காவல் செய்திகள்

பழனியில் பேக்கரியில் வேலை செய்த ஊழியர் உயிரிழந்ததில் மர்மம் இருப்பதாக அதிர்ச்சி தகவல்! காவல்துறை புலன் விசாரணை செய்யாதது ஏன்!?

பழனியில் பேக்கரியில் வேலை செய்த ஊழியர் மின்சாரம் தாக்கி இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. தற்போது பேக்கரியில் வேலை செய்த ஊழியர் கணேஷ் உயிரிழந்ததில் சந்தேகம் மற்றும் மர்மம் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வந்துள்ளது .


திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அக்ஷயா பள்ளி எதிரில் கோவை சிட்டி கார்னர் என்ற பேக்கரி உள்ளது .
இந்த பெயர் கொண்ட பேக்கரி பழனி நகரம் முழுவதும் ஏழு கிளைகள் உள்ளது.
சுமார் இந்த ஏழு பேக்கரிளையும் 40க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் உள்ளனர்.
சிட்டி கார்னர் பேக்கரியின் உரிமையாளர் சுப்பிரமணி கேரள மாநிலத்தை சேர்ந்தவர். கடந்த 18/9/2023 திங்கட்கிழமை மாலை சிட்டி கார்னர் பேக்கரியில் வேலை செய்யும் கணேஷ் என்ற இளைஞர் சுமார் மாலை 3.30 மணி அளவில் பேக்கரியில் உள்ள மேனேஜரிடம் 50 ரூபாய் வாங்கிக்கொண்டு சாப்பிட்டு வருகிறேன் என்று சென்றவரை 4.30 மணி வரை பேக்கரியில் உள்ளவர்கள் தேடவில்லை .
ஆனால் கணேஷ் பேக்கரிக்கு பின்னாடி மின் மோட்டார் பக்கத்தில் மயக்க நிலையில் இருந்துள்ளார் .
.பின்பு பேக்கரியில் உள்ளவர்கள் ஓடிப்போய் மயக்கம் நிலையில் இருந்த ஊழியரை முகத்தில் தண்ணீர் அடித்து பார்த்திருக்கிறார்கள் .

மேலும் அருகில் இருந்த பெண் செவிலியர்கள் இரண்டு பேர் வந்து கைநாடியை பிடித்து பார்த்திருக்கிறார்கள் அப்பொழுது உயிர் நாடித்துடிப்பு இருந்துள்ளது. உடனே ஆட்டோவுக்கு போன் செய்திருக்கிறார்கள் ஆட்டோகாரர் சவாரி சென்றுள்ளதாக சொல்லி வர தாமதமானதால் மீண்டும் பேக்கரி ஊழியர்கள் ஆம்புலன்ஸ் க்கு போன் செய்து பழனி நகர மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பரிசோதித்த பார்த்த மருத்துவர் ஏற்கனவே
உயிர் பிரிந்து விட்டது என்ற கூறியுள்ளார். இது சம்பந்தமாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர் காவல்துறையினர் உயிரிழந்ததற்கான உண்மையான காரணம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் பேக்கரி ஊழியர் கணேஷ் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக கூறுவதில் மர்மம் இருப்பதாகவும் போலியரின் உடம்பில் ஒரு சில காயங்கள் இருந்ததாகவும் பேக்கரியில் வேலை பார்க்கும் ஊழியர்கள் மற்றும் அருகில் இருக்கும் நபர்கள் சந்தேகப்படுகிறார்கள் என்ற தகவல் வந்துள்ளது.

சம்பந்தமாக பக்கத்தினரிடம் நடந்த சம்பவத்தை விசாரித்த போது பேக்கரி இருக்கும் கட்டிடத்திற்கு பின்னாடி ஒரு மோட்டார் இருக்கிறது .அதிலிருந்து தான் நான்கு கடைக்காரர்கள் தண்ணீரை பயன்படுத்துகிறார்கள்.
மூன்று நாட்களுக்கு முன்பு தான் மோட்டார் பழுது பார்ப்பவர் வந்து மோட்டாரரை சரி செய்து கொடுத்துள்ளார் . சரி செய்த மோட்டாரில் எப்படி மின்சாரம் தாக்கி இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதேபோல் ஊழியர்கள் சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் தான் ஒதுக்கப்படுகிறது. மட்டுமில்லாமல் பேக்கரியில் உள்ள வேலை செய்பவர்கள் அனைவருக்கும் குடோனில் இருந்து உணவு வந்துவிடும் ஆனால் சம்பவத்தன்று மட்டும் உயிரிழந்த கணேசுக்கு உணவு இல்லை என்றும் 50 ரூபாய் கொடுத்து கடையில் சாப்பிட சொல்லி இருக்கிறார்கள் அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை .உயிரிழந்தவரின் உடல் கூறு மருத்துவ பிரோத பரிசோதனையில் மின்சாரம் தாக்கி தான் இறந்தாரா என்பதற்கு மருத்துவ பரிசோதனை சான்றிதழ் பார்த்தால் தான் தெரியும். அது மட்டுமில்லாமல் உயிரிழந்த காரணத்தை கண்டுபிடிக்க காவல்துறை புலன் விசாரணை செய்ய வேண்டும் என்றும்
இனிமேலாவது கடையில் வேலை செய்யும் ஊழியர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் நடக்காமல் தடுக்க காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பேக்கரியின் கட்டிடத்தில் ஊழியர் உயிரிழந்ததற்கு பேக்கரியின் உரிமையாளர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உயிரிழந்த கணேசை இழந்து வாடும் தாய் தந்தை தம்பி இருக்கும் குடும்பத்திற்கு இழப்பீடாக என்ன கைமாறு செய்யப் போகிறார் பேக்கரி உரிமையாளர்!? காவல்துறை நினைத்தால் உயிரிழந்த கணேசன் குடும்பத்திற்கு பேக்கரி உரிமையாளரிடமிருந்து இழப்பீடு நிவாரணம் பெற்று தர முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். பொறுத்திருந்து பார்ப்போம் காவல் துறையின் அடுத்த கட்ட நடவடிக்கையை!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button