கல்வி

பல்கலைக்கழக விதிகளை மீறி  சிறை கைதிகளிடம் நடந்து கொள்வது போல டார்ச்சர் செய்து வந்ததாக
கரூர்
VSB கல்லூரி நிர்வாகம் மீது உடல் மற்றும் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக பெண் உதவி பேராசிரியர்

(கரூர் VSB கல்லூரி நிர்வாகம் மீது கரூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்)


பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் நியமனம் என்பது பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) விதிமுறைகளின் அடிப்படையில் நடைபெறுகிறது.

ஆசிரியர் பணிஎன்பது உயர்ந்த பணி. வகுப்பறைகளில் கற்பிப்பது என்பது ஒரு திறமையாகும். ஒரு ஆசிரியர், வகுப்பறை கலையை கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். இதனால் முழு நேர கல்லூரிகளில், கண்டிப்பாக முறையாக கல்வி கற்றவர்களை மட்டுமே உதவி பேராசிரியர்களாக நியமிக்க வேண்டும். கல்லூரிகளுக்கு செல்லாமல் திறந்தவெளி பல்கலைக்கழகம், தொலைநிலை கல்வியில் பட்டம் பெற்றவர்கள் பல்கலைக்கழக மானியக்குழு விதிப்படி உதவி பேராசிரியர்களாக நியமிக்க தகுதியற்றவர்கள்.


பல்கலைக்கழக மானியக்குழு விதிப்படி கல்லூரி உதவி பேராசிரியர் நியமனத்தை மேற்கொள்ள தமிழக உயர் கல்வித்துறை செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை மீறும் அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில்  பல்கலைக்கழகத்திற்கு கீழ் செயல்படும் கல்லூரிகளின் உதவி பேராசிரியர் நியமனங்கள் பல்கலைக்கழக மானியக்குழு விதிப்படி நடைபெறுவதை மாநில அரசு உறுதிப்படுத்த வேண்டும். மானியக்குழு விதிகளை மீறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை  உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

ஆனால் நீதிமன்ற உத்தரவுப்படி நியமிக்கும் உதவி பேராசிரியர்களை  கல்லூரி நிர்வாகம் விதிகளை மீறி நடந்து கொள்வதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதற்கு உதாரணமாக

கரூரில் வி எஸ் பி.கல்லூரி நிர்வாகம்  விதிகள் மீது செயல்பட்டு வருவதாக  தற்போது உதவி பேராசிரியர் சுதா தமிழகம் முதல்வர் தனிப்பிரிவு கரூர் மாவட்ட ஆட்சியர் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வேந்தர் மற்றும் உயிர்கல்வித்துறை செயலாளர் ஆகியோருக்கு புகார்    கொடுத்துள்ளார்.

அந்தப் புகாரில்
திண்டுக்கல் மாவட்டம் சில பாடி கிராமத்தைச் சேர்ந்த கொடிமணி நகரில் வசித்து வருபவர் சுதா MCA ME (PhD). இவர் கடந்த 18 வருடங்களாக திண்டுக்கல் ஆர் வி எஸ் பொறியியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக செய்து வந்துள்ளார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 

கரூர் கருடம்பாளையம் நம்பர் .67. கோவை மெயின் ரோட்டில் அமைந்துள்ளது .

கல்லூரி அறக்கட்டளை நிறுவனராக வி எஸ் பாலசாமி எல் எல் பி இருக்கிறார்.
இந்தக் கல்லூரியின்
உதவி பேராசிரியராக பணியில் சேர்ந்துள்ளார். பணியில் சேரும்போது CSBS இன்றைக்கு நியமித்துவிட்டு அதன் பின்பு AIDS துறையை பார்க்கும்படி கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது அதனையும் ஏற்றுக்கொண்டு அந்தத் கையில் துணை பேராசிரியராக பணி செய்து வந்துள்ளார். ஆனால் நான்கு உதவி பேராசிரியர்கள் செய்ய வேண்டிய அந்த வேலையை ஒரே ஒரு உதவி ஆசிரியர் சுதாவை பார்க்கச் சொல்லி கட்டாயப்படுத்தி உள்ளது கல்லூரி நிர்வாகம் அதுமட்டுமில்லாமல் சிறை கைதிகளை போல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து முதல் பணி சுமைகளை  கல்லூரி நிர்வாகம் கொடுத்து நிர்வாகம் அடிமைகளைப் போல டார்ச்சர் செய்து வந்ததாகவும் அது மட்டும் இல்லாமல் காலை 9:00 மணி முதல் இரவு 7 மணி வரை கல்லூரியில் பணி செய்ய வேண்டும் காயப்படுத்தி வந்ததாகவும். பேராசிரியருக்கு எட்டு மணி நேர வேலையில் 3 பாட வேலையில் பாடம் நடத்த வேண்டும் என்ற விதி பல்கலைக்கழகம் விதித்துள்ளது. ஆனால் வி பி எஸ் கல்லூரியில் போதுமான பேராசிரியர்கள் இல்லாத காரணத்தால் சீனியர் பேராசிரியர்கள் எடுக்க வேண்டிய வேளையில் உதவி பேராசிரியர்களை வைத்து மாணவர்களுக்கு பாடம் எடுக்க கட்டாயப்படுத்தி வந்ததாகவும் இதேபோல் தொடர்ந்து கூடுதல் பணிச் சுமையை உதவி பேராசிரியர் சுதாவுக்கு கொடுத்து வந்ததால் 2025  ஜனவரி 20ஆம் தேதி கல்லூரியில் ஒரு வகுப்பில் மாணவர்களுக்கு பாடம் எடுத்துவிட்டு மற்றொரு வகுப்பிற்கு பாடம் நடத்த நடந்து சென்ற போது மயங்கி கீழே விழுந்து ஒரு மணி நேரத்திற்கு மேல் சுயநினைவு இல்லாமல் இருந்ததாகவும் ஆனால் கல்லூரி நிர்வாகம் எந்த ஒரு மருத்துவ உதவியும் செய்யவில்லை என்றும் அது மட்டும் இல்லாமல் முதல் உதவி சிகிச்சை செய்யவில்லை என்றும் அதன் பின்பு அவரது கணவருக்கு தகவல் தெரிவித்து கணவரின் நண்பர் ஒருவர் காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் என்றும் தற்போது மருத்துவச் செலவு 5 லட்சம் வரை ஆகிவிட்டது என்றும்  அப்போது மீண்டும் கல்லூரியில் பணி செய்ய முடியாத நிலை உடல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக மூளைக்கு செல்லும் நரம்பு பாதிக்கப்பட்டுள்ளதால் குறைந்தது ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளதால் பாதிக்கப்பட்ட உதவி பேராசிரியர் சுதாவுக்கு மருத்துவ சலவை கூட கல்லூரி  நிர்வாகம் வழங்கவில்லை எனவும் மட்டும் இல்லாமல் உதவி பேராசிரியர் சுதாவின்  ஒரிஜினல் கல்வி சான்றிதழ் அனைத்தையும் கல்லூரி நிர்வாகம் வைத்துக்கொண்டு ஆறு மாதம் வேலை பார்த்த சம்பளத்தை திருப்பி நிர்வாகத்திடம் கட்டினால் மட்டுமே ஒரிஜினல் கல்வி சான்றிதழ்கள் வழங்குவோம் என வி எஸ் பி கல்லூரி நிர்வாகம் மிரட்டும் தோணியில் உதவி பேராசிரியர் அவரது கணவரிடம் கூறியதாகவும்  ஆகையால் உடல் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருக்கும்  உதவி பேராசிரியர் சுதாவிற்கு மருத்துவ செலவு 4.50 லட்சம் மற்றும் உதவி பேராசிரியரின் ஒரிஜினல் கல்வி சான்றிதழ் அனைத்தையும் பெற்றுத் தர வேண்டும் அது மட்டும் இல்லாமல்  கல்லூரிக்கு பேராசிரியராக பணியில் சேருபவர்களிடம் கட்டாயப்படுத்தி ஒரிஜினல் கல்வி சான்றிதழ்களை வாங்கி வைத்துக்கொண்டு பாண்டு பேப்பரில் மிரட்டி எழுதி வாங்கிக் கொண்டார்கள். இந்த செயல் பல்கலைக்கழகத்தின் சப்த விதிகளை மீறும் செயலாகும் .ஆகவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் கல்லூரி நிர்வாகத்தில் நடக்கும் சட்ட வீதி மீறல்களை ஆய்வு செய்து கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த புகாரில் கொடுக்கப்பட்டுள்ளது.
எது எப்படியோ மிகப்பெரிய படிப்பு படிக்க வேண்டும் என கஷ்டப்பட்டு படித்துவிட்டு நல்ல கல்லூரிகளில் பேராசிரியர்களாக பணி செய்ய வேண்டும் என நினைத்து விஎஸ்பி கல்லூரியில் சேர்ந்த சுதாவுக்கு  தற்போது கல்லூரி பேராசிரியராக செய்ய முடியாத நிலைக்கு உடல் ரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்றால் இதே போல் தமிழகத்தில் உள்ள எந்த கல்லூரிகளிலும் பல்கலைக்கழகத்தின் விதிகளை மீறி  கல்லூரி நிர்வாகங்கள் உதவி பேராசிரியர்கள் இடம் குறிப்பாக பெண் பேராசிரியர்களிடம் நடந்து கொள்கிறதா  என சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் படித்த பட்டதாரிகளின் கோரிக்கையாக உள்ளது. தற்போது திமுக ஆட்சியில் கல்விக்காக பல நல்ல திட்டங்களை கொண்டு வரும் நிலையில் இது போன்ற பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் தனியார் கல்லூரி நிர்வாகத்தில் இருக்கும் நிர்வாகிகள் ஒரு சிலர் திமுக அரசின் மீது பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை களங்கப்படுத்தும் வகையில் நடந்து கொள்வதால்  வி எஸ் பி கல்லூரி  அறக்கட்டளை நிறுவன வி எஸ் பாலசாமி எல் எல் பி அவர்கள் பாதிக்கப்பட்ட உதவி பேராசிரியர் சுதா அவர்களின் உடல்நலம்  கருதி  அவரைப் பணியில் இருந்து விடுவித்து அவருக்கான மருத்துவ செலவு  மற்றும் அவரது ஒரிஜினல் கல்வி சான்றிதழ்களை வழங்க வேண்டும்.
எது எப்படியோ ஒரு சில கல்லூரிகளில் நிர்வாகிகளின் தவறான செயல்களால் கல்லூரிகளுக்கு கெட்ட பெயர் வருவதை தடுத்து நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே படித்த பட்டதாரிகள் அச்சம் இல்லாமல் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியில் சேர முடியும் என்பதுதான் நிதர்சனம் ஒரு திறந்து பார்ப்போம் கல்வித்துறை நடவடிக்கையை!

Related Articles

Back to top button