தமிழக அரசு

பத்திரிகையாளர் களுக்கு விரைவில் அரசு அடையாள அட்டை( PRESS PASS ) வழங்க செய்தித்துறை இயக்குனரிடம் நேரில் கோரிக்கை! 

ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச்சங்கம் – தமிழ்நாடு,
நிர்வாகிகள் சார்பாக
தமிழக செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் த.மோகன் ஐஏஎஸ் அவர்களை நேரில் சந்தித்து பருவ இதழ் பத்திரிகையாளர்களுக்கு புதிய அரசு அடையாள அட்டை விரைவில் வழங்க கோரிக்கை மனு அளித்தபோது.

விழுப்புரம் கலெக்டராக பணிபுரிந்த மோகன், 2023 பிப்ரவரி மாதம்தமிழக செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச்சங்கம் –  தமிழ்நாடு,
சார்பில் செய்தித்துறை இயக்குனராக  புதிதாக பொறுப்பேற்று கொண்ட மோகன் ஐஏஎஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.


கடந்த நான்கு ஆண்டுகளாக செய்தித்துறை சார்பாக பத்திரிகையாளர்களுக்கு வழங்கக்கூடிய புதிய அரசு அடையாள அட்டை வழங்கவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக புதிய அரசு அடையாள அட்டை கேட்டு  தொடர்ந்து விண்ணப்பித்தவர்களுக்கு இதுவரை புதிய அரசு அடையாள அட்டை  யாருக்கும் வழங்கப்படவில்லை,  விண்ணப்பித்த அனைவருக்கும் புதிய அரசு அடையாள அட்டை (press pass) விரைவாக  வழங்கிட கோரியும்,  பத்திரிகையாளர்கள் நல வாரியத்தில் அனைத்து பத்திரிகையாளர்களும் சுலபமாக  இணைய வழிவகை செய்யும்படியும், மேலும் சென்னை மாவட்டம் போல தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பத்திரிகையாளர்களுக்கு அரசு அடையாள அட்டை வழங்கிட ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச்சங்கம் – தமிழ்நாடு,
நிர்வாகிகள் சார்பாக
தமிழக செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் த.மோகன் ஐஏஎஸ் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு  அளிக்கபட்டது,


இந்நிகழ்ச்சியில் மாநில தலைவர் D.M.தருமராஜா D, Astro,  மாநில பொதுச் செயலாளர் V.பாஸ்கர் BBA,  தேனை பார்வை பத்திரிகை ஆசிரியர் N.சரண்குமார், தேனை பார்வை துணை ஆசிரியர் P.வெங்கடேசன்,  தென் சென்னை மாவட்ட தலைவர் S.V.கோபிநாத் BA, துணை தலைவர்
K.குமார்,  திருவள்ளூர் மாவட்ட அமைப்பாளர்
P.பிரகாசம் BA, செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பாளர் C.இமையரசு,
துணை பொறுப்பாளர்
B.சுரேஷ், காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளர்
T.தீபக்குமார் குப்தா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பத்திரிகையாளர்களுக்கு புதிய அரசு அடையாள அட்டை தருவதற்கு இன்னும் அதிக தாமதம் ஏற்பட்டால்
நீதிமன்றத்திற்கு செல்ல தயாராக உள்ளோம் எங்களுடன் சேர்ந்து நீதிமன்றத்திற்கு வர  தயாராக உள்ளவர்கள் 9884655661 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button