சுகாதாரமற்ற நிலையில் சாலைகளில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் பக்தர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம்! பழனி மாநகராட்சி நிர்வாகத்தின் அவல நிலை!திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா!?
சுகாதாரமற்ற நிலையில் சாலைகளில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் பக்தர்கள் அவதி கோமாவில் இருக்கும் பழனி மாநகராட்சி!
திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பழனி நகராட்சி இந்திய புகழ்பெற்ற ஆன்மீக சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாகும்.
பழனி மலையில்
பழனி பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.இங்குள்ள முருகனது சிலை போகர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது.
18 சித்தர்களில் ஒருவரான போகரால் ஒன்பது வகை பாசாணத்தைக் கொண்டு செய்த புகழ் பெற்ற முருகன் சிலை, மலைக்கோயிலில் இருக்கிறது.
அறுபடை வீடுகளில் ஒன்றான திருஆவினன்குடி கோவிலும் உள்ளது. 2013 ஆம் ஆண்டில் சங்ககால ஓவியங்கள் ஆண்டிப்பட்டி மலை, பழனியில் கண்டுபிடிக்கப்பட்டன.
பழனி திருவிழாக்களுக்கு பெயர்பெற்ற ஊராகும்.
இங்கு நடக்கும் குறிப்பிடத்தக்க திருவிழாக்கள்:
தைப்பூசம்
பங்குனி உத்திரம்
சூரசம்ஹாரம் [5] ஆகும்.
பஞ்சாமிர்தம் – மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு பிரசாதம்.
தங்கத் தேர் வழிபாடு
காவடி சுமந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் நேற்று கடனை செலுத்த வருவது வழக்கம்.
அதேபோல் கோவிலுக்கு வழிபட வரும் பக்தர்களும் அலை கடல் போல் வந்து முருகனை தரிசனம் செய்வார்கள்.
தமிழ்நாடு மட்டுமல்ல கேரளா கர்நாடகா லட்சக்கணக்கான பக்தர்கள் கார்த்திகை மாதம் முருகனுக்கு மாலை போட்டு விரதம் இருந்து தைப்பூசம் வரை நேர்த்திக் கடனை செலுத்தி வருவார்கள்.
ஆகையால் தற்போது கார்த்திகை மாதமாக இருப்பதால் பழனி முருகன் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனை வழிபட வந்து கொண்டுள்ளனர்.
பழனி பேருந்து நிலையத்திலிருந்து பழனி முருகன் கோவில் அடிவாரத்தில் உள்ள கிரிவீதி, சன்னதிவீதி, திருஆவினன்குடி கோவில் ஆகிய இடங்களில் மற்றும் இதேபோல் மலைக்கோவிலுக்கு செல்லும் வழிகளான குடமுழுக்கு நினைவரங்கம், படிப்பாதை, மின்இழுவை ரெயில்நிலையம், பாதவிநாயகர் கோவில் ஆகிய இடங்களில் வரை சாலைகள் முழுவதும் கழிவு நீர்கள் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுவதாகவும் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாகவும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகம் சுளித்து செல்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
அதுமட்டுமில்லாமல் சாலைகளில் சுகாதாரமற்ற தேங்கி நிற்கும் கழிவு நீரால் கொசுக்கள் அதிகமாக இருப்பதாலும் இரவு நேரங்களில் சாலை ஓரங்களில் தூங்க முடியாமல் அவதிப்பட்டு வருவதாகவும் சுகாதாரமற்ற நிலையில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் தொற்று நோய் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். இது சம்பந்தமாக பக்தர்கள் பலமுறை மாநகராட்சிக்கு புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆகவே பழனி மாநகராட்சி ஆணையர் மற்றும் மாநகராட்சித் தலைவர் அவர்கள் இரண்டு பேரும் உடனே மலைக்கோயில் செல்லும் பாதைகளில் சுகாதாரமற்ற நிலையில் இருக்கும் கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் .
கார்த்திகை மார்கழி தை இந்த மூன்று மாதங்களுக்கு பழனி முருகனை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள் என்பதை பழனி மாநகராட்சி ஆணையர் மற்றும் மாநகராட்சி தலைவர் மனதில் கொண்டு பழனி பழனி மலைக்கோவில் செல்லும் பாதை மற்றும் மலைகளை சுற்றி வரும் பாதைகளை தூய்மையாக வைத்துக்கொள்ள போர்க்கால அடிப்படையில் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று பக்தர்களின் கோரிக்கையாகும்.
பழனி சுகாதாரத்துறை சார்பில் பஸ்நிலையம், கோவில் நுழைவு வாயில் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆணையர், பழனி நகராட்சி
மின்னஞ்சல் : commr[dot]palani[at]tn[dot]gov[dot]in
பதவி : ஆணையர், பழனி நகராட்சி
கைபேசி எண் : 7397396277
தொலைபேசி எண் : 04545-242214