விவசாயமே செய்யாத தரிசு நிலத்திற்கு பல கோடி பயிர் இழப்பு காப்பீட்டு தொகை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ள விஜய் சுபம் நிதி நிறுவனத்திற்கு உடந்தையாக செயல்பட்ட மயிலாடுதுறை மாவட்ட வருவாய்த்துறை நிர்வாகம் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா!?
விவசாய நிலத்தை சட்டவிரோதமாக அரசு அனுமதி இன்றி தொழிற்சாலையாக மாற்றும் விஜய் சுபம் பெனிஃபிட் பண்ட் லிமிடெட் நிறுவனம் மீது மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா!?
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தில்லை விடங்கன் ஊராட்சிக்குட்பட்ட திருத்தோனிபுரம் என்கின்ற கிராமத்தில் விஜய் சுபம் பெனிபிட் ஃபண்ட் லிமிடெட் என்ற நிதி நிறுவனத்துக்கு சொந்தமான 23 ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது .
இந்த நிலத்தில் விவசாயமே செய்யாமல் பல வருடங்களாக அரசு வழங்கும் பயிர் காப்பீடு இழப்பீடு தொகை பெற்று விஜய் சுபம் பெனிபிட் நிதி நிறுவன உரிமையாளர் வந்துள்ளார் என்றும் அரசை ஏமாற்றி பல கோடி ரூபாய் பெற்று கொண்டு அரசுக்கு இழப்பு உள்ளதாகவும் இதற்கு எல்லாம் உடந்தையாக பல லட்சம் லஞ்சம் பெற்றுக் கொண்டு வருவாய் ஆய்வாளர் ஊழல் முறைகேட்டு செய்து வந்து இருந்ததாகவும் கிராம பொதுமக்கள் குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.
அது மட்டும் இல்லாமல் தற்போது 23 ஏக்கர் விவசாய நிலத்தை சுற்றி காம்பவுண்ட் சுவர் அமைக்கப் பட்டுள்ளது. ஆனால் விவசாய நிலத்தை சுற்றி காம்பவுண்ட் அமைப்பதற்கு அரசு அனுமதி பெற வேண்டும் என்றும் ஆனால் இந்த நிறுவனம் அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக விவசாய நிலத்தை சுற்றி காம்பவுண்ட் அமைத்திருப்பதாகவும் இதனால் இந்த நிலத்தை சுற்றியுள்ள விவசாய நிலங்களுக்கு விவசாயிகள் விவசாய உபகரணங்களை எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.அதுமட்டு மில்லாமல் இந்த 23 ஏக்கர் நிலத்திற்குள் நீர் நிலைகள் இருப்பதாகவும் நீர் நிலைகளை ஆக்கிரமித்து இந்த காம்பவுண்ட் சுவர் அமைத்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலத்தில் விவசாயமே செய்யாமல் அரசு வழங்கும் எல்லாவித கடன் மற்றும் இழப்பீட்டுத் தொகையாக பல கோடி ரூபாய் மோசடியாக பெற்று வந்துள்ளார் என்ற குற்றச்சாட்டையும் அப்பகுதி மக்கள் வைத்துள்ளனர். அரசு பணத்தை மோசடியாக பெறுவதற்கு கிராம நிர்வாகி அதிகாரி (VAO) உடந்தையாக இருந்துள்ளனர் என்ற குற்றச்சாட்டையும் கிராம பொதுமக்கள் வைத்துள்ளனர். அதனால்தான் விவசாய நிலத்தில் காம்பவுண்டு சுவர் எழுப்பியதற்கு VAO கண்டும் காணாமல் இருப்பதாகவும் இதனால் ஊர் பொதுமக்கள் அனைவரும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியாளரிடம் இது சம்பந்தமாக புகார் அளிக்க உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் விவசாய நிலத்தை சுற்றி காம்பவுண்ட் சுவர் எழுப்புவது தொழிற்சாலையாக மாற்றுவதற்கு தான் என்றும் விவசாய நிலங்களுக்கு நடுவில் தொழிற்சாலை அமைந்தால் சுற்றி இருக்கும் விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் ஆகவே இந்த நிலத்தில் எந்த தொழிற்சாலையும் வரக்கூடாது என்றும் கிராமப் பொதுமக்கள் அனைவரும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.
எது எப்படியோ பணம் வைத்திருக்கும் முதலைகளின் பிடியில் இருக்கும் விவசாய நிலங்கள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வணிகமயமாக்கப்படுவது தான் நிதர்சனமான இருக்கிறது. ஆகவே அரசு அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக விவசாய நிலங்களை தொழிற்சாலைகளாக மாற்றுவதற்கு அரசு அதிகாரிகள் உடந்தையாக இருந்தால் வருங்காலங்களில் விவசாயத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் ஏழை எளிய மக்கள் மட்டுமல்ல அரசு அதிகாரிகளின் குடும்பங்களும் உணவுக்காக பிச்சை எடுக்கும் அளவிற்கு கொண்டு போய் விட்டு விடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
ஆகவே கிராமப் பொதுமக்களின் கோரிக்கையின் மீது மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக முதல்வர் இது போன்ற நிதி நிறுவனங்கள் வைத்திருக்கும் விவசாய நிலங்களின் உண்மை தன்மையை ஆய்வு செய்ய நேர்மையான உயர் அதிகாரிகளை நியமித்து மோசடி செய்தவர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுப்பதுடன் விவசாயத்தை நம்பியுள்ள விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாகும்.
இது சம்பந்தமாக வருவாய் ஆய்வாளர் மற்றும் நில அளவையர் சம்பவ இடத்திற்கு சென்றதாகவும் கிராம பொதுமக்களிடம் அழைத்து பேசியதாகவும் அப்போது கிராம பொதுமக்களிடம் அந்த நிலம் 5 வருடமாக தரிசாக இருப்பதால் அவர்கள் சுற்றுச்சுவர் எழுப்புவதற்கு அனுமதி இருக்கிறது என்று தெரிவித்துள்ளார் .அதற்கு கிராம பொதுமக்கள் ஐந்து வருடம் தரிசாக இருக்கும் நிலத்திற்கு எப்படி பயிர் காப்பீடு இழப்பு காப்பீடு வருவாய் துறையில் வழங்கியுள்ளீர்கள் என்று வருவாய் ஆய்வாரிடம் கேள்வி கேட்டுள்ளனர்.இதற்கு உடந்தையாக பல லட்சம் லஞ்சம் பெற்றுக் கொண்டு நீங்கள் செயல்படுகிறீர்கள் என்று கிராம பொதுமக்கள் வருவாய் ஆய்வாளர் மீது குற்றம் கூறியுள்ளனர் . அதன்பின்பு வருவாய் ஆய்வாளர் கிராம பொதுமக்களிடம் நிலத்தின் உரிமையாளரையும் ஊர் பொதும்க்களையும் வைத்து பேசி முடிவெடுப்போம் என்று கூறியதற்கு கிராம பொதுமக்கள் அதற்கு சம்மதிக்கவில்லை என்றும் பல லட்சங்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டு இந்த 20 ஏக்கர் நிலத்திற்கு பல ஆண்டுகளாக பல கோடி பயிர் காப்பீடு இழப்புத்தொகை பெற்றுக் கொடுத்து ஊழல் முறைகேட்டில் ஈடுபட்ட வருவாய் ஆய்வாளர் மீது மாவட்ட ஆட்சியர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் ஊர் பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.