நீர் நிலைகளில் உரிய அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக கிரவல் மண் கடத்த பல்லடம் வட்டாட்சியருக்கு பல லட்சம் லஞ்சம்!நடவடிக்கை எடுப்பாரா திருப்பூர் மாவட்ட ஆட்சியர்!

கடந்த மாதம் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கல் குவாரி மற்றும் கிரசர் உரிமையாளர்களுடன் வருவாய்த்துறை , கனிமவளத்துறை , காவல்துறை , அதிகாரிகள் ஆலோசனைக்கூட் டம் பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார் தலைமை யில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அது வெறும் ஆலோசனைக் கூட்டம் மட்டுமே தவிர அந்த சட்ட விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்றால் 100% சாத்தியம் இல்லை என்பதுதான் நிதர்சனம்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் ,(21.06.2022) அன்று பொங்கலூர் ஒன்றியம், எலவந்தி வடுகபாளையம் கிராமத்தில் கரசமடை குட்டையில் எந்த ஒரு உரிய அனுமதி இல்லாமல் கிரவல் மண் எடுத்துச் செல்வதற்கு பல்லடம் வட்டாட்சியர் உடந்தையாக இருந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள எலவந்தி வடுகபாளையம் கிராமத்தில் சுமார் 3000 பேர் வசிக்கின்றனர். இங்கு கிணற்று நீர் பாசனம் மூலம் விவசாயம் செய்து வருகின்றனர். பருவமழை பொய்த்தால் காய்கறி சாகுபடி மேற்கொள்ள முடியாமல் விவசாயிகளின் நிலை மிக மோசமாக இருக்கும் .இந்நிலையில் அங்குள்ள முத்து விநாயகருக்கு மழை வேண்டி பொங்கல் வைத்தால் மழை பெய்யும் என்ற ஐதீகத்தின் முறைப்படி வழிபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இப்படி நீர் நிலைகளை நம்பி விவசாயம் செய்து வரும் கிராமத்தில்
பல்லடம் சுற்றுவட்டார பகுதியில் நடக்கும் நெடுஞ்சாலை பணிக்கு என்று சொல்லி நீர்நிலைகள் உள்ள குட்டைகளில் சட்டவிரோதமாக உரிய அனுமதி இல்லாமல் கிராவல் மண் வெட்டி எடுத்து கடத்தி சென்று விலைக்கு விற்று மோசடி நடப்பதாக கிராம மக்கள் குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.
நீர்நிலை குட்டையில் கிராவல் மண் எடுத்து கடத்திச் செல்வது சம்பந்தமாக எலவந்தி வடுகபாளையம் கிராம நிர்வாக அலுவலரிடம் சமூக ஆர்வலர் தொலைபேசியில் கேட்டபோது பல்லடம் தாசில்தாரிடம் அனுமதி பெற்று தான் கிராவல் மண் எடுத்துச் செல்வதாகவும் இந்த மண் எடுத்துச் செல்வதற்கு கிராமத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாகவும் கிராம பஞ்சாயத்து தலைவர் கூறியதாகவும் தற்போது மண்ணெடுக்கும் இடத்தில் தான் இருக்கிறேன் என்று கிராம நிர்வாக அலுவலர் கூறுகிறார் அதற்கு சமூக ஆர்வலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து எந்த அனுமதியும் தரவில்லை என்று கூறுகிறார்கள் அப்படியே இருங்கள் சப் கலெக்டருக்கு போன் செய்கிறேன் அவரிடமே சொல்லுங்கள் என்று கூறுகிறார் அதற்கு கிராம நிர்வாக அலுவலர் இல்லை தாசில்தாரிடம் கேட்டு மறுபடியும் உங்களுக்கு பதில் சொல்கிறேன் என்று கூறுகிறார் அதற்கு சமூக ஆர்வலர் கிராவல் மண் கடத்துவதற்கு தாசில்தார் வருவாய் ஆய்வாளர் கிராம நிர்வாக அலுவலர் மூன்று பேர் மீதும் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் கொடுக்கப் போகிறேன் என்று பேசிய அந்த ஆடியோ தற்போது வெளிவந்துள்ளது.
கிராவல் மண் கடத்தலை தடுத்து நிறுத்த வேண்டிய வருவாய் துறை எலவந்தி கிராம நிர்வாக அலுவலர் , பொங்கலூர் வருவாய் ஆய்வாளர், பல்லடம் வட்டாட்சியர் ஆகியோர்கள் மண் கடத்துபவர்களிடம் பல லட்ச ரூபாய் லஞ்சமாக கையூட்டு பெற்றுக் கொண்டு சட்ட விரோதமாக குட்டைகளில் இருக்கும் கிராவல் மண்ணை கடத்தி வருவதாகவும் இதனால் நீர் நிலைகள் பாதிக்கப்படுவதாகவும் அதுமட்டுமில்லாமல் இதனால் அரசுக்கு பல கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வருவாய்த் துறையில் முக்கியமாக இருக்கும் வட்டாட்சியர் மற்றும் வருவாய் ஆய்வாளர் ,கிராம நிர்வாக அலுவலர் இவர்கள் மீது மாவட்ட ஆட்சியரும், சார் ஆட்சியரும் துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்றும் மண் கடத்திச் சென்ற டிப்பர் லாரி மற்றும் ஜேசிபி இயந்திரங்களை உடனடியாக பறிமுதல் செய்து உரிய இழப்பீடு தொகையை பெற்று அரசு கருவூலத்துக்கு செலுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாகும்.

கடந்த மாதம் பல்லடம் தாலுகா அலுவலகத்தில் கல் குவாரி மற்றும் கிரசர் உரிமையாளர்களுடன் வருவாய்த்துறை , கனிமவளத்துறை , காவல்துறை , அதிகாரிகள் ஆலோசனைக்கூட் டம் பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார் தலைமை யில் நடைபெற்றது. இதில் கல்குவாரி லாரிகள் விதிமுறைகளுக்குட்பட்டு ஜல்லி மற்றும் எம். சாண்ட் ஆகியவற்றைக்கொண்டு செல்ல வேண்டும். உதாரணமாக 6 டயர் கொண்ட லாரிக்கு 18 டன் , 10 டயர் கொண்ட லாரிக்கு 28 டன் , 12 டயர் கொண்ட லாரிக்கு 38 டன் , 16 டயர் கொண்ட லாரிக்கு 48 டன் என்ற விதிமுறைப்படி பாரம் ஏற்ற வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் நடந்து கொள்ள வேண்டும். உரிய அனுமதி சீட்டுக்கள் , ஆவணங்கள் உள்ளிட்டவற்றை வைத்திருக்க வேண்டும் என்று அறிவு றுத்தப்பட்டது. கூட்டத்தில் திருப்பூர் கனிமவள வருவாய் ஆய்வாளர் சிவசுப்பிரமணியம் , பல்லடம் சப் – இன்ஸ்பெக்டர் சீனிவாசன் , மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் , கல் குவாரி மற்றும் கிரசர் உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.