பொதுப்பணித்துறை

பலகோடிரூபாய் மதிப்புளள கட்டக்குளம் கன்மாய் மரங்கள் வெட்டி கடத்த உடந்தையாக இருந்த பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளர்!?

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் கட்டகுலம் ஊராட்சிக்கு உட்பட்ட சுமார் 250 எக்கர் பரப்பளவு உள்ள கண்மாயில் பராமரிப்பு என்ற பெயரில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

கட்டக்குளம் கிராமத்தை சுற்றி சுமார் 500 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்து வருகின்றனர். மழை காலத்தை தவிர கோடை காலங்களில் தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியவில்லை என்றும் அதனால் கட்ட குளம் ஊராட்சிக்குட்பட்ட கண்மாய் சுமார் பத்தாண்டுகளாக  சீமை கருவேல் மரங்களால் புதர் மூழ்கிக் கிடப்பதால் கண்மாயில் தண்ணீர் இல்லாமல் வரண்டு கிடைப்பதாகவும் கண்மாயில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றி கண்மாயை பராமரித்து வந்தால் கோடை காலங்களில் கண்மாய் பாசனம் செய்ய வசதியாக இருக்கும் என்றும் கிராம பொதுமக்கள் சார்பாக 17/08/20மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப்பணித்துறைக்கு கோரிக்கை மனு விடுத்தனர்.


பொதுமக்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட  மாவட்ட ஆட்சியர் கண்மாயில் இருக்கும் சீமை கருவேல் மரங்களை அகற்ற பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின் பெயரில் பொதுப்பணித்துறைசார்பாக 250 ஏக்கர் கண்மாயில் உள்ள சீமை கருவேல் மரங்களை அகற்ற ஏற்பாடு செய்தது.
அதன்பின் பொதுப்பணித் துறை சார்பாக பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் செல்லையா மற்றும் வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலையில் கட்டகுலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் 11/11/21 அன்று ஏலம் விடப்பட்டது.
இந்த ஏலம் சட்டத்திற்குப் புறம்பாக நடத்தப்பட்டதாகவும் நியாயமான முறையில் நடத்தப்படவில்லை என்றும் பல கோடி மதிப்புள்ள மரங்களுக்கு ஒரு லட்சத்திற்கு கீழே 56,000 ரூபாய்க்கு மட்டும் கட்டக்குளம் சேர்ந்த சின்ன அழகர் தகப்பனார் பெயர் பரமன் ஏலம் எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. என்றும்  இந்த ஏலத்தில் கலந்து கொண்ட சில நபர்கள் ஆட்சேபனை செய்து மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு புகார் கொடுத்துள்ளனர்.

பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர்கள் அவர் சின்ன அழகர் பெயருக்கு மரங்களை வெட்ட அனுமதி வழங்கினார்.
ஆனால் 250 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த கண்மாயில் பல கோடி மதிப்புள்ள நாட்டுக் கருவேல மரங்கள் இருந்ததாகவும் சீமை கருவேல் மரங்கள் மட்டும் வெட்டுவதற்கு ஏலம் விட்டதாகவும் .
ஆனால்

வாடிப்பட்டி ஆண்டிபட்டி பங்களா பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளர் செல்லையா பல லட்சங்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டு  ஏலம் எடுத்த சின்ன அழகர்அவர்களுக்கு கண்மாயில் உள்ள நாட்டுக் கருவேல் மரங்கள் அனைத்தையும் சின்ன அழகர் வெட்டி எடுத்துச் செல்ல அனுமதித்து உள்ளதாக லஞ்சம் வாங்கிய புகைப்படம் இருப்பதாகவும் புகார் வந்துள்ளது.

ஏலம் எடுத்த சின்ன அழகர் பூமிநாதன் என்பவரை விட்டு  கண்மாயில் உள்ள நாட்டுக் கருவேல மரங்கள் அனைத்தையும் வெட்டி எடுத்துச் சென்றுவிட்டார் . இதை எதிர்த்து கேட்ட கிராம பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தான் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தகவல் வந்துள்ளது.

இதையடுத்து கிராம பொதுமக்கள்  மாவட்ட ஆட்சியர் பொதுப்பணித்துறை மற்றும் முதல்வர் தனிப்பிரிவுக்கு கிராம பொதுமக்கள் சார்பாக புகார் மனு கொடுத்துள்ளனர்.
ஆனால் பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதாகவும் பதில் அனுப்பி உள்ளார்கள்.

ஆனால் கிணற்றில் போட்ட கல் போல எதையுமே கண்டுகொள்ளாமல் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகின்றனர்.
ஆனால் முறைகேடான இந்த செயலுக்கு உடந்தையாக ஒருசில முன்னாள் அதிமுக அமைச்சர் RB.உதயக்குமார்,மற்றும் முன்னாள் அதிமுக சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ இருந்து வந்துள்ளனர் என்றும் கிராமப்புற மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆனால் தற்போது ஆட்சி பொறுப்பேற்றுள்ள முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கடந்த பத்தாண்டு அதிமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் ஊழல் செய்துள்ள முன்னாள் அதிமுக அமைச்சர்கள் பட்டியலை ஸ்டாலின் அவர்கள்
எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போதே ஆளுநரிடம் கொடுத்ததையும் நாம் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

ஆகவே தென் மாவட்டங்களில் முன்னாள் திமுக அமைச்சர்கள் ஒத்துழைப்போடு சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ மாணிக்கம் முன்னிலையில் நடந்த பொதுப்பணித்துறை மற்றும் மற்ற துறைகளிலும் ஊழல் நடந்துள்ளது என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.


ஆகவே அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்த காரணமாக இருந்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எது எப்படியோ இனிமேலாவது இதுபோன்ற ஊழல்கள் நடக்காமல் இருக்க தமிழக அரசு அதிகாரிகளுக்கு தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button