காவல் செய்திகள்

நூதன முறையில  பல கோடி ரூபாய் மோசடி செய்த பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வரும் உல்லாச ராணிக்கு உடந்தையாக செயல் படும் உடுமலை காவல் உட்கோட்ட காவல்துறையினர்!
நடவடிக்கை எடுப்பாரா திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!? 

நூதன முறையில  பல கோடி ரூபாய் மோசடி செய்த பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வரும் உல்லாச ராணிக்கு உடந்தையாக செயல்படும்

உடுமலை காவல் உட்கோட்ட காவல்துறையினர்!
நடவடிக்கை எடுப்பாரா திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!? 

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வெங்கடேஸ்வரா மில் எஸ் வி புரம் 1/421 சேர்ந்த பொன்னுச்சாமி என்பவரது மகன் ராமகிருஷ்ணன்( வயது 65) சென்டரிங் வேலை செய்து வந்துள்ளார்.இவரது மனைவி கண் பார்வை இல்லாதவர். இவருக்கு உடுமலைப்பேட்டை மடத்துக்குளம்  சேரன் நகர் அருகே கார்த்திக் நகரில் 6 சென்ட் வீட்டுமனை இடம் இருந்துள்ளது. இந்த இடத்திற்கும் குடியிருக்கும் இடத்திற்கும் தூரமாக இருப்பதால் இந்த இடத்தை விற்க முன்வந்துள்ளார்.
அப்போது  சிவசக்தி காலனி கவுன்சிலர் நாகமாணிக்கம்,மற்றும்  பாலு கவிதா ஆகியோரிடம் இடத்தை விற்று வீடு வாங்க வேண்டும் எனக் கூறியுள்ளார். உடனே மூவரும் ராமகிருஷ்ணனை அழைத்துக் கொண்டு
திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம்

உடுமலை அய்யலூர் மீனாட்சி நகர் சேர்ந்த கதவு எண் 4/988 முகவரியில் வசிக்கும் ஜி. கௌதம் பிரபுவின் மனைவி நந்தன மங்கை.

உடுமலை கச்சேரி சாலையில் ஆதித்யா என்ற பெயரில் இ சேவை மையத்திற்கு சென்றுள்ளனர்.

அங்கு நந்தன மங்கையிடம் ராமகிருஷ்ணனை அறிமுகப்படுத்தி உள்ளனர். அதன் பின்பு ராமகிருஷ்ணன் உடுமலை தாந்தோணி கிராமம் கார்த்திக் நகரில் பிளாட் நம்பர் 137/138 ஆகிய இரண்டு  வீட்டுமனை மொத்தம் 2619 சதுரடி  பாதையுடன் 6 சென்ட் (3861/2013) இல் வாங்கி இருப்பதாகவும் எங்க வீட்டு மனையை விற்று தனி  வீடு ஒன்று வாங்க வேண்டும் என்றும்  நந்தன மங்கையிடம் கூறியுள்ளனர். அதற்கு  தனக்கு சொந்தமான வீடு ஒன்று இருப்பதாகவும் அந்த வீடு கணக்கம்பாளையம் தாண்டக் கவுண்டம்பட்டி தோட்டத்தில் உள்ள அமுத ராணி பயணிகள் பேருந்து நிறுத்தத்தின் தென்புறத்தில் கதவு எண் 49 கொண்ட வீடு உள்ளதாகவும் அந்த வீட்டின் விலை 50 லட்சம் என நந்தன மங்கை ராமகிருஷ்ணன் மற்றும் அவருடன் வந்தவர்களுடன் கூறியுள்ளார். உடனே அந்த வீட்டைக் காண்பிக்க நந்தனம் அங்கே ராமகிருஷ்ணன் மற்றும் அவருடன் வந்தவர்களை அழைத்துச் சென்று வீட்டை காண்பித்துள்ளார். உடனே அந்த வீட்டை வாங்க ராமகிருஷ்ணன் முடிவு செய்து 6 சென்ட் நிலத்தை விட்டுத் தரும்படி நந்தன மங்கையிடம் கூறியுள்ளார். அதற்கு நந்தனம் அங்கே என்னிடம் அந்த இடத்தை வாங்குவதற்கு பார்ட்டி இருப்பதாக கூறியுள்ளார்.
அதன் பின்பு வீட்டை வாங்கிக் கொண்டால் உங்களது 6 சென்ட் நிலத்தை 23 லட்சத்திற்கு  விற்று அந்தப் பணத்தை நான் எடுத்துக்கொண்டு உங்களுக்கு இந்த வீட்டை  எழுதிக் கொடுக்கிறேன் என நந்தனமங்கை ராமகிருஷ்ணன் இடம் கூறியுள்ளார். அதன் பின்னர் உடுமலைப்பேட்டை வக்கீல் நாகராஜ் வீதியில் அலுவலகம் வைத்து நடத்தி வரும்

வழக்கறிஞர் எம் மன்மத ராஜிடம் ராமகிருஷ்ணனை அறிமுகப்படுத்தி உங்களிடத்தை இவர் தான் வாங்கிக் கொள்கிறார் அந்தப் பணத்தை நான் பெற்றுக் கொண்டு என்னுடைய வீட்டை உங்களுக்கு பதிந்து கொடுக்கிறேன் என நந்தனமங்கை கூறியதை
நம்பி ராமகிருஷ்ணன் அந்த ஆறு சென்ட் நிலத்தை நந்தன மங்கை கூறியது போல்

கணியூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் 02/05/2023 அன்று ஆவண எண் 1683/2023 /மற்றும் 1684/2023. இரண்டு ஆவணங்களாக மன்மத ராஜுக்கு பதிவு செய்து கொடுத்துள்ளார்.

அதன்பின்பு நந்தனமங்கை கூறியது போல் அவர் காட்டிய வீட்டை ராமகிருஷ்ணனுக்கு  பத்திரப்பதிவு செய்து கொடுக்க ஒன்பது லட்சம் ரூபாய் ராமகிருஷ்ணனிடம் நந்தனமங்கை பெற்றிருக்கிறார் . ஆனால் அதன் பின்பு இரண்டு மாதங்கள் ஆக 32 லட்சம் ரூபாய் பணத்தையும் தராமல்  இரண்டு மாதங்களாக நந்தன மங்கை ஏமாற்றி வந்துள்ளார்.
அதன் பின்பு வக்கீல் மன்மத ராஜு தன் பெயரில் உள்ள கிரைய ஒப்பந்தந்ததை கணியூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று ரத்து செய்து விடுகிறார்.


அதன் பின்பு சம்பத்குமார் பெயரில் பதிவு செய்து கொடுக்குமாறு நந்தன மங்கை ராமகிருஷ்ணனிடம் கூறியுள்ளார்.உடனே சம்பத்குமார் பெயரில் பத்திரப் பதிவு செய்து கொடுத்துள்ளார் ராமகிருஷ்ணன்.அதன் பின்பு  நந்தனமங்கை ராம கிருஷ்ணனுக்கு வீட்டையும் பதிவு செய்து தரவில்லை பணத்தையும் தராமல் காலதாமதம் செய்து வந்துள்ளார்.
தொடர்ந்து நந்தன அதன்பின்பு நந்தன மங்கை க்கு  தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது தொலைபேசி அழைப்பை எடுக்காமல்   இருந்ததால் ராமகிருஷ்ணன் நந்தன மங்கை ஈ சேவை மையத்திற்கு ராமகிருஷ்ணன் சென்று பார்த்த போது நந்தன மங்கையின் இ சேவை மையம் பூட்டி இருந்துள்ளது. அதன் பின்னர் அக்கம் பக்கத்தில் விசாரித்தால் நந்தனமங்கை எங்கே இருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. ஐந்து மாதத்திற்கு பின்பு 13/12/2023 அன்று உடுமலைப்பேட்டை நகர் காவல் நிலையத்தில் ராமகிருஷ்ணன் நிலத்தை எழுதி வாங்கிக்கொண்டு பணத்தை மோசடி செய்து விட்டதாக புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகாரின் படி முதல் தகவல் அறிக்கை( FIR) கொடுத்து உடுமலை நகர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.

அப்போது வழக்கறிஞர் மன்மதராஜ்
தன் பெயரில் பதிவு செய்த பத்திரத்தை சார் பதிவாளர் அலுவலகத்தில் சென்று நிறைய ஒப்பந்தத்தின் படி நான் செட்டில்மெண்ட் செய்யாததால் இந்த பத்திரப்பதிவைகேன்சல் செய்து கொடுக்கும்படி சார் பதிவாளர் அலுவலகத்தில் கூறி அவர் பெயரிலிருந்து ப
பத்திரத்தை கேன்சல் செய்துவிட்டதாக வழக்கறிஞர் மன்மத ராஜா காவல்துறையில் கூறியுள்ளார்.
அதன் பின்னர் நந்தன மங்கையை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை செய்துள்ளனர். அப்போது நந்தனமங்கை கூறியது நான் 1/06/2023 ஒரு வீட்டை ராமகிருஷ்ணனுக்கு பதிவு செய்யாத கிரைய ஒப்பந்தம் போட்டு கொடுத்தேன் என்றும் 26/08/2023 அந்த வீட்டை ராமகிருஷ்ணனுக்கு பத்திரப்பதிவு செய்து கொடுக்கவில்லை என்றும் அதற்கு காரணம் அந்த வீட்டில் சர்வே நம்பரில் ராமகிருஷ்ணன் வில்லங்கம் சான்றிதழ் சரிபார்த்த போது அதில் மூன்றாவது நபர் பாலகிருஷ்ணன் என்ற பெயர் இருந்தது தெரிய வந்தது. அதனால் ராமகிருஷ்ணனின் ஆறு செண்டு வீட்டு மனைக்கான 23 லட்சத்து 40 ஆயிரம் மற்றும் கையில் வாங்கிய 9 லட்சம் ஆக மொத்தம் 32 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் தற்போது 40 ஆயிரத்தை ரொக்கமாக கையில் கொடுத்து மீதமுள்ள 32 லட்சத்தை 2/11/2023 அன்று கொடுத்துவிடுகிறேன் அதற்கு ஈடாக நந்தனமங்கை வங்கியின் காசோலை கொடுக்கிறேன். நான் சொல்லும் தேதியில் பணத்தை திருப்பிக் கொடுக்காவிட்டால் வங்கி காசோலையை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் சட்டப்படி என் மீது நடவடிக்கை எடுக்கலாம் என

20ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் எழுதிக் கொடுத்து உள்ளதாக நந்தனமங்கை காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். ஆனால் இதையெல்லாம் கேட்டுக்கொண்ட காவல் துறையினர் அதற்கான ஆவணங்களையும் ராமகிருஷ்ணனிடம் பெற்றுக் கொண்டு தற்போது  ஆறு மாதங்கள் ஆகியும்  32 லட்சம் பணத்தை மோசடி செய்து ஏமாற்றிய நந்தன மங்கையை  காவல்துறையினர் கைது செய்யாமல் மோசடி செய்த நபர்களுக்கு உடந்தையாக செயல்படுவதாக தற்போது அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட ராமகிருஷ்ணன் இடம் கேட்டபோது அவர் பலமுறை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அதன் பின்பு திருப்பூர் மாவட்ட ஆட்சியாளரிடம் புகார் கொடுத்துள்ளேன் என்றும் தமிழக முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் கொடுத்தும் இதுவரை இடத்தை நூதன முறையில்  எழுதி வாங்கிக் கொண்டு பணத்தை மோசடி செய்த நந்தன மங்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனையுடன் தெரிவித்தார். அதன் பின்பு நந்தனமங்கை இ சேவை மையம் நடத்திய பகுதியில் உள்ள ரியல் எஸ்டேட் நடத்துபவர்களிடம் இது சம்பந்தமாக புலனாய்வு மேற்கொண்டது அவர்கள் அதிர்ச்சி தரும் தகவல்களை கூறினார்கள். அது என்னவென்றால் நந்தனமங்கை இதுபோன்று பல இடங்களை எழுதி வாங்கிக்கொண்டு பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக கட்சி தகவலை தெரிவித்தார்கள்.
அதில் முக்கியமாக
மருள்பட்டியை சேர்ந்த திருமலைசாமியின் ஒரு ஏக்கர்  நிலத்தை செட்டில்மெண்ட் செய்து தருவதாக கூறி  தனது பெயரில் மாற்றிக் கொண்டு பல கோடி ரூபாய் மோசடி செய்ததாகவும் அதிர்ச்சி தகவல் தெரிவித்தனர். அது மட்டுமல்லாமல் உடுமலைப்பேட்டை வேலன்நகரை சேர்ந்த சுப்புலட்சுமி வயது72 ஏமாற்றி 30 பவுன் நகை வீடு மற்றும் நிறுவனத்தின் ஒரு பங்கை நந்தன மங்கை தனது பெயரில் மாற்றிக்கொண்டார் இதற்கு வக்கீல் மன்மத ராசா உடந்தையாக இருந்தார் என்றும் அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர்.
குடிமங்கலத்தை சேர்ந்த சதாசிவம் மற்றும் ராணி இவர்கள் இருவரது நிலத்தை தனது பெயரில் மாற்றிக் கொண்டு அதிக பணம் கொடுத்தால் மட்டுமே திருப்பித் தருவதாக நந்தனமங்கை  கூறி மோசடி செய்ததாகவும்
இதற்கு பின்புலமாக உடந்தையாக வழக்கறிஞர் மன்மத ராஜ் இருக்கிறார் என்றும் காவல்துறையினருக்கு கொடுக்க வேண்டியதை வழக்கறிஞர் மன்மத ராஜ் மூலம் நந்தனமங்கை பல லட்ச ரூபாய் உடுமலை காவல் உட்கோட்ட காவல்துறையினருக்கு செட்டில்மெண்ட் செய்து வருவதால்
பல கோடி ரூபாய் நில மோசடி செய்துள்ள நந்தன மங்கையை உடுமலை காவல் உட்கோட்ட காவல்துறையினர் மற்றும் உடுமலை நகர் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள் என்றும் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் நந்தன மங்கையை காவல்துறையினர் கைது செய்ய நீதிமன்ற உத்தரவும் இருந்தும் உடுமலை காவல் உட்கோட்ட காவல்துறையினர் நந்தன மங்கையை கைது செய்ய தயங்குகிறார்கள் என்றால் எல்லாமே பணம்தான். காவல் நிலையங்களில் லஞ்சம் வாங்கிக் கொண்டு பாதிக்கப்பட்ட நபர்களுக்கு எதிராக மோசடியில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமாக செயல்பட்டு திமுக ஆட்சிக்கும் கட்சிக்கும் உள்ள நற்பெயரை கலங்கப்படுத்தும் வேலையில் ஒரு சில கருப்பு ஆடுகள் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள் என்பது தான் நிதர்சனம்.
ஆகவே தமிழக முதல்வர் தனிப்பிரிவுக்கு வரும் புகார்கள் அனைத்தையும் நேர்மையான அதிகாரிகள் மூலம் உண்மைத் தன்மை கண்டறிந்தால் மட்டுமே காவல்துறையில் உள்ள ஒரு சில கருப்பு ஆடுகளை கண்டுபிடித்து களை எடுக்க முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
பொறுத்திருந்து பார்ப்போம் திருப்புர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நடவடிக்கையை.

கூலிப்படைகளை வைத்து
பெண் தோழியை காரில் கடத்தி 20 பவுன் நகையை  கொள்ளையடித்து திருப்பூர் பப்பிஸ் நட்சத்திர ஹோட்டலில் ஓட்டுனர் ரவியுடன் உல்லாசமாக இருந்த நந்தன மங்கை!

உடுமலையில் உள்ள நந்தன மங்கையின் இ சேவை மையத்திற்கு பழனியை சேர்ந்த ஒரு
ஒரு பெண் வந்துள்ளார்.
அவரைப் பற்றி விசாரித்து அவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். அதன் பின்பு  இரண்டு பேரும் நண்பர்களாக இருந்து வந்த நிலையில் பழனியைச்  சேர்ந்த பெண் கழுத்தில் அணிந்து இருந்த நகைகள் மீது ஒரு பார்வை இருந்துள்ளது.
அந்தப் பெண் கழுத்தில் அணிந்திருந்த நகைகளை அபகரிக்க திட்டம் தீட்டிய நந்தனமங்கை
கடந்த தீபாவளிக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு பழனியைச் சேர்ந்த பெண் தோழிக்கு போன் செய்து பட்டாசு மற்றும் ஸ்வீட் இருப்பதாகவும் உடுமலையில் உள்ள இ சேவை மையத்திற்கு வந்து அதை வந்து வாங்கிச் செல்லுமாறு நந்தன மங்கை கூறியுள்ளார்.

அதற்கு பழனியைச் சேர்ந்த பெண் தோழி நான் பேருந்தில் வந்து பேருந்து நிலையத்தில் காத்திருக்கிறேன் அங்கு வந்து கொடுத்தால் அப்படியே அதைப் பெற்றுக் கொண்டு பழனிக்கு பேருந்தில் சென்று விடுகிறேன் என்று கூறியுள்ளார். அதற்கு சரி என்று நந்தனம் மங்கை வரவழைத்துள்ளார்.
இதை நம்பி பழனியில் இருந்து பேருந்தில் அந்தப் பெண் தோழி உடுமலைப்பேட்டைக்கு சென்று உடுமலை பேருந்து நிலையத்தில் காத்திருந்துள்ளார். ஆனால் நந்தனமங்கை வரவில்லை அவருடைய வாகன ஓட்டுநர்ரவி  என்ற ரவிசெந்திரன் ஸ்கூட்டியில் உடுமலை பேருந்து நிலையத்துக்கு வந்து பழனியில் இருந்து வந்த பெண்ணிடம்  உங்களை சிவ சக்தி காலனியில் உள்ள நந்தன மங்கை வீட்டிற்கு அழைத்து வர சொன்னார் என்று இரண்டு சக்கர வாகனத்தில் அந்த பெண்ணை ஏற்றிக்கொண்டு சிவசக்தி காலனி அருகே மெயின் ரோட்டில் அன்னப்பூரணி என்ற பெண்ணின் டெய்லரிங் காத்திருக்குமாறு கூறிவிட்டு நந்தன மங்கையின் ஓட்டுனர் சென்று விட்டார்.  ஒரு மணி நேரத்திற்குப் பின்பு டெய்லரிங் கடையில் காத்திருந்த பெண் தோழியிடம் நந்தனம் மங்கை வந்து இரவு 7 மணிக்கு மேல் தான் பட்டாசு கிடைக்கும் என்றும் அதுவரை காத்திருந்து பட்டாசை வாங்கி செல்லுமாறு நந்தன மங்கை கூறியதை நம்பி பழனியில் இருந்து வந்த பெண் தோழி காத்திருந்துள்ளார். அதன்  பின்பு காந்தி நகரில் பட்டாசு இருப்பதாகவும் காரில் சென்ற அந்த பட்டாசை வாங்கி உங்களை பழனியில் காரில் கொண்டு போய் விடுகிறேன் என்று கூறியதை நம்பி நந்தன மங்கையின் காரில் ஏறி சென்றுள்ளனர்.
உடுமலை பழனி பைபாஸ் சாலையில் காரில் சென்ற போது இவர்கள் சென்ற காருக்கு முன்பு பின்பும் இரண்டு கார்கள் வந்து வந்தன மங்கை காரை மரித்து நிறுத்தி அந்த இரண்டு காரில் இருந்து
எட்டு அடியாட்கள் இறங்கி வந்து
நந்தன மங்கை காரில் இருந்த பெண் தோழி கழுத்தில் கத்தியை வைத்து கழுத்தில் அணிந்திருந்த செயின் கையில் அணியும் இந்த வளையல் அனைத்தையும் பிடுங்கிக் கொண்டு சென்று விட்டனர். ஆனால் இரண்டு காரில் வந்தது நந்தன மங்கை யின் அடியாட்கள் தான் என்று நகையை பறிகொடுத்த பெண்மணிக்கு தெரியாது. அதை சாதகமாக பயன்படுத்தி நந்தன மங்கை  இரண்டு காரில் வந்து நகையை பறித்து சென்றவர்கள் எனக்கு யாரும்  தெரியாது என்று அந்த பெண்ணை சமாதானப்படுத்தி நான் எப்படியாவது  உங்கள் நகைக்கான பணத்தை ஏதாவது இடம் விற்று கொடுக்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி அனுப்பி வைத்துள்ளார் . அதன் பின்பு நகைகளை பறிகொடுத்த பெண் வீட்டிற்கு வந்து இரண்டு தினங்களுக்கு பின்பு
இது சம்பந்தமாக உடுமலை காவல் நிலையத்தில் நகையை படித்துச் சென்று விட்டதாக  புகார் கொடுக்கச் சென்றபோது
காவல் நிலையத்தில் இருந்த காவல் ஆய்வாளர் இரண்டு தினங்களுக்கு முன்பு நடந்ததால் நாங்கள் இந்த புகாரை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என கூறி நகையை பறிகொடுத்த பெண்ணை திருப்பி அனுப்பி உள்ளனர்.
அதன் பின்பு நந்தனமங்கை ஒன்றும் தெரியாதது போல் நகையை பறிகொடுத்த பெண்ணிடம் தொலைபேசி தொடர்பு கொண்டு நீங்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த போனீர்களா என்று கேட்டுள்ளார் அதற்கு   நகைக்கான பணத்தை கொடுப்பதாக கூறிய பின் நான் ஏன் புகார் கொடுக்க வேண்டும் என கூறிவிட்டார். ஏனென்றால் நகையை பறித்துச் சென்ற அன்றே காவல் நிலையத்தில் தன்னுடைய வக்கீல் மன்மத ராஜாவை வைத்து காவல் நிலையத்தில் உள்ள காவல் ஆய்வாளர்களிடம் பணம் கொடுத்து நகையை பறித்துச் சென்றதாக பெண் புகார் கொடுத்தால் எடுக்க வேண்டாம் என கூறிவிட்டு வந்துள்ளார் . பல்வேறு புகார்களில் நந்தனமங்கையை காவல்துறையினர் தேடிவந்த நிலையில்
நந்தனமங்கை திருப்பூர் பப்பிஸ் ஹோட்டலுக்கு தன் ஓட்டுநர் ரவி என்ற ரவிசெந்திரணை அழைத்துச் சென்று ரூம் எடுத்து இருவரும் தங்கி இருப்பதாக காவல்துறைக்கு வந்த தகவலில் படி நந்தனம் மங்கை மற்றும் ரதி ஆகிய இரண்டு பேரையும் திருப்பூர் பப்பிஸ் ஓட்டலில் வைத்து காவல்துறையினர் கைது செய்து கோவை சிறையில் அடைத்துள்ளனர்.
ஆனால் பெண் தோழியின் கழுத்தில் இருந்த 20 பவுன் நகையை காரில் கடத்திச் சென்று அடியாட்களை  வைத்து  நூதன முறையில் வழிப்பறி கொள்ளையை அரங்கேற்றிய  நந்தன மங்கை மீது உடுமலை காவல்துறை இதுவரை புகார் கொடுத்த வரை அனைத்து விசாரணை செய்யவில்லை என நகையை பறி கொடுத்த பெண் மற்ற பெண்ணிடம் பேசிய ஆடியோ மூலம் அதிர்ச்சி தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
வழிப்பறிக் கொள்ளை மற்றும் பண மோசடி செய்யும் நபர்களுக்கு உடந்தையாக உடுமலை  நகர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாக உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button