லஞ்ச ஒழிப்புத் துறை

பல கோடி ரூபாய் லஞ்சம் ஊழல் முறைகேடு செய்த ஆண்டிபட்டி வட்டாட்சியர்! மௌனம் காத்து வந்த தேனி மாவட்ட ஆட்சியர்!
அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்!

பல கோடி ரூபாய் லஞ்சம் ஊழல் முறைகேடு செய்த ஆண்டிபட்டி வட்டாட்சியர்! மௌனம் காத்து வந்த தேனி மாவட்ட ஆட்சியர்!
அதிரடி நடவடிக்கையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்!
கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளைப் பிடிப்பதில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஆசியாவிலேயே அதிக ஊழல் நடைபெறும் நாடு இந்தியா என்றும் அதிலும்  முக்கியமாக  தமிழகத்தில் லஞ்சம் ஊழல் முறைகேடு அதிகமாக நடைபெறுவது வேதனையளிப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஊழல் தடுப்புச் சட்டம் நடைமுறையில் இருந்தாலும் அதிக அளவில் அரசு அலுவலகங்களில் தான் ஊழல் நடைபெறுவதாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த  அதிமுக ஆட்சியில் 2017 ஆம் ஆண்டு  டிசம்பர் மாதம் லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யும் வகையில் தனி சட்டம் கொண்டு வருவது குறித்து பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
லஞ்சம் புழங்கும் முதல் 5 அரசு துறைகள்  எது!?
லஞ்ச ஒழிப்புதுறையினர் சோதனை நடத்தும் போது ஏற்படும் பிரச்சினைகள் என்ன? சோதனையின் போது நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றவா!?லஞ்ச ஒழிப்பு துறைக்கு போதிய நிதி ஒதுக்கப்படுகிறா? என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக தேனி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஊழல் முறைகேடு தலை விரித்தாடுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்
குறிப்பாக வட்டாட்சியர்  அலுவலகங்களில், லஞ்சம் வாங்குவது தடுக்க முடியாததாகவே உள்ளது.
அது மட்டுமில்லாமல் சார்பதிவாளர் அலுவலகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, வட்டார வளர்ச்சி, கோட்டாட்சியர், நகர ஊரமைப்பு, சார் – பதிவாளர் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், லட்சக்கணக்கில் பணம் புழங்கும் இடங்களாக மாறிவிட்டன.
இவற்றில், அதிகாரிகள் முதல் இடைத்தரகர்கள் வரை பலரும் லஞ்ச ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதை தடுக்க வேண்டிய தேனி மாவட்ட ஆட்சியர் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காப்பது ஏன் என்ற கேள்வியை சமூக ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர்.
அரசு அலுவலகங்களில் குறிப்பாக வருவாய்த்துறை அலுவலகங்களில் லஞ்சம் இல்லாமல் எந்த வேலையும் செய்வதில்லை என தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பல புகார்கள் சமூக ஆர்வலர்கள் மூலம் பொதுமக்கள் மூலம் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் ஏன் எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் வாங்கும் லஞ்ச பணங்களில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஒரு சிறு தொகை வழங்கப்படுகிறதா என்ற சந்தேகம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அரசு அலுவலகங்களில்
லஞ்சம் அதிகாரிகள் மீது ஒரு சிலர் மட்டுமே தைரியமாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம்  புகார் அளிப்பதாகவும் அந்த புகாரி அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுத்து, கையும் களவுமாக அதிகாரிகளை கைது செய்கின்றனர் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
லஞ்ச ஒழிப்பு போலீசாரின் தொடர் நடவடிக்கை இருந்தும், தேனி மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்களில் உள்ள அரசு அதிகாரிகள், பயமின்றி லஞ்சம் வாங்குவது அதிகரித்து வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததே, இவ்வகை குற்றம் அதிகம் நடப்பதாகவும்
அரசு அலுவலகங்களில், அரசின் சேவை பெற விண்ணப்பிக்கும் பொதுமக்கள், லஞ்சம் கொடுக்கக்கூடாது என்ற மன நிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும்
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு வேண்டுகோள்  விடுத்திருக்கும்  நிலையில் சில மாதங்களுக்கு முன்பு
மதுரையைச் சேர்ந்த சுப்ரமணி என்பவர் தேனி மாவட்டம் ஆண்டி பட்டியை அடுத்துள்ள தேக்கம் பட்டி என்ற கிராமத்தில் இருக்கும் அவருக்கு சொந்தமான இடத்தில் பெட்ரோல் பங்க் வைப்பதற்கான வேலைகளை செய்து வந்தார். பெட்ரோல் பங்க் வைப்பதற்கு வருவாய்த்துறையின் தடையில்லா சான்று பெற வேண்டி சுப்பிரமணி

ஆண்டிப்பட்டி வட்டாட்சியர் காதர் ஷெரிப்பிடம் . விண்ணப்பித்திருந்தார். தடையில்லா சான்று வழங்குவதற்கு  முதலில் 5 லட்சம் வரை லஞ்சம் கேட்டதாகவும் கடைசியாக  ரூ. 1 லட்சம் ரூபாய் லஞ்சம் வேண்டும் என சுப்பிரமணியிடம் வட்டாட்சியர் காதர் ஷெரிப்  கறாராக கூறியுள்ளார்.
இதுகுறித்து சுப்பிரமணி தேனி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சுந்தர்ராஜனிடம் புகார் கொடுத்துள்ளார்.

ஆண்டிபட்டி வட்டாட்சியர் காதர் ஷெரிப்
பல கோடி ரூபாய் லஞ்சம் ஊழல் முறைகேடு செய்த ஆண்டிபட்டி வட்டாட்சியர் காதர் ஷெரிப்

அந்தப் புகாரின் அடிப்படையில் ஆண்டிபட்டி தாசில்தார் காதர் ஷெரிபை கையும் களவுமாக பிடிக்க லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் முடிவு செய்தனர்.
அதன்படி சுப்பிரமணியிடம் ரசாயனம் தடவப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் பணத்தை காதர் ஷெரிப்பிடம் கொடுக்கச் சொல்லி சுப்ரமணியை போலீஸார் அனுப்பினர்.
பணத்துடன் சென்ற சுப்ரமணியனை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தூரத்தில் இருந்த படி கண்காணித்தனர்.  மாலை 6.15 மணிக்கு தாசில்தார் அலுவலகம் சென்ற சுப்பிரமணி ரசாயனம் தடவிய ஒரு லட்ச ரூபாய் பணத்தை தாசில்தாரிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தாசில்தார் காதர் ஷெரிப்பை கையும் களவுமாக பிடித்தனர்.
இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சுந்தர்ராஜன் தலைமையிலான பத்துக்கும் மேற்பட்ட போலீஸார் தாசில்தார் அறைக்குள் சென்று விசாரணை நடத்தினர். விசாரணை நடந்து கொண்டிருந்தபோது தாசில்தார் காதல் ஷெரிப் தனக்கு நெஞ்சு வலி இருப்பதாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளிடம் கூறி நடித்துள்ளார்.
இதனையடுத்து தாசில்தார் காதர் ஷெரிப்பை போலீஸ் ஜிப்பில் ஏற்றிக்கொண்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு அதன் பின்பு  தாசில்தார் அலுவலகத்தில் இருந்த ஆர்.ஐ., காதர் உசேன், உதவியாளர்கள் சங்கர், நாகராஜன் உள்ளிட்டோரிடமும் தேனி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் வட்டாட்சியர் காதர் ஷெரிப் பற்றி பல திடுக்கிடும் தகவலை சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.


காதர் ஷெரிப் போடி நாயக்கணூர்  வட்டாட்சியர் அலுவலகத்தில்  மண்டல துணை வட்டாசியராக பணி புரிந்த போது  கோடிக்கணக்கான மதிப்புள்ள பிரச்சனையில் இருந்த  நஞ்சை புஞ்சை நிலங்களுக்கு  மற்றும் அரசு தரிசு நிலங்களுக்கு பட்டா மாறுதல் செய்து கொடுக்க லட்சக்கணக்கில்  லஞ்சம் பெற்றுள்ளதாக  சமூக ஆர்வலர்கள்  அப்போது இருந்த தேனி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு  காதர் ஷெரீப் மீது புகார் கொடுத்தும்  காதர் ஷெரீப் மீது துறை ரீதியாக எந்த நடவடிக்கையும் மாவட்ட ஆட்சியர் எடுக்க வில்லை என்ற அதிர்ச்சி தகவல் தெரிவிக்கின்றனர்.
அதற்குப் பின்பு
பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில்   2022 ஆம் ஆண்டு வட்டாசியராக காதர் ஷெரிப் இருந்தபோது லஞ்சம், ஊழல் , முறைகேடு  ஈடுபட்டு வருவதாக அப்போது இருந்த

தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் இடம் காதர் ஷெரிப் மீது சமூக ஆர்வலர்கள் பல புகார்கள் கொடுத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டுகின்றனர்.

அதைவிட முக்கியமாக பெரியகுளம் வட்டாட்சியராக காதர் ஷெரீப்  நூற்றுக்கணக்கான பேரிடம்  அரசு புறம்போக்கு தரிசு நிலங்களுக்கு அனுபவ பட்டா வழங்குவதாக பல கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாகும் அதில் ஒரு சிலருக்கு மட்டும் அனுபவ பட்டா வழங்கியதாகவும் பலபேருக்கு  பட்டா வழங்காமல் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாகவும் பணம் கொடுத்தவர்கள் வெளியே சொல்ல முடியாமல் இதுவரை புலம்பி கொண்டு இருப்பதாகவும் அதிர்ச்சி தகவலை சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமில்லாமல்  பெரிய குளம் தென்கரை பெண் கிராம நிர்வாக அலுவலர்கள் 

தேனி மாவட்ட ஆட்சியராக 2023 பிப்ரவரி மாதம் சாஜிவனா புதிதாக பொறுப்பேற்ற ஒரு மாதத்தில் பெரியகுளம் கோட்டாட்சியாரிடம் புகார் கொடுத்தும்
பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் நேர்மையான முறையில் விசாரணை நடத்தாத காரணத்தால்  அதிருப்தி அடைந்த பெண் கிராம நிர்வாக அலுவலர்கள் மாவட்ட ஆட்சியர் சாஜ்வனாவிடம் நேரில் சென்று பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மீது நம்பிக்கை இல்லை என்றும்  ஆகவே தாங்கள் வட்டாட்சியர் காதர் ஷெரீப்  மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டியும் அதுமட்டும் இல்லாமல் வட்டாட்சியர் காதர் ஷெரிப் பை பணியிட் மாற்றம்  உடனடியாக செய்ய வேண்டும் என்றும்
மாவட்ட ஆட்சியாளரிடம் கிராம நிர்வாக பெண் அலுவலர்கள் கோரிக்கை  மனு வழங்கியும் , வட்டாட்சியர் காதர் ஷெரிப் அதிகார துஷ்பிரயோகத்தை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன் பின்பு உத்தமபாைளையம்,வருவாய் கோட்டாட்சியர்  பால்பாண்டியன் அவர்களிடம் விசாரணை நடத்த தேனி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். ஆனால் விசாரணையில் நடந்த போது


வட்டாட்சியர் காதர் ஷெரீப்பை  ஆண்டிபட்டி வட்டாசியர் அலுவலகத்துக்கு பணியிட மாற்றம் செய்து  தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா உத்தரவிட்ட நிலையில் அந்த உத்தரவை மதிக்காத
பெரியகுளம் வட்டாச்சியர்  காதர் ஷெரிஃப் 

தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் ஆட்சியரின் அறை முன்பு, தமிழ்நாடு வருவாய்த் துறை சங்கத்தின் சார்பில், மாவட்ட ஆட்சியரை பணிய வைக்கும் முயற்சியில் வட்டாட்சியர் காதர் ஷெரிப் (மதியம் இரண்டு மணி முதல், நள்ளிரவு பதினொரு மணி வரை) பெட்சீட், தலையணையுடன், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஆனால் மாவட்ட ஆட்சியர் நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்துள்ளதாகவும் புகாரின் மீது பணியிட மாற்றம் செய்யவில்லை எனவும் குறிப்பாணை வெளியிட்ட

மாவட்ட ஆட்சியர் வட்டாட்சியர் காதர் ஷெரிப் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க தயங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பின்பு
காதர் ஷெரிப் உடனடியாக ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொள்ளாமல் இரண்டு மூன்று மாதம் விடுமுறையில் இருந்து அதன் பின்பு ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார். வட்டாட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட நாள் முதல் வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் ஊழல் முறைகேடு கொடி கட்டி பறந்தது என்றும்

கைது செய்யப்பட்ட வட்டாட்சியர் காதர் ஷெரிப் பல லட்ச ரூபாய் மதிப்பில் ஆடம்பர பங்களா  ஆண்டிபட்டி அருகே பிராதுகான் பட்டி சாலை

இது சம்பந்தமாக தேனி மாவட்ட ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் புகார் கொடுத்தும் ஆண்டிபட்டி வட்டாட்சியர் காதர் ஷெரிப் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தற்போது தடையில்லா சான்று கேட்டு விண்ணப்பித்தவரிடம் ஒரு லட்சம் லஞ்சம் கேட்டது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி இடம் புகார் கொடுத்ததின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வட்டாட்சியர் காதர் ஷெரிப் கையும் களவுமாக பிடித்து கைது  செய்துள்ளனர் என தகவலை தெரிவித்தனர்.
எது எப்படியோ தேனி மாவட்டத்தில் வருவாய் துறை அலுவலகங்களில் தொடர்ந்து லஞ்சம் வாங்குவதாக சமூக ஆர்வலர்கள் புகார் மனு கொடுத்தும் தேனி மாவட்ட ஆட்சியர் லஞ்சம் ஊழல் முறைகேடில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவதற்கு காரணம் என்ன!?  மாவட்ட வருவாய்  துறை நிர்வாக உயர் அதிகாரிகளுக்கு  லஞ்சம் வாங்கும் பணத்தை பிரித்து வழங்கப்படுவதால் இலஞ்சம் ஊழல் முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது தேனி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க தயங்குகிறாரா என சந்தேகத்தை சமூக ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர். எது எப்படியோ லஞ்ச ஊழல் முறை கேடில் ஈடுபடும் அரசு அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சம் இன்றி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும். அதே போல் லஞ்சம் வாங்கிய போது கைது செய்யப் பட்ட வட்டாட்சியர் காதர் ஷெரிப்பின்  பெயரிலும் மற்றும் பினாமி பெயரிலும் பல கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்கள்  இருப்பதாக  தகவல்கள் வந்துள்ள நிலையில்  வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளாரா என வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள்  கோரிக்கை வைத்துள்ளனர். திமுக ஆட்சிக்கும் கட்சிக்கும் உள்ள நற்பெயரை களங்கப்படுத்தும் வகையில் அரசு அலுவலகங்களில் உள்ள சில உயர் அதிகாரப் பொறுப்புகளில் உள்ள அதிகாரிகள் இதுபோன்று லஞ்ச ஊழல் முறைகளில் ஈடுபட்டு வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் அச்சமின்றி சென்றுவர நேர்மையான அதிகாரிகளை தமிழக முதல்வர் நினைக்க வேண்டும் என்பது அனைத்து சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாகும்.

தேனி மாவட்டத்தில் உள்ள மற்ற அரசு அலுவலகங்களில் நடக்கும் லஞ்ச ஊழல் முறைகேடுகள் பற்றி முக்கியமாக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் அவலங்களைப் பற்றி ரிப்போர்டர் விஷன் புலனாய்வு குழு விரைவில் வெளியிட உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button