Uncategorizedகாவல்துறை விழிப்புணர்வு

நீலகிரி மாவட்டம் காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியின் கண்கொள்ளாக் காட்சி!

நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பாக சாலை பாதுகாப்பு வார விழா முன்னிட்டு உதகை பிங்கர் போஸ்ட் முதல் லவ்டேல் சந்திப்பு வரை தலை கவச விழிப்புணர்வு மற்றும் இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றது. இந்த சாலை விழிப்புணர்வு பேரணியை

நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்து

இருசக்கர வாகனத்தை ஓட்டி பேரணியில் கலந்து கொண்டார். இந்த சாலை விழிப்புணர்வு பேரணியில்

கோவை மாவட்டத்திலிருந்து உயிர் அமைப்பு சார்பில் இருந்து மூன்று இருசக்கர வாகன கிளம்புகளில் இருந்து 40க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் இருந்து 80 க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்து கொண்டனர்.

சாலை போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி முடிவடைந்த லவ்டேல் சந்திப்பில் தலைக்கவசம் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல்துறை சார்பாக இலவசமாக தலைக்கவசம் கொடுத்து இருசக்கர வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம் எவ்வளவு முக்கியமானது என்பதை எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த சாலை போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உதகை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் நவீன் குமார் கலந்து கொண்டார்.

Related Articles

Back to top button