பயணிகள் நிழற்குடை இல்லாததால் பள்ளி மாணவிகள் நனைந்தபடி நிற்கும் அவல நிலையின் வீடியோ ! நடவடிக்கை எடுப்பாரா சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர்!?
சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் வெங்கடேசன் அவர்கள் மக்களோடு மக்களாக உங்களோடு ஒருவனாக இருப்பேன் என்று தேர்தல் நேரத்தில் உறுதிமொழி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
மதுரை மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு நாட்களாக இடி மின்னலுடன் கன மழை பெய்து வருகிறது.
அதேபோல் சோழவந்தான் சுற்று வட்டாரத்தில் இது மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது .
அதுவும் குறிப்பாக மாலை நேரம் பள்ளி கல்லூரிகள் விடும் நேரத்தில் கனமழை பெய்து வருவதால் சோழவந்தான் இல் இருந்து அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்ல பள்ளி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் திருக்கோவில் சன்னதி அருகே பேருந்து நிறுத்தத்திற்கு வந்து பேருந்தில் ஏறிச் செல்வது வழக்கம். அந்த பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லாததால் எந்தவித பாதுகாப்பும் இன்றி மழையில் நனைந்தபடி பொதுமக்களும் பள்ளி மாணவிகளும் பேருந்திற்காக காத்து நிற்கும் பரிதாபநிகழ்வு அங்கு பார்ப்போரை கண் கலங்க வைக்கிறது. அதுவும் குறிப்பாக அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் படிக்கும் நூற்றுக்கணக்கான பெண்கள் சோழவந்தான் சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து வந்து படிப்பதால் அவர்கள் வீடு திரும்பும் போது இது போன்ற இயற்கை கன மழையால் நனைந்து செல்வதால் அந்த மாணவிகளுக்கு உடல் ரீதியாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்று அதிர்ச்சி தகவலும் வருகிறது.
ஆகையால் உடனடியாக மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மக்களோடு மக்களாக உங்களோடு ஒருவனாக இருப்பேன் என்று வாக்கு கேட்டு வெற்றி பெற்று தற்போது உள்ள சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சோழவந்தான் பேரூராட்சி பள்ளி மாணவிகளின் நலன் கருதி உடனே பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை உடனே அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.
ஆட்சி மாறுகிறது ,அதிகாரிகள் மாறுகிறார்கள், அமைச்சர்கள் மாறுகிறார்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மாறுகிறார்கள், ஆனால் இதுபோன்ற அவல நிலை எப்போது மாறும் என்ற வேதனையுடன் சேர்ந்து ஆதங்கத்தையும் வெளிப்படுத்தும் இந்த செய்தி.