ஆன்மீகத் தளம்

பதவி உயர்வுக்காக கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோவிலின் அரிய வகை காராம் பசு அரசியல் கட்சி முக்கிய பிரமுகருக்கு சன்மானமாக வழங்கப்பட்டதா!? இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் அமைச்சர் நடவடிக்கை எடுப்பார்களா!?

பதவி உயர்வுக்காக சன்மானமாக வழங்கப்பட்ட விலை மதிப்பில்லாத புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோவில் காராம் பசு!? மாவுணம் காக்கும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்! நடவடிக்கை எடுப்பாரா இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர்!

புதுக்கோட்டை திருக்கோகர்ணம். பிரகதாம்பாள் திருக்கோவிலின் விலை மதிப்பில்லாத அரிய வகை தெய்வீக அம்சம் கொண்ட புனிதமான காராம் பசு காணாமல் போன மர்மம் என்ன!?

புதுக்கோட்டை திருக்கோகர்ணம். பிரகதாம்பாள் திருக்கோவிலின் விலை மதிப்பில்லாத அரிய வகை தெய்வீக அம்சம் கொண்ட புனிதமான காராம் பசு காணாமல் போன மர்மம் என்ன!?

புதுக்கோட்டை திருக்கோகர்ணம்    பிரகதாம்பாள் உடன் உறை ஆலயம் வரலாற்று சிறப்புகள் கொண்ட கல் குடைவரை கோவிலாகும். இந்த ஆலயத்திற்கென்று தொண்டைமான் மன்னர்கள் மாடுகளை பராமரித்து வருவதற்காகவும் சுவாமிக்கு பால் அபிசேகம் செய்வதற்கும் ஆலயத்தின் நடை வாசல் திறப்பதற்காக பக்தர்கள் காராம் பசுவை தானமாக வழங்குவது வழக்கமாக இருந்து வருமிறது.கோவில்   நிர்வாகம் ஊழியர்கள் கௌசாலையில் பசுக்களை பராமரிக்க ஊழியர்களை நியமித்து அந்த ஊழியர்கள் பராமரித்து வந்த நிலையில் கோவில் கும்பாபிஷேகம் நடந்த போது எட்டாவது பிறந்த காராம் பசுவை வைத்து அன்று சிறப்பு வழிபாடு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.அந்த எட்டாவது காராம் பசு வின் தாய் அரியவகை தெய்வீக அம்சம் கொண்ட நாட்டு காராம் பசு. அந்த பசு எட்டு கன்றுகுட்டிகளையின்று அதில் எட்டாவது கன்றுகுட்டி வெள்ளிகிழமை பிறந்ததால் அந்த காராம் பசு கன்று குட்டியின் காது இரண்டிலும் மச்சத்துடன் தெய்விக அம்ச லக்கணத்தில் பிறந்ததால் தான் கடந்த முறை நடந்த ஆலயத்தின் கும்பாபிஷேகத்திற்கு எட்டாவது பிறந்த காராம் பசுவை வைத்து வெகு சிறப்பாக நடத்தினார்கள். அந்த  அரிய வகை பசு

சில வருடங்களில் கன்றுகுட்டி ஒன்றை இன்றெடுத்தது. ஆலயத்தின் தேரோடும் ஐந்து வீதிகளிலும் தினமும் சுற்றி வந்து கொண்டிருந்த அந்த பசுவை அப்பகுதி மக்கள் செல்ல பிள்ளையாக அழைத்து ஒவ்வொரு வீடுகளிலும் பிஸ்கட் பிரட் வெள்ளம் அரிசி போன்ற உணவுகளை கொடுத்து வந்துள்ளனர். டி கடைகளில் அதிகாலையில் செய்த இனிப்பு அப்பம் என்றல் இந்த பசுவிற்க்கு மிகவும் பிடித்த ஒன்று என்கின்றனர். தினமும் மாமூல் வாங்க வந்து விட்டாயா என்று செல்லமாக கேட்டால் தலையை ஆட்டி கழுத்தில் கட்டப்பட்ட மனி ஓசையை எழுப்புமாம். சில நாட்களாகவே இந்த அரிய வகை பசு யார் வீட்டில் இருந்தாலும் அவர்கள் செல்வ செழிப்போடு அவர்களுக்கு இருந்த பிரச்சனை எல்லாம் தீர்ந்து விடும் என கேரளா மாந்திரீகவாதிகள் சொன்னதாக செய்திகள் பரவின.அதனால் இந்த விலைமதிப்பில்லாத தெய்வீக பசுவை எப்படியாவது தங்கள் வீட்டில் வைத்து வளர்க்க வேண்டும் என்று பணம் பலம் படைத்த அரசியல் கட்சி முக்கிய பிரமுகர்கள் திட்டம் தீட்டி வந்ததாகவும் அப்பகுதி மக்கள் பரவலாக பேசத் தொடங்கினர்.

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவில்
செயல் அலுவலர்

அரசியல் கட்சியில் பெரும் பதவி பணம் பெயர் புகழ் அடைவதற்காக பணம் பலம் கொண்ட அரசியல் கட்சி பிரமுகருக்கு கோவில் நிர்வாக அதிகாரியிடம் ரகசியமாக பசுவை கேட்டு வாங்கியதாதாவும் அதற்காக கோவில் நிர்வாக அதிகாரிக்கு பெரும் தொகையை வழங்கி உள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வந்துள்ளது. இது சம்பந்தமாக அப்பகுதி மக்கள் கோவில் நிர்வாக அதிகாரிக்கு பதவி உயர்வு வருவதால் அரசியல் கட்சி பிரமுகருக்கு இந்தப் பசுவை சன்மானமாக வழங்கியிருப்பார் என்ற சந்தேகத்துடன் தகவலை தெரிவிக்கின்றனர்.

இந்த ஆலயத்தின் அருகிலுள்ள இந்துசமய அறநிலைத்துறை அலுவலகத்தில் பனிபுரிந்து வரும் செயல் அலுவலர் முத்துராமன் இந்த பசு மாடு காணமல் போய் சில வாரங்கள் ஆகியும் மௌனம் காப்பது ஏன்!? பொதுமக்களுக்கு தெரிந்து கொள்ள மாடு கான வில்லை என்ற விளம்பரம் பத்திரிகைகளில் கொடுக்காமல் மவுணம் காத்து வந்தது அப்பகுதி மக்களிடம் பல சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளதாம் .

இப்பிரச்சனையை மறைப்பதற்காக முத்துராமன் புதிய யுக்தியை கையில் எடுத்து தான் மீண்டும் அவர்மீது பல சந்தேகங்கள் வருகிறது. பசு காணமல் பேண சில நாட்களில் புதுக்கோட்டை சட்டமன்ற உருப்பினர் முத்து ராஜவின் தலைமையில் ஆலயத்தின் பக்தர்கள் கொடுத்த மற்ற மாடுகளை எவ்வித முன் அறிவிப்புயின்றி அவசர கோலத்தில் ஆலயத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு தானமாக கொடுத்ததாக தகவல். காணமல் பேன தெய்வீக குணம் கொண்ட பசுவையும் ஆலய ஊழியர்களுக்கு தானமாக கொடுத்த கணக்கில் சேர்த்து விட்டு மோசடியை அரங்கேற்ற இருந்த நிலையில் ரிப்போர்ட்டர் விஷன் பத்திரிக்கையில் பசுவின் புகைபடத்துடன் காணவில்லை என்ற செய்தி வந்தவுடன் செயல் அலுவலர் முத்துராமன் இந்த விசயத்தை மூடி மறைப்பதற்காக பல யுக்திகளை கையாண்டும் அவர் நினைத்தது எதுவுமே நடக்கவில்லை. இதற்கெல்லாம் காரணம் பிரகதாம்பாள் சக்திதான் என்றும் பிரகதாம்பாள் கண் பார்வையில் கெட்டவர்கள் யாரும் நிலைத்து நிற்க முடியாது என்கின்றனர் தேவஸ்தான பக்தர்கள் .செயல் அலுவலர் வந்ததில் இருந்தே நார்தாமலை கோவிலில் உள்ள பசுமாடு காணவில்லை என்றும் கீரனூர் காவல் நிலையம் வரை மாடுகளை பராமரித்து வந்த நபர்மீது புகார் கொடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் கிடப்பில் போட்டதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளது. இப்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 200 க்கும் மேற்பட்ட ஆலயத்தில்  பக்தர்கள் காணிக்கை கொடுக்கும் பசு பசுமாடுகள் கேரளாவிற்கு அதிக விலைக்கு ரகசியமாக விற்பனை செய்து வருபதாகவும் செய்திகள் கசிய தொடங்கி இருக்கின்றது. திருக்கோ கர்ணம் பிரகதாம்பாள் கோவிலில் காணமல் போன அரியவகை பசுமாடு எங்கே என்று பக்தர்கள் கேட்க பாசமாக வளர்த்து வந்த அரிய வகை பசுமாட்டை விற்றவர்களின் பிள்ளைகள் அவர்களது தலைமுறை வம்சம் அனைத்தும் சர்வநாசமாக போகி விடும் என்றும் இதற்க்கு எந்த பரிகாரங்கள் செய்தாலும் எத்தனை தலைமுறை ஆனாலும் பாவமும் அம்பாளின் சாபமும் மாட்டை விற்றவர்கள் வம்சமும்  நாசமாக போகட்டும் என்று பக்தர்கள் கோவில் வாசலில் மன்னை வாரி இறைத்து வருகின்றனர். எது எப்படியே. முக்காலமும் அறிந்த பராசக்தி பிரகதாம்பாளுக்கு வெளிச்சம் என்கின்றனர் பக்த கோடிகள்.

ஆகையால் புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் முரளிதரன் அவர்கள் தாமதப்படுத்தாமல் மௌனம் காக்காமல் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவிலில் இருந்த தெய்வீக காராம் பசுவை கண்டுபிடிக்க தனி குழுவை நியமிக்க வேண்டும். கோவிலில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்களை அரசன் அன்றே கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும். என்ற பழமொழி கருத்த அரசன் போல் இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் அவர்கள் செயல்பட வேண்டும் என்பதுதான் சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button