நீதி மன்றம் தீர்ப்பு

பலமுறை நீதிமன்றம் உத்தரவிட்டும் பட்டா வழங்க மறுக்கும் மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் நில நிர்வாக ஆணையர் !நேரில் ஆஜராக மதுரை நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பட்டா வழங்க மறுக்கும் மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் நில நிர்வாக ஆணையர் நேரில் ஆஜராக மதுரை நீதிமன்றம் உத்தரவு!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நில நிர்வாக ஆணையர் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியரும் ஜூலை 10ம் தேதி நேரில் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
உத்தரவிட்டுள்ளது.


மதுரை மேலூர் அம்பலக்காரன் பட்டியைச் சேர்ந்த ரமணி கோபால், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவில், “மேலூர் தாலுகா அம்பலக்காரன்பட்டியில் தனியார் பட்டா நிலத்தை 1994-ல் நானும், என் மனைவியும் வாங்கினோம். அந்த நிலத்துக்கு என் பெயரில் பட்டா கேட்டு விண்ணப்பித்தேன். ஆனால் அந்த இடம் பஞ்சமி நிலம் என்று கூறி பட்டா வழங்க மறுத்துவிட்டனர்.
பட்டா கேட்டு 2015-ல் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது. வழக்கு விசாரித்து நீதிமன்றம் நிலத்தை அளவீடு செய்து பட்டா வழங்க உத்தரவிட்டது. அதன்படி பட்டா வழங்கப்பட்டது.
இதனிடையே, அந்த நிலம் திடீரென பஞ்சமி நிலம் என்று கூறி நில நிர்வாக ஆணையம் மதுரை மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்ததன் பெயரில் மதுரை மாவட்ட வருவாய்த்துறை பட்டாவை ரத்து செய்த பின்பு மேல் முறையீடு செய்யப்பட்டது . வழக்கில் மேலூர் வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு ஆஜர் ஆனார். அவரிடம் விசாரணை செய்தபோது நிலம் பஞ்சமி நிலம் இல்லை என உறுதி செய்யப்பட்டது. அதன் பின்பு
உயர் நீதிமன்றம் பலமுறை பட்டா வழங்க உத்தரவிட்டும் வருவாய்த்துறையினர் நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் செயல்பட்டு வந்ததால் .நில நிர்வாக ஆணையர், நாகராஜன் ஐ ஏ எஸ் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஐஏஎஸ் இருவரும் மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுத்து ஜூலை 10-ம் தேதி நீதிமன்றத்தில் இளம் நிர்வாக ஆணையர் மாவட்ட ஆட்சியர் இரண்டு பேரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஜூலை பத்தாம் தேதி நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத நில நிர்வாக ஆணையர் நாகராஜன் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சிதலைவர் சங்கீதா இருவரும் மதுரை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

மனுதாரர் மேல்முறையீடு செய்துள்ளதால் பட்டா வழங்க வில்லை என்று நில அளவை ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் தரப்பின் விளக்கத்தை ஏற்ற நீதிபதிகள் இதுபோன்ற தவறுகள் இனிமேல் நடக்காமல் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எச்சரித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தனர்.

Related Articles

Back to top button