பழனியில் இரவு நேரங்களில் தடை செய்யப்பட்ட சேவல் சண்டை சூதாட்டம் அதிர்ச்சி வீடியோ!
சினிமா பட பாணியில் சூதாட்ட கும்பலை சுற்றி வளைத்து தட்டி தூக்கி கைது செய்த பழனி துணை காவல் கண்காணிப்பாளர்
பழனியில் இரவு நேரங்களில் தடை செய்யப்பட்ட சேவல் சண்டை சூதாட்டம் அதிர்ச்சி வீடியோ!
சினிமா பட பாணியில் சுற்றி வளைத்து சூதாட்ட கும்பலை கைது செய்த பழனி துணை காவல் கண்காணிப்பாளர்!
தமிழகத்தில் சேவல் சண்டை போட்டி தடை செய்யப்பட்டுள்ளது. சேவல் சண்டைகள் நடத்தப்பட்டால் உரிய அனுமதி பெற்று நடத்தப்பட வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. ரகசியமாக சேவல் சண்டையில் ஈடுபட்டு சூதாட்டத்தில் ஈடுபடுபவர் மீது
கடுமையான நடவடிக்கையை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது.
பண முடிப்பு, கவுரவம் என்று இருந்த சேவல் சண்டையில் சூதாட்டம் கலந்தது. இதன் விளைவு சேவல் சண்டை நடக்கும் இடங்களில் மனிதர்களிடையே கைகலப்பு, அடி-தடி என தொடங்கி கொலை சம்பவங்கள் வரை சென்றுவிட்டது. இதனால், தமிழகத்தில் சேவல் சண்டைக்கு தமிழ்நாடு காவல் துறை தடை
விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால்
திண்டுக்கல் மாவட்டம் பழனி கீரனூர் அருகே கள்துறை பகுதியில் உள்ள தென்னத் தோப்பில்
சேவல் சண்டை சூதாட்டத்தில் ஒரு கும்பல் ஈடுபட்டு வருவதாக
பழனி துணை காவல் கண்காணிப்பாளருக்கு
வந்த ரகசிய தகவலின் படி பழனி துணைக் காவல் கண்காணிப்பாளர் தனஞ்ஜெயன் தலைமையில் காவல் ஆய்வாளர் சிவக்குமார் காவல் சார்பு ஆய்வாளர் ராம பாண்டியன் கார்த்திக் முனிராஜ் அடங்கிய தனிப்படை காவல்துறையினர்
சினிமா பட பாணியில் ஆங்காங்கு ஒவ்வொரு இடமாக நுழைந்து ரகசியமாக சோதனையிட்டனர்.
கள்துறை அருகே உள்ள தென்னந்தோப்பில் சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் சிலர் ஈடுப்பட்டு இருந்தனர். . இதையடுத்து போலீசாரை பார்த்ததும், அங்கிருந்தவர்கள் தப்பி ஓட முயற்சித்தனர். அவர்களை பழனி துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சென்ற தனிப்படை காவல்துறையினர் மடக்கி பிடித்து விலை உயர்ந்த ஆறு கார்கள் 20 பைக்குகள் நகைகள் 25க்கும் மேற்பட்ட கட்டு சேவல்கள் ரொக்கப் பணம்
என அனைத்தையும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்து செய்த கார் இருசக்கர வாகனங்களை காவல் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்களை அதிரடியாக பழனி காவல்துறையினர் கைது செய்ததை அப்பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.