பணம் இருந்தால் போலி ஆவணங்கள் மூலம் பட்டா வாங்கலாம்!
வேடசந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தின் அவல நிலை!
நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்!?
பணம் இருந்தால் பட்டா வாங்கலாம்!
வேடசந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தின் அவல நிலை! வட்டாட்சியர் மற்றும் சர்வேயர் மீது
நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்!?
நத்தம் நிலம் என்பது தமிழக வருவாய்த் துறை, கிராமப்புற நிலங்கள் தொடர்பான ஆவணங்களில் பயன்படுத்தப்படும் சொற்களில் ஒன்றாகும். நத்தம் என்ற சொல்லுக்கு குடியிருப்பு பகுதி எனப்பொருள். கிராம நத்தம் என்றால், கிராமத்தில் இருக்கும் குடியிருப்பிற்கு என ஒதுக்கப்பட்ட நிலமாகும். நத்தம் புறம்போக்கு நிலம் எனில், நத்தம் குடியிருப்பு பகுதியில் இருக்கும் புறம்போக்கு நிலம் ஆகும்.
தனிநபர்கள் தங்களது அனுபவத்தில் இருந்து வரும் அந்த குடியிருப்பு பகுதிகள் என அனைத்தியுமே வரைபடம் தயாரித்து, அவர்களுக்கென்று நத்தம் பட்ட வழங்கப்பட்டு இருந்தது. அதன்படி நத்தம் நிலவரத்தை கீழ் தங்களது அனுபவத்தில் வைத்திருக்கும் அந்த குடியிருப்பு பகுதிகளுக்கு, நத்தம் பட்டா, நத்தம் குடியிருப்பு பட்டா, நத்தம் தோராய பட்டா மற்றும் நத்தம் தூய பட்டா வழங்கப்பட்டு இருந்தது.
நத்தம் நிலவரத்தை கீழ் அளவீடு செய்யும்பொழுது அரசுக்கு சொந்தமான குடியிருப்பு பகுதிகளை நத்தம் புறம்போக்காக வகைப்பாடு செய்து புல எண்களில் பதிவு செய்து வைத்திருந்தனர்.
அவ்வாறு நத்தம் புறம்போக்கு இடங்களில் சமீபகாலத்தில் நீங்கள் அனுபவம் செய்து வரும்பொழுது, அந்த இடத்தில் குடியிருப்புகளை கட்டி நீங்கள் வசித்து வரும்பொழுது, தமிழக அரசு அந்த இடத்திற்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்கிவருகிறது. அதன்படி நத்தம் என்றாலே பொது மக்கள் குடியிருப்பு என்பதும். அதுவே அரசுக்கு சொந்தமான இடமாக இருந்தால் நத்தம் புறம்போக்காக வகைப்படுத்தப்படும்.
அந்த நத்தம் பகுதிகளில் அரசுக்கு சொந்தமான பொது பாதைகள் இருக்கும், பொது மக்கள் பயன்படுத்தப்படும் பொது இடங்கள் மற்றும் கோயில் நிலங்கள் மற்றும் ஊராட்சிக்கு என்று தனியாக வகைப்படுத்தப்பட்ட இடங்கள் என அனைத்துமே இந்த நத்தம் நிலவர திட்டம் கீழ் வரைபடம் தயாரித்து மற்றும் நில அளவீடு செய்யப்பட்டிருக்கும்.
நத்தம் புறம்போக்கு இடத்தில் பட்டா வைத்திருப்பவர்களுக்கு அந்த இடத்தை வட்டாட்சியர் மற்றும் சர்வேயர் அளவீடு செய்து தரவேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய மாவட்டமான
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக வேடசந்தூர் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 63 வருவாய் கிராமங்கள் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.
இந்த நிலையில்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் போலி ஆவணங்கள் மூலம்
வட்டாட்சியர் சரவணக்குமார் மற்றும் சர்வேயர் கலைச் செல்வி.கிராம நிர்வாக அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் பல லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு முறைகேடாக பட்டா வழங்கியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆர்டிஓ டிஆர்ஓ மற்றும் மண்டலத் துணை வட்டாட்சியர் சர்வேயர் ஆகியோருக்கு இது சம்பந்தமாக புகார் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த புகாரில் தெரிவித்திருப்பது
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் வடமதுரை கிராம பழைய புல எண் 1452 /1 புதிய புல எண் 2387/5 க்கு ஹெக்டர் 0.1.98 ஏர் முழுவதும் பட்டா எண் 2006 ஆக உள்ளது.
2387/5 B இல் 0.0.10 ஆக பட்டா எண்
559 ஆக பட்டா இருக்கிறது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை டவுன் மாரியம்மன் கோயில் தெரு கதவு எண் 32 இல் வசித்து வந்து தற்போது வேடசந்தூர் தாலுகா வடமதுரை டவுன் நேதாஜி பள்ளி பின்புறம் களத்து வீடு என்கிற முகவரியில் வசிக்கும் சுப்பையா நாயுடு அவர்களின் மனைவி தனபாக்கியம் நத்தம் புறம்போக்கு இடத்தில் 30 வருடங்களுக்கு மேல் நத்தம் நிலவரித் திட்டத்தின் கீழ் வேடசந்தூர் தனி வட்டாட்சியர் அவர்களால் அவரது பெயருக்கு சர்வே எண் மனை வரி பட்டா எண்2387/5 பட்ட நம்பர் 559 கடந்த 1992 இல் தனிப்பட்ட வழங்கப்பட்டுள்ளது .
இந்த நிலையில் 18 /10 1993 ஆம் ஆண்டு ஒரு மோசடியான போலியான ஒரு கிரைய ஆவணத்தினை செய்து கிரையம் எண் 57/ 1993 ம ( காத்தப்பன் மனைவி கனகாம்பரம் )மற்றும் (மாணிக்கம் மனைவி புஷ்பா ) ஆகிய இரண்டு பேர் பெயர் சேர்த்து அதே சர்வே நம்பரில் மூன்று பேருக்கு பட்டா வழங்கியுள்ளார்.
அதன் பின்பு 31/05/2024 ஆம் தேதி போலி ஆவணங்கள் மூலம்
மாணிக்கம் மனைவி புஷ்பா பெயரில் வேடசந்தூர் வட்டாட்சியர் பட்டா வழங்கியுள்ளார். இந்த பட்டா வழங்கியதற்கு பல லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கி கொண்டு பட்டா வழங்கியுள்ளதாக திண்டுக்கல் மாவட்ட DRO மற்றும் RDO ஆகியோர்களுக்கு வழக்கறிஞர் மூலம் புகார் அனுப்பப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது சம்பந்தமாக
வேடசந்தூர் பகுதி சமூக ஆர்வலர்கள் இடம் விசாரித்த போது கடந்த அதிமுக ஆட்சியில் வேடசந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் ஊழல் முறைகேடு நடப்பதாக தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் கொடுத்ததன் பெயரில் 2020 ஆண்டு நவம்பர் மாதம் அப்போது இருந்த திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. நாகராஜன் தலைமையிலான போலீஸார், வேடசந்தூர் தாலுகா அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது வட்டாட்சியராக இருந்த லதா உள்ளிட்ட வருவாய்த் துறை அலுவலர் களிடம் விசாரணை நடத்தினர். கணக்கில் வராத ரூ.46 ஆயிரத்தைக் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
2021 திமுக ஆட்சி வந்த பின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்திலும் ஒரு வருடம் மட்டுமே பட்டா வழங்குவதற்கு பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர். ஆனால் காலப்போக்கில் அதையெல்லாம் கைவிட்டு விட்டு தற்போது மீண்டும் போலி ஆவணங்கள் மூலம் பட்டா வழங்கி வருவதாகவும் திண்டுக்கல் மாவட்ட DRO மற்றும் RDO ஆகியோர்களுக்கு தெரிந்தே லஞ்சம் வாங்கிக் கொண்டு பட்டா வழங்கப்பட்டு வருகிறது என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.குறிப்பாக வேடசந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணம் இருந்தால் யார் பெயரிலும் போலி ஆவணங்கள் தயாரித்து பட்டா வாங்கலாம் என்றும் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.
குறைந்தது மூன்று சென்ட் இடத்துக்கு பட்டா வழங்க பத்தாயிரம் ரூபாய்
5 சென்ட் இடத்திற்கு வழங்க 25ஆயிரம்
25 சென்ட் நிலத்திற்கு பட்டா வழங்க
அந்த நிலத்தில் மதிப்பிற்கு ஏற்ப லட்சங்கள்
ஒரு ஏக்கருக்கு மேல் பட்டா வழங்க குறைந்தது ஒரு லட்சத்திலிருந்து 5 லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டு வேடசந்தூர் வட்டாட்சியர் மற்றும் சர்வேயர் பட்டா வழங்கி வருவதாகவும் போலி ஆவணங்கள் மூலம் பட்டா வழங்கப்பட்டு வருவதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்க்கு தொடர்ந்து புகார் வழங்கப்பட்டு வந்ததாகவும் ஆனால் அது சம்பந்தமாக எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
வேடசந்தூர் வட்டாட்சியர் மற்றும் சர்வேயர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பல கோடி ரூபாய்க்கு வருமானத்திற்கு அதிகமாக பினாமி பெயர்களில் சொத்து சேர்த்து வைத்துள்ளதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். இதன் உண்மைத்தன்மையை அறிய லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையிட்டால் மட்டுமே சமூக ஆர்வலரின் குற்றச்சாட்டிற்கு ஒரு நிரந்தர தீர்வு எட்டப்படும் என்பதுதான் நிதர்சனம். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் லஞ்ச ஊழல் முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்காமல் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மௌனம் காத்து வருவதற்கு காரணம் என்ன என்று தெரியவில்லை என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடம் சந்தேகம் எழுந்துள்ளது! எது எப்படியோ திமுக ஆட்சிக்கும் கட்சிக்கும் உள்ள நற்பெயரை களங்கப்படுத்தும் வகையில் அரசு அலுவலகங்களில் உயர் அதிகாரிகள் என்ற பெயரில் ஒரு சில கருப்பு ஆடுகள் கடந்த அதிமுக ஆட்சியில் இருந்து தொடர்ந்து ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறார்கள். நேர்மையான அதிகாரிகளை நியமித்து ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டு வரும் ஒரு சில கருப்பு ஆடுகளின் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பொதுமக்கள் அச்சமின்றி அரசு அலுவலகங்கள் குறிப்பாக வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு தங்களுடைய கோரிக்கை மனுக்களை கொடுத்து நிவாரணம் பெற முடியும் என்பதை அனைத்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாக உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் வருவாய் வட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியர் மொ.நா.பூங்கொடி,
19.06.2024 அன்று வேடசந்துார் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.