பட்டா வழங்க இரண்டு கோடியே 60 லட்சம் கேட்டதாக விவசாயிகளின் அதிர்ச்சி வீடியோ! நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர் !?
விவசாய நிலத்திற்கு ஏக்கருக்கு இரண்டு லட்சம் லஞ்சம் !
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் பட்டா வழங்க 2 கோடி 60 லட்சம் லஞ்சம் கேட்பதாக செட்டிங்காடு கிராமத்தைச் சேர்ந்த நில உரிமையாளர்கள் ராமநாதன் நாராயணன் பழனிவேல் சக்திவேல் நான்கு பேர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியாளரிடம் புகார்!
திட்டங்காடு கிராமத்தில் வசிக்கும் விவசாயிகள் செட்டியார் கிராமத்தில் சர்வே எண் 26/1 இல் உள்ள 132 ஏக்கர் நிலத்தை 52 பேர் விலைக்கு வாங்கியுள்ளதாகாவும் . அதில் ஐந்து ஏக்கர் நிலத்திற்கு மட்டும் வங்கியில் கடன் இருந்துள்ளதாகவும் கடன் வாங்கிய தொகையை வங்கியில் செலுத்தி ஐந்து ஏக்கர் நிலத்திற்கு பட்டா வாங்கி இருப்பதாகவும் ஆனால் எங்கள் நிலத்திற்கு பட்டா வரவில்லை. என்னவென்று பார்த்தால் 40 வருடமாக அரசு புறம்போக்கு நிலமாகவே இருந்திருக்கிறது. அந்த இடத்தை நாங்கள் வாங்கி இருப்பதாகவும் அந்த இடத்திற்கு பட்டா கேட்டு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஆர்டிஓ மற்றும் வட்டாட்சியர் அவர்களிடம் மனு கொடுத்ததாகவும்
மனுவை பெற்றுக் கொண்டு ஆர்டிஓ விசாரணை செய்ததில் வருவாய்த்துறை நிர்வாகத்தில் குளறுபடி ஏற்பட்டு விட்டதாகவும் அந்த நிலம் உங்கள் நிலம் தான் நீங்கள் வட்டாட்சியாளரிடம் மனு கொடுங்கள் என்று சொல்லி அனுப்பி உள்ளதாகவும் வட்டாட்சியாளரிடம் மனு கொடுத்த பின்பு சிலட்டூர் சரக வருவாய் ஆய்வாளர் பூங்குழலி அவர்களை ஆய்வு செய்ய அனுப்புகிறேன் என்று கூறியதாகவும் உடனே வருவாய் ஆய்வாளர் ஐந்து விவசாயிகளை அழைத்து விசாரணை நடத்தி இடத்திற்கான பத்திரத்தை வாங்கி சரி பார்த்து விட்டு பத்திரத்தின் நகலை பெற்றுக்கொண்டு அலுவலகத்திற்கு நேரில் வர சொல்லிவிட்டு சென்று விட்டார் என்றும்
அதன் பின்பு வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு சென்றோம் அதற்கு அவர் வருவாய் கோட்டாட்சியரை பார்க்க வருவாய் கோட்டாட்சியர் இங்கு 24 அதிகாரிகள் உள்ளனர் . அனைவருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டும் ஆகையால் நீங்கள் வருவாய் ஆய்வாளரை போய் பாருங்கள் என்று சொன்னதால் வருவாய் ஆய்வாளர் அவர்களை சந்தித்து பேசிய போது இந்த நிலத்திற்கு 52 பேர் உரிமையாளர்கள் இருப்பதால் பட்டா வழங்க வேண்டும் என்றால் ஒரு ஏக்கருக்கு இரண்டு லட்சம் வீதம் 136 ஏக்கருக்கு 2 கோடி லட்சத்து 60 லட்சம் கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார். நாங்கள் எந்த வருமானமும் இல்லாமல் இருக்கிறோம் அந்த நிலத்தை பராமரிப்பு கூட செய்ய முடியாமல் இருக்கிறோம் என்றும் நீங்கள் பட்டா வழங்கவில்லை என்றாலும் பரவாயில்லை அந்த பத்திரத்தை திருப்பி கொடுத்துவிடுங்கள் நாங்கள் நீதிமன்றம் செல்கிறோம் என்று கேட்டோம் உடனே எங்களுடைய பத்திரத்தை திருப்பி கொடுத்து விட்ட பிறகு வட்டாட்சியர் எங்களுக்குள் இருந்த ஒரு நபரை அழைத்து நீங்கள் பணம் கொடுத்தால் உங்கள் நிலத்திற்கு மட்டும் பட்டா வழங்குகிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் அவர் இல்லை நாங்கள் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறிவிட்டார் என்றும் தயவுகூர்ந்து எங்களுக்கு 132 ஏக்கருக்கு பட்டா வழங்கும்படி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளதாக பாதிக்கப்பட்ட நபர்கள் கூறிய அதிர்ச்சி வீடியோவால் தற்போது அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.