நோயாளிகளே பல மணி நேரம் காக்க வைக்கும் சோழவந்தான் அரசு மருத்துவமனை மருத்துவர்கள்!உரிய நேரத்தில் முறையான சிகிச்சை அளிக்காததால் பல உயிர்கள் பறிபோகும் அவலம் !கண்டும் காணாமல் கடந்து போகும் மதுரை மாவட்ட ஆட்சி நிர்வாகம்!
மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என உறவினர்கள் புகார் தெரிவிக்கின்றனர் சோழவந்தான் அரசு மருத்துவமனை மூலம் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெற்று வரும் நிலையில்மருத்துவமனையில் போதிய மருத்துவ பணியாளர்கள் இல்லாத காரணத்தால் இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு உரிய மருத்துவ வசதி செய்யப்படுவதில்லை என்றும் நோயாளிகளை அடிக்கடி மதுரை அரசு மருத்துவமனைக்கு சிபாரிசு செய்வதாகவும் பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் புகார் தெரிவிக்கின்றனர் இங்குள்ள ஒரு சில மருத்துவ செவிலியர்கள் நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதாகவும் இரவு நேரங்களில் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை காக்க வைத்து முறையாக சிகிச்சை அளிக்கப்படுவதில்லை எனவும் தொடர்ச்சியாக புகார் தெரிவிக்கின்றனர் இதனால் சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது .
அது மட்டுமில்லாமல் வரும் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை மற்றும் உரிய மருந்து மாத்திரைகள் வழங்காததால் அருகில் உள்ள மன்னாடிமங்கலம் மேலக்கால் வாடிப்பட்டி போன்ற அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேடிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது . ஆனால் அன்பு சென்றாலும் அதே பிரச்சினை தான் இரவு நேரங்களில் போதுமான மருத்துவர்கள் இருப்பதில்லை அப்படியே மருத்துவர்கள் இருந்தாலும் நோயாளிகளை கவனிப்பதில்லை. மாறாக செவிலியர்கள் மட்டுமே நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டு ஊசி மருந்து கொடுத்து அனுப்பி விடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டையும் பொதுமக்கள் வைக்கின்றன.
அதற்கு உதாரணமாக 19/09/2024 அன்று காலை சிகிச்சைக்கு வந்த வயது முதிர்ந்த பெண்மணிக்கு முறையாக சிகிச்சை அளிக்காததால் ரத்த வாந்தி எடுத்த நிலையில் மிகவும் ஆபத்தான நிலையில் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின்பு உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார் அதனைத் தொடர்ந்து காலில் அடிபட்டு வந்த இளைஞருக்கு நடக்க முடியாத நிலையில் லேசாக காலில் கட்டு போட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டனர் இவ்வாறு நோயாளிகளை அலட்சியமாக நடத்துவதுடன் முறையான சிகிச்சை அளிக்காததால் இங்கு வரும் நோயாளிகளுக்கு நோய் முற்றி தனியார் மருத்துவமனையை நாடிச் செல்லும் நிலை ஏற்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எது எப்படியோ அரசு மருத்துவமனை என்றாலே ஏழை எளிய சாமானிய மக்கள் நம்பி இருக்கும் மற்றொரு கோயில். கோயிலுக்கு செல்வதை போல் அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களை நம்பி வரும் பொது மக்களை அவமதிக்கும் வகையில் மருத்துவர்கள் நடந்து கொள்வதை இனிவரும் காலங்களில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
ஆகவே பல பேர் உயிரிழப்பதற்கு காரணமாக இருந்த மற்றும் இருக்கும் சோழவந்தான் அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் சீர் கேட்டை மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் உடனடியாக சோழவந்தான் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு போதிய மருத்துவ பணியாளர்களை நியமித்து 24 மணி நேரமும் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டும்.
ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என அண்ணாவின் புகழை நினைவில் கொண்டு மாவட்ட ஆட்சியர் நடப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!