Uncategorizedகனிமவளத்துறை

பழனியில் சட்ட விரோதமாக இயற்கை கனிம வளங்களை வெட்டி கடத்திச் செல்ல பல லட்சம் லஞ்சம் பெற்று உடந்தையாக செயல்படும் திண்டுக்கல் மாவட்ட (கனிம வளம்)உதவி இயக்குனர் மற்றும் பழனி கோட்டாட்சியர்  மீது
நடவடிக்கை  எடுக்க தயங்கும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்!  நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர் !

இயற்கை வளங்களில் உள்ள செம்மண், விவசாயத்திற்கே விவசாய நிலங்களை பண்படுத்தவோ சீர்படுத்தவோ பயன்படுத்தாமல் பல்வேறு தனியார் சேம்பர் மற்றும் புகாரிகள் நடத்தும் உரிமையாளர்களின் டிப்பர் லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. இது முழுக்க முழுக்க சமூக சொத்தை கனிம வளமான செம்மண்ணை கொள்ளையடிப்பதாகும் எனதேசத்தின் சொத்துக்களான கனிம வளங்களை சட்டவிரோதமாக சுரண்டுவதை அனுமதிக்க கூடாது எனவும்கனிம வளங்களை எடுத்துச்செல்வதற்கும் சுற்றுச்சூழல் தடையில்லா சான்றிதழ் கட்டாயம் கனிம வளங்களை எடுப்பதில் மிகப்பெரிய அளவில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும்


சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு உட்பட்ட 14 மாவட்டங்களில், கிராவல் மண் குவாரி,  சிறு கனிமங்கள் சட்டப்படி நடத்த உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அனுமதி பெற்றுள்ள கல்குவாரிகளின் மேற்பகுதியில் உள்ள கிராவல் மண்,  எடுக்க மட்டுமே உயர் நீதிமன்றம் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள சட்ட விதிமுறைகளை எல்லாம் காற்றில் பறக்க விட்டு தற்போது
திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், மேற்கு ஆயக்குடியில் உள்ள பல பகுதிகளில் சட்டவிரோதமாக  கனிம செம் மண் வெட்டி கடத்தி செல்லும்  கொள்ளையை உடனடியாக தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்குகல் குவாரி எதிர்ப்பு இயக்கம்,
ந.சண்முகம், ஒருங்கிணைப்பாளர் வீடியோ மட்டும் புகைப்படம் ஆதாரங்களுடன் புகார் மனு அனுப்பியுள்ளார்.


அந்தப் புகார் மனுவில் தெரிவித்திருப்பது என்னவென்றால்
திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், மேற்கு ஆயக்குடி பகுதியில்  சட்டவிரோதமாக அனுமதியில்லாமல் தினமும் நூற்றுக் கணக்கான டிப்பர் லாரிகளில் கனிம செம் மண் கொள்ளையை
சட்டவிரோதமாக  தினமும் நூற்றுக் கணக்கான டிப்பர் லாரிகளில் செம்மண் மற்றும் வண்டல் மண் ஜேசிபி இயந்திரங்கள்  செம்மண் மற்றும் வண்டல் மண் வெட்டி எடுத்து  கடத்தி வரும் கொள்ளையை உடனடியாக தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க கோரி அரசாணை 135/2009 மற்றும் அரசாணை 170/2020ன் படி  ஆதாரங்களுடன் இரண்டாவது முறையாக புகார் மனு என்றும்
கனிமக் கடத்தலை தடுக்க வேண்டிய பொறுப்பில் உள்ள அதிகாரியான தங்களிடம், கனிமக் கடத்தல் – சமூக சொத்து கொள்ளை போவது தொடர்பாக ஆதாரங்களுடன், சென்ற மாதங்களாக பல நாட்களாக தொடர்ந்து வாட்ஸ்அப் வழியாக புகார் கொடுத்தும், அலைபேசியில் அழைத்துப் பேசியும் வருகிறோம்.
ஆனால் சப்தவிரோதமாக அனுமதி இல்லாமல் கனிம வளம் வெட்டி கடத்தல் நடப்பது நிற்கவில்லை. அதற்குப் பதிலாக,  திண்டுக்கல் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் விஜயராகவன் , 

பழனி கோட்டாட்சியர் சரவணன்,  எங்களுக்கு துணையாக இருப்பதால் எங்களை எதுவும் செய்ய முடியாது என அனைவரிடம் கூறிக்கொண்டு,  கனிமக் கொள்ளையில் ஈடுபட்டு வரும் கிராவல் மண் கொள்ளையர்கள் மீது,  போர்கால அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு உட்பட்ட 14 மாவட்டங்களில், கிராவல் மண் குவாரி,  சிறு கனிமங்கள் சட்டப்படி நடத்த உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அனுமதி பெற்றுள்ள கல்குவாரிகளின் மேற்பகுதியில் உள்ள கிராவல் மண்,  எடுக்க மட்டுமே உயர் நீதிமன்றம் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் தற்போதும்  திண்டுக்கல் மாவட்டம், மேற்கு ஆயக்குடி உட்பட பழனி கோட்டத்தில் பல கிராமங்களில் உள்ள பல்வேறு சேம்பர்களுக்கு  சட்டவிரோதமாக  தினமும் நூற்றுக் கணக்கான டிப்பர் லாரிகளில் செம்மண் அள்ளி  கடத்தி கனிமக் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ச்சியாக இப்பகுதிகளில் செம்மண் கொள்ளை நடந்து வருகிறது. இந்த திருட்டை பழனி கோட்ட வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் கைகட்டி வேடிக்கை பார்த்து வருகின்றனர். கனிமம் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகளைத் தவிர யாரும் இந்த கனிமவள திருட்டை தடுக்க கிராம நிர்வாக அலுவலர் மற்றும் காவல் ஆய்வாளர் முதல் அனைவரும் தடுத்து நிறுத்த அரசு அரசாணை பிறப்பித்தும் தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று கண்டுகொள்ளாமல்  இருப்பது வேதனைக்குரிய விசயம். பட்டா நிலங்களில் செம்மண் அள்ள யார் அனுமதி கொடுத்தது என்று கேட்டால் பதில் இல்லை. முறையாக மாவட்ட கனிமம் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் செம்மண் அள்ள அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் கூறிய பின்பும் தற்போது செம்மண் திருட்டு நடைபெறுவதை தடுக்க உடனடியாக தகுந்த விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்து தடுத்து நிறுத்தப்படாவிடில் பொறுப்பு அதிகாரிகள் பெயரிட்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு (Contempt of court)* நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவீர்கள் என்று தெரிவித்துக் கொள்வதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button