காற்றில் பறக்க விட்டு சட்ட விதிமுறைகள் மீறப்பட்டதால் குற்றாலத்தில் கோவில் வளாகத்தில் நடந்த கோர தீ விபத்து!

தீ விபத்து நடந்ததும் சம்பவ இடத்திற்கு வராத குற்றால கோவில் செயல் அலுவலர் மற்றும் இணை ஆணையர்!

தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கக்கூடியது குற்றாலம் மெயின் அருவி. இதன் அருகே உள்ள குற்றாலநாதர் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. குற்றால நாதர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அருவியில் இருந்து வரும் வழியில் தெற்கு வாசல் பகுதியில் தற்காலிக சுமார் 50 க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. தற்காலிக் கடையில் சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் 30-க்கும் மேற்பட்ட கடைகளில் தீ வேகமாக பரவியது. தீ வேகமாக பரவியதால் 24 கடைகள் தீயில் எரிந்து முற்றிலும் நாசம் அடைந்தது.

இந்த தீ விபத்திற்கு காரணம்,சட்ட விதிமுறைகள் மீறப்பட்டதன் விளைவு தான் என்ற குற்றச் சாட்டை வைக்கின்றனர்.
குற்றாலம் திருக்கோவிலின் சுற்றுச்சுவர் ஒட்டிய பகுதிகளில் கடை அமைத்து வியாபாரம் செய்யக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்க விட்டு இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் சட்ட விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் தான் இந்தக் கோர தீ விபத்து நடக்க காரணம் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த தீ விபத்திற்கு பின் கோவிலுக்குள் பக்தர்கள் விளக்கு போடவே கட்டுபாடுகள் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
லஞ்சம் பெற்றுக்கொண்டு கோயில் வளாகத்தில் உள்ள கடைகளில் எரிவாயு கேஸ் சிலிண்டரை பயன்படுத்த விட்டு கண்டுகொள்ளாமல் கோயில் நிர்வாக அதிகாரிகள் இருந்ததால்தான் இந்த கோர தீ விபத்து நடந்துள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது!
இதனால்
குற்றாலம் கோவில் மதில் சுவர் அருகே இருந்த 24 தற்காலிக கடைகள் எரிந்து சாம்பலானது ,
அரச மரமே வேரோடு எரிந்து அங்கிருந்த விநாயகர் கோவில் தீக்கரையானது!
திருக் குற்றாலநாதர் கோவில் சுற்று சுவர் நாசமானது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அது மட்டும் இல்லாமல் திருக்கோவிலின் சுற்றுச்சுவர் ஒட்டிய பகுதிகளில் கடை அமைத்து வியாபாரம் செய்யக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவு தற்போது நடைமுறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
(நெல்லையப்பர் கோவிலிலும் தற்போது நான்கு மதில் சுவரை ஒட்டி குறிப்பாக தெற்கு மேற்கு வடக்கு சுவரை உடைத்து சட்டவிரோதமாக கடைகள் வைத்துள்ளனர்.
கோவிலுக்கு வருமான இழப்பு ஏற்படும் என்று நீதிமன்றத்தில் திருக் குற்றாலநாதர் கோவில் நிர்வாகம் கொடுத்த உறுதிமொழி கொடுத்தது என்ன ஆச்சு?
எத்தனை கடைகள் ஏலம் விடப்பட்டது எத்தனை கடைகள் சட்டவிரோதமாக வைக்க அனுமதிக்கப்பட்டது என்ற விவரத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி கண்டுபிடிக்க வேண்டும்.
எரிந்து நாசமான 24 கடைகளில் 10க்கும் மேற்பட்ட கடைகளை இஸ்லாமியர்கள் நடத்தி வந்ததாக தகவல்!
அறநிலையத்துறை இடத்தில் சட்டப்படி பிற மதத்தவர் குத்தகை எடுக்க முடியாத நிலையில் இஸ்லாமியர்கள் 10 கடைகள் நடத்தியது எப்படி!?
கோவில் பாதுகாப்பில் இந்து சமய அற நிலையத் துறைக்கு துளியும் அக்கறை இல்லையா!?
கோவில் வளாகத்தில் உள்ள கடைகளில் அசம்பாவிதம் நடந்துள்ளது. இது போன்ற அசம்பாவிதம் நடக்காமல் இருக்க கோவில் நிர்வாகம் சார்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் இருக்க காரணம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது?இனி வருங்காலங்களில் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படாத வகையில் கடைகள் போதுமான இடைவெளி விட்டு அமைக்கவும், விதிமுறைகளை மீறாமல் இருக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதைவிட பெரிய கொடுமை திருக்கோவிலை சுற்றிய வீதிகளிலும் அன்னதான கூடத்திலும் அசைவம் சமைக்க அனுமதியளித்தது உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
கோவிலின் சில அனாச்சாரமான செயல்பாடுகளும் வருமானம் மட்டுமே குறிக்கோளாக கொண்டு இயங்கும் கோவில் நிர்வாகத்தின் கள்ள மவுனமுமே தீ விபத்தின் சாட்சி !!???
கோவில் முன்பு தீ விபத்து நடந்ததும் சம்பவ இடத்திற்கு கோவில் செயல் அலுவலரோ இணை ஆணையரோ வரவில்லையே ஏன்??*
.முதலில் வந்தது கடையநல்லூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்!
அதன்பிறகு தான் ஆளுங்கட்சியினரும் கூட்டணி கட்சியினரும் வந்து சென்றனர்!!
.அரசு துறைகளில் அரவணைப்பும் இல்லை முறையான ஒருங்கிணைப்பும் இல்லை அவரவர் துறை சார்ந்து தான்தோன்றி தனமாக செயல்படுகின்றனர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த வாரம் குற்றாலநாதர் கோவிலில் வழங்கப்பட்ட பிரசாதங்களில் பூச்சிகள் வண்டுகள் இருந்ததாகவும்
தரமற்ற கலாவதியான பொருளில் பிரசாதம்.
உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வில் கெட்டுப்போன அரிசி எண்ணெய் மாவு நூற்றுக்கணக்கான கிலோ பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது!
சிவனுக்கே புழுத்து போன அரிசியில் நெய்வேத்யமா ? இறைவா என்ன கொடுமை அறநிலையத்துறை ஆலயங்களில் அவலம்*
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் அலட்சியமும், ஊழலும் தீ விபத்திற்கு ஒரு காரணம்
கோவில் தப்பியது பெரும் புண்ணியம் . நல்ல வேளை சிவன் அருளால் பொதுமக்களுக்கும் உயிரிழப்பு இல்லை. இனிமேல் அறங்கெட்ட துறையால் இப்பிடி ஒரு கோவிலை உருவாக்க முடியுமா ?
திருக்குற்றாலநாதர் கோவில் ஊழியர்கள் செயல்அலுவலர் உதவி ஆணையர் மீது இந்திய தண்டனை சட்டப்படியும் துறை ரீதியாகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஒட்டுமொத்த பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.