பஞ்சாயத்து கிளார்க் நியமனத்திற்கு 12 லட்சம் ரூபாய் லஞ்சம்!?? அதிர்ச்சித் தகவல்!
மறைக்கப்பட்ட உண்மைகள்.. நாளுக்கு நாள் கசியும் செய்தி…?
கடலூர் மாவட்டம் நல்லூர்
ஒன்றியத்திற்கு உட்பட்ட வரம்பனூர் கிராமத்தில் ஊராட்சி எழுத்தர் பணி 11 லட்டத்தி 80 ஆயிரத்திற்கு விலை
போனதாக மக்கள் மத்தியிலும் பொது இடங்களிலும் பரப்பரப்பாக பேசப்படுகிறது…
சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்வார்களா இல்லை நடவடிக்கை எடுப்பார்களா…..
கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம் வரம்பனூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் காலியாக இருந்த பஞ்சாயத்து உதவியாளர் பணிக்கு தற்போதுள்ள பஞ்சாயத்து ஊராட்சி மன்ற தலைவர் செல்வி அவர்கள் பிரகாஷ் த/பெ செல்வராஜ்
அவர்களிடம் 12 லட்சம் லஞ்சம் பெற்றுக் கொண்டு பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு வந்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் முடிந்தவுடன் ஊராட்சி மன்றங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கு ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் தகுதியான விதவைகள் மற்றும் முன்னால் ராணுவ வீரர்கள் குடும்ப வாரிசுகளுக்கு முன்னுரிமை வழங்கி நியமனம் செய்ய அரசு உத்தரவிட்டது.
ஆனால் கணவரை இழந்த கவிதா என்ற விதவைப் பெண் தனக்கு அந்தப் பணியை ஒதுக்கி தருமாறு கேட்டு இருந்தார் ஆனால் அவரிடம் 5 லட்சம் முன்பணம் பெற்று அந்தப் பணியை கொடுப்பதாக சொல்லி சில காலங்கள் தாமதப்படுத்தி உள்ளார் வரம்பனூர் பஞ்சாயத்து ஊராட்சி மன்ற தலைவர் செல்வி.
அதன்பின்பு பமக கட்சியை சேர்ந்த ஒன்றியத் தலைவர் செல்வி ஆரிய பாலா அவர்கள் வரம்பனூர் ஊராட்சி மன்றத் தலைவரிடம் கணவரை இழந்த சங்கீதா விதவைப் பெண்ணுக்கு உதவியாளர் பணியை கொடுக்குமாறு கேட்டும் பஞ்சாயத்து தலைவர் செல்வி செவிசாய்க்காமல் பிரகாஷ் என்பவரிடம் 12 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு பணி நியமனம் செய்துள்ளார் என்று தகவல் வந்துள்ளது.
இதனால் மனமுடைந்த விதவை கவிதா நீதிமன்றம் வரை சென்றுள்ளதாக தகவல்.
விதவை கவிதாவிடம் வாங்கிய 5 லட்ச ரூபாயை பஞ்சாயத்து தலைவர் செல்வி திருப்பிக் கொடுப்பதாகவும் தகவல் வந்துள்ளது.
எது எப்படியோ தமிழகத்தில் நல்லாட்சி தர வேண்டும் என்பதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் செயல்பட்டுக் கொண்டுள்ளநிளையில் முதல்வர் ஸ்டாலின் பெயரை களங்கப்படுத்தவும் மற்றும் திமுக கட்சியின் பெயரை களங்கப்படுத்த
ஒரு சில மாவட்டங்களில் ஒரு ஒரு சில பேர் எதிர்க் கட்சியில் வேட்பாளராக நின்று வெற்றி பெற்று பதவிக்கு வந்தவர்கள் இதுபோன்று சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகின்ற நிலையில் தமிழக முதல்வர் அவர்கள் தமிழகத்தில் அனைத்து ஊராட்சி மன்றம் ஊராட்சி ஒன்றியம் அலுவலகங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து தவறு செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.