பல ஆயிரம் கோடி மதிப்புள்ள இயற்கை மலை குன்றுகள் மற்றும் இயற்கை வளங்கள் பாலைவனமாக மாறும் அதிர்ச்சி வீடியோ! மணல் மாபியாக்களிடம் பலகோடி ரூபாய் லஞ்சம் வாங்கியுள்ள திண்டுக்கல் மாவட்ட கனிம வளத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம்!
இயற்கை வளங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!
பல ஆயிரம் கோடி மதிப்புள்ள இயற்கை வளங்களை பாலைவனமாக மாறும் அதிர்ச்சி வீடியோ!
பலகோடி ரூபாய் லஞ்சம்!
இயற்கை வளங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!
பல ஆயிரம் கோடி மதிப்புள்ள இயற்கை மலை குன்றுகளை சட்டவிரோதமாக வெட்டி கடத்தி பாலைவனமாக மாற்றி வரும் அதிர்ச்சி வீடியோ!
பல கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிக் கொண்டு கண்டுகொள்ளாத திண்டுக்கல் மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் மற்றும் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் !?
இயற்கை வளங்களை அழித்து பாலைவனமாக கனிமவத்துறை உதவி இயக்குனர் மற்றும் வருவாய்த்துறை மற்றும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் காவல்துறை ஆகிய நான்கு துறை அதிகாரிகள் உடந்தையாக செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா நிலக்கோட்டை காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட மாலைய கவுண்டம்பட்டி மற்றும் நிலக்கோட்டை சிப்காட் அருகே அமைந்துள்ள பல்லாயிரம் கோடி மதிப்புள்ள இயற்கை மலை குன்றுகளை கடந்த சில மாதங்களாக மணல் மாபியாக்கள் பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து மண்ணை வெட்டி கடத்தி பாலைவனமாக்கி வருவதாக அப்பகுதி மக்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர்.
இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட இடத்தில் போய் புகைப்படம் எடுத்து வீடியோ காட்சிகளை திண்டுக்கல் மாவட்ட கனிமவளத் துறை உதவி இயக்குனருக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது தொலைபேசியை எடுத்துப் பேசுவதற்கு மனமில்லாமல் இருக்கிறார். அதேபோல் சட்டவிரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்கம் சார்பாக
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு புகார் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆகவே சட்டவிரோதமாக இயற்கை மலை குன்றுகளை வெட்டி எடுத்து இயற்கை வளங்களை அழித்து பாலைவனமாக மாற்றி வருவதை தடுத்து நிறுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட கனிமவளத் துறை உதவி இயக்குனர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் செவி சாய்க்காமல் கண்டு கொள்ளாமல் இருப்பதால் சட்டவிரோதமாக மலை குன்றுகளை வெட்டி கடத்தி செல்வதற்கு பல கோடி ரூபாய் கையூட்டாக பெற்றுக்கொண்டு மணல் மாபியாக்களுடன் கைகோர்த்துக்கொண்டு செயல்பட்டு வருகிறார்களோ என சந்தேகம் எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக நடந்து வரும் சிறு கனிம செம் மண் சட்டவிரோதமாக தினமும் நூற்றுக் கணக்கான டிப்பர் லாரிகளில் கடத்திச் செல்கின்றனர்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு உட்பட்ட 14 மாவட்டங்களில், கிராவல் மண் குவாரி, சிறு கனிமங்கள் சட்டப்படி நடத்த உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அனுமதி பெற்றுள்ள கல்குவாரிகளின் மேற்பகுதியில் உள்ள கிராவல் மண், எடுக்க மட்டுமே உயர் நீதிமன்றம் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் தற்போதும் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை கோட்டத்தில் மாலையா கவுண்டம்பட்டி மற்றும் பள்ளபட்டி சிப்காட் பகுதிகளில் உள்ள இயற்கை குன்றுகளை சட்டவிரோதமாக வெட்டி எடுத்து தினமும் நூற்றுக் கணக்கான டிப்பர் லாரிகளில் செம்மண் அள்ளி கடத்தி கனிமக் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ச்சியாக இப்பகுதிகளில் செம்மண் கொள்ளை நடந்து வருகிறது. இந்த திருட்டை நிலக்கோட்டை கோட்ட வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் கைகட்டி வேடிக்கை பார்த்து வருகின்றனர். கனிமம் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகளைத் தவிர யாரும் இந்த கனிமவள திருட்டை தடுக்க கிராம நிர்வாக அலுவலர் மற்றும் காவல் ஆய்வாளர் முதல் அனைவரும் தடுத்து நிறுத்த அரசு அரசாணை பிறப்பித்தும் தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனைக்குரிய விசயம். பட்டா நிலங்களில் செம்மண் அள்ள யார் அனுமதி கொடுத்தது என்று கேட்டால் பதில் இல்லை. முறையாக மாவட்ட கனிமம் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் செம்மண் அள்ள அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் கூறிய பின்பும்
செம்மண், விவசாயத்திற்கே விவசாய நிலங்களை பண்படுத்தவோ சீர்படுத்தவோ கொண்டு செல்லப்படவில்லை. பல்வேறு சேம்பர்களுடைய, குவாரிகள் உடைய டிப்பர் லாரிகளில் ஏற்றியே கொண்டு செல்லப்படுகிறது. இது முழுக்க முழுக்க செம் மண் கடத்தலாகும். சமூக சொத்து கொள்ளையிடுவதாகும்.
எனவே, சமூக சொத்தான இயற்கை மலை குன்றுகளை அனுமதி இன்றி, சட்ட விரோதமாக வெட்டி எடுத்து கடத்தப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்தி, போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் இன்னும் சில ஆண்டுகளில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இயற்கை வளங்கள் மற்றும் இயற்கை மழை குன்றுகள் குறிப்பாக நிலக்கோட்டை தாலுகா சுற்றுவட்டாரப் பகுதிகள் பாலைவனமாக மாறி இயற்கை வளங்கள் இருந்த அடையாளமே தெரியாமல் போய்விடும் என பொதுமக்கள் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர்.
எது எப்படியோ வருங்கால சந்ததியினர் நலன் கருதி விவசாயிகளின் நலன் கருதி தமிழக முதல்வர் ஸ்டாலின் இயற்கை வளங்கள் நிறைந்த திண்டுக்கல் மாவட்டத்தை காப்பாற்ற உடனடியாக கனிமவளத்துறை மாவட்ட நிர்வாகம் காவல்துறை வருவாய்த்துறை ஆகிய அனைத்து துறைகளிலும் நேர்மையான அதிகாரிகளை நியமித்து இயற்கை வளங்களை காப்பாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.