காவல் செய்திகள்

பழிவாங்க நினைத்து உயிரை பலி கொடுத்த துயரம்!காவல் நிலையத்திற்குள் விஷம் அருந்த வில்லையா?   பின்னியில் யார்!?நடந்தது என்ன!?திடுக்கிடும் தகவல்! நேர்மையான விசாரணை நடத்த டிஜிபியிடம் நேரில் கோரிக்கை மனு!

அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் பூச்சிக்கொல்லி மருந்து அருந்தி தற்கொலை முயற்சி செய்த பாண்டி விவசாயி இல்லை!மது போதையில் இருந்த பாண்டி காவல் நிலையத்திற்கு வரும் முன் விஷம் அருந்தி விட்டு காவல் நிலையத்திற்கு வந்ததாக  திடுக்கிடும் தகவல்!


விரைவில்  காவல்துறையின் பிடியில் குற்றவாளிகள்…

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் கடந்த /07/02/2023 அன்று மாலை 5.45 மணி அளவில் காவல் நிலையத்திற்கு மது போதையில் வந்த குள்ளலக்குண்டு கிராமம் கன்னிமாநகரைச் சேர்ந்த ராமர் மகன் பாண்டி என்பவர் கையில்
பூச்சிக் கொல்லி மருந்தை வைத்துக் கொண்டு  குடித்து தற்கொலை செய்யப் போகிறேன் என்று பெண்  காவல் ஆய்வாளர் சண்முக லட்சுமியிடம் வாக்குவாதம் செய்த சிறிது நேரத்தில்  காவல் நிலையத்தின் வாசலில் உள்ள சி சி டிவி கேமரா முன்பு நின்று கொண்டு பச்சை நிற சூஸ் பாட்டிலை திறந்து தலையில் ஊற்றி விட்டு

கீழே உட்கார்ந்தவுடன் ஒரு காவலர் ஓடி வருகிறார்.

உடனே காவல் நிலையத்தில் உள்ளே இருந்த உதவி காவல் ஆய்வாளர் பெண் காவலர் காளீஸ்வரி,பெண் காவல் ஆய்வாளர் சண்முக லட்சுமி இவர்கள் அனைவரும் அருகில் வந்த பேசுகிறார்கள். அதன் பின்பு மயங்கி விழுகிறார்.

காவல் ஆய்வாளர் சண்முக லட்சுமி காவல் உதவி ஆய்வாளர், பெண் காவலர் காளீஸ்வரி

உடனே ஆய்வாளர்  சண்முக லட்சுமி நிலக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் முருகன் அவர்களை தொலைபேசியில்  தொடர்பு கொண்டு அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகி ராமமூர்த்தி என்பவர்  தான் வேண்டு மென்று பாண்டியை அழைத்து வந்து பாண்டி தம்பி டாஸ்மாக்கில் வேலை பார்க்கும் முனியாண்டி இடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு வழக்குப்பதிவு செய்யச் சொல்லி பிரச்சனை செய்து வருகிறார் என்று தகவல் தெரிவிக்கிறார்.
அதன் பின்பு காவல் நிலையத்திற்கு ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்துள்ளனர் . சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் வருகிறது. மயங்கி விழுந்து கிடந்த  பாண்டியை நிலக்கோட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி  ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனரிடம் காவல் ஆய்வாளர் கூறியுள்ளார்.  ராமமூர்த்தி நிலக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு சென்றுள்ளார். ஆம்புலன்ஸ் வாகனத்தை பின்தொடர்ந்து காவல் உதவி ஆய்வாளர் சேகர் நிலக்கோட்டை மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

நிலக்கோட்டை அரசு மருத்துவ மனையில் பாண்டிக்கு முதலுதவி செய்த போது

அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பரிசோதனை செய்து உடனே திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும்படி கூறியுள்ளனர். உடனே திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு மயங்கி  இருந்த பாண்டியை அழைத்துச் சென்றுள்ளனர்.

நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் பாண்டியிடம் ராமமூர்த்தி பேசிக் கொண்டிருந்த போது2023 பிப்ரவரி 7 ஆம் தேதி இரவு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  மருத்துவர்கள்  பாண்டியின் வயிற்றில் உள்ள பூச்சிக்கொல்லி மருந்தை வெளியே எடுப்பதற்கு  முயற்சி செய்தும் பூச்சிக்கொல்லி மருந்து வெளியே எடுக்க முடியவில்லை.  மது அருந்திவிட்டு பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததால் பூச்சிக்கொல்லி மருந்தை வெளியே எடுக்க முடியவில்லை என்றும் உயிரைக் காப்பாற்ற முயற்சி எடுத்தும் சிகிச்சை பலனளிக்காமல் 9ஆம் தேதி காலையில் பாண்டி உயிரிழந்து விட்டார் என்ற தகவலை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.உடனே அம்மையநாயக்கனூர் காவல்துறை மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அதன் பின்பு இந்த வீடியோ பதிவு காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியதால் உடனே திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெண் காவல் ஆய்வாளர் சண்முக லட்சுமியை
உடனடியாக  ஆயுதப் படைக்கு பணியிடமாற்றம் செய்தார். ஆனால் பெண் காவல் ஆய்வாளரை பணி  நீக்கம் செய்ய வேண்டும் என்று தற்கொலை செய்த பாண்டியன் தம்பி முனியாண்டியை வைத்துக்கொண்டு அம்பேத்கர் மக்கள் இயக்கம் மாவட்ட நிர்வாகி ராமமூர்த்தி  தொடர்ந்து வலியுறுத்தி வந்தார் .அதன் பின் ஒரு சில நாட்களில் காவல் ஆய்வாளர் சண்முக லட்சுமியை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்பு  காவல் நிலையத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்த சம்பவத்தை முன்னிலைப்படுத்தி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியாளர் மற்றும் மாவட்ட காவல் அலுவலகம் முன்பு ஒரு சில கட்சி மற்றும் விவசாய சங்கங்களுடன் ராமமூர்த்தி இணைந்து தற்கொலை செய்த பாண்டி ஒரு விவசாயி என்றும் அவரது நிலத்தை நில மாபியா கும்பல் அபகரிப்பு செய்ததாகவும்

காவல் ஆய்வாளரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் உயிரிழந்த பாண்டி குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும் உயிரிழந்த பாண்டியின்  குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும் என்றும்  இதற்குக் காரணமான  (ஓய்வு பெற்ற காவல் உயர் அதிகாரி  ) நில மாபியாக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

இதைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் நடந்த உயிரிழந்த பாண்டியின் மர்ம மரணத்தில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டி சி பி ஐ எம் எல் கட்சி போராட்டம் நடத்தியது.

சிபிஐ ML. ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம்.

அப்பாவி கூலித் தொழிலாளிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டி பாண்டி மரணத்திற்கு காரணமான பணம் பறிக்கும் கட்டப்பஞ்சாயத்து கும்பலை கைது செய்ய வேண்டிய சிபிஐ எம் எல் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்து கோரிக்கை விடுத்தனர்.

அப்பாவிகள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளதாகவும் இந்த நிலையில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரியின் மகன் மற்றும் அவரது தோட்டத்தில் வேலை செய்த மேலாளர் நாச்சியப்பன் இரண்டு பேரும் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு  அளித்துள்ளனர். அந்தக் கோரிக்கை மனுவில் சில அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய விவசாய சங்கங்களை தூண்டிவிட்டு ராமமூர்த்தி என்பவர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் முன்பு போராட்டம் என்ற பெயரில் நேர்மையான அதிகாரியாக இருந்த முன்னாள் காவல்துறை அதிகாரி குடும்பத்தின் மீது அவதூறு பரப்புவதாகவும் இதனால் குடும்பத்தில் அனைவருக்கும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் . எங்கள் குடும்பத்தில் இருக்கும் யாரும் யாரையும் எப்போதும் மனது புண்படும் வகையில் நடந்து கொண்டது இல்லை என்றும் பாண்டி என்பவர் விஷம் அருந்தி தற்கொலை செய்ததற்கு அவர்கள் குடும்பத்தில் நடந்த பிரச்சனை தான் என்றும் அந்த தற்கொலைக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் ஆகவே நடந்த சம்பவத்தை  நேர்மையான முறையில் விசாரித்து எங்கள் மீது தேவையில்லாமல் பழி சுமத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காவல்துறை இயக்குனர்  சைலேந்திரபாபு அவர்களிடம் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியின் மகன் மனு கொடுத்துள்ளதாகவும் தகவல்.

கைது செய்யப்பட்ட நாச்சியப்பன் மற்றும் ஓய்வு பெற்ற காவல் உயர் அதிகாரியின் மகன் டிஜிபி சைலேந்திரபாபு விடம் கோரிக்கை மனு

அதேபோல் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியின் தோட்டத்தில் மேலாளராக இருக்கும் நாச்சியப்பனும் காவல்துறை இயக்குனர்  அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்துள்ளார் .அதில்  திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா குள்ளலக் குண்டு கிராமம் கன்னிமா நகரைச் சேர்ந்த பாண்டி  விஷம் அருந்தி தற்கொலை செய்து செய்து கொண்டார்.  2018 ஆண்டு  பாண்டி சந்தன மரம் வெட்டி  கடத்திய வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்ததால் என் மீது பழி வாங்கும் நோக்கத்துடன்   தற்கொலை செய்து கொண்ட பாண்டி, ராமமூர்த்தி ,மகாராஜன் ,அழகுமலை, முனியாண்டி இவர்கள் ஐந்து பேரும் சேர்ந்து தொடர்ந்து பொய் புகார்கள் கொடுத்து வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளதாகவும்  .நான் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்த நபராக இருப்பதால் என்னுடைய வளர்ச்சியை பிடிக்காத விஷம் அருந்தி தற்கொலை செய்த பாண்டியின் தம்பி முனியாண்டி மற்றும் அவருடன் இருக்கும் ஒரு சிலர் தேவையில்லாமல் ஜாதிப் பெயரைச் சொல்லித் திட்டுவதும் அதுமட்டுமில்லாமல் விஷம் அருந்தி தற்கொலை செய்த பாண்டியின் தம்பி (டாஸ்மாக்கில் வேலை செய்யும் ஊழியர் )முனியாண்டி தன்னுடைய மனைவியை பஞ்சாயத்து தேர்தலில் தலைவர் பதவிக்கு நிற்க வைத்து 35லட்சம் வரை பணம் செலவு செய்தார் அதில் நான்கு லட்சம் ரூபாய் சின்ன கருப்புவை அழைத்துக் கொண்டு ஒரு ஓட்டுக்கு 500 ரூபாய் வீதம் 900 ஓட்டுக்கு 4 லட்சம் ரூபாய் கொடுத்தும் முனியாண்டியின் மனைவி தோற்றுவிட்ட காரணத்தால் அந்தப் பணத்தை  திருப்பி வாங்கி கொடுக்குமாறு சின்ன கருப்புவிடம் முனியாண்டி கேட்டுள்ளார். சின்னக் கருப்பு பணத்தை திருப்பி கேட்டு வாங்கி தர முடியாது என்று சொன்னதற்கு நாச்சியப்பன் இடம் கேட்டு வாங்கி கொடுக்குமாறு அவரை மிரட்டி உள்ளனர் .அதன் பின்பு காவல் நிலையத்தில் சென்று எங்கள் மீது பணம் வாங்கியாதாக முனியாண்டி  பொய் புகாரையும் கொடுத்தார் . அந்தப் புகார் சம்பந்தமாக விசாரணை செய்ததில் எங்களுக்கும் அந்தப் பணம் கொடுத்ததற்கும் சம்பந்தமில்லை என்று எழுத்துப்பூர்வமாக காவல் நிலையத்தில் எழுதி வாங்கிக் கொண்டார்கள்.அந்தப் புகார் மீது சரியாக நேர்மையான முறையில் விசாரணை செய்யாமல் பாண்டி விஷம் அருந்தி தற்கொலை செய்த பின்பு மீண்டும் அந்தப் புகார் மீது  வழக்கு பதிவு செய்து கைது செய்ததால்  மனைவி குழந்தைகளை தனியாக விட்டு சிறையில் மிகவும் சிரமப்பட்டு மன உளைச்சலில் இருந்தேன் .ஆகவே பாண்டி விஷம் அருந்தி தற்கொலை செய்ததற்கு அவர்கள் வீட்டில் நடந்த குடும்பப் பிரச்சினை தான் காரணம் என்றும் எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றும் ஆகவே நேர்மையான முறையில் விசாரணை நடத்தி எங்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகள் மீது நேர்மையான முறையில் விசாரித்து  தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு டிஜிபி அவர்களிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளதாக தகவல்.

விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட பாண்டி யார் !? அவர் என்ன தொழில் செய்தார்!?எதற்கு விஷம் அருந்தி தற்கொலை செய்தார் !?
இது சம்பந்தமாக நடந்த உண்மையை அறிய அந்தப் பகுதியில் ஒரு மாதமாக புலன் விசாரணை செய்தது ரிப்போர்ட்டர் விஷன்  புலனாய்வு குழு. இதில் பல திடுக்கிடும் தகவல்கள் அதிர்ச்சி தரும் தகவல்களை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.7 ஆம் தேதி மதியம் மூன்று மணியிலிருந்து மாலைய கவுண்டம்பட்டி ரயில்வே கேட் அருகில் டாஸ்மார்க் எதிரில் உள்ள ராமமூர்த்தியின் கடையில் பாண்டி மது அருந்தி கொண்டு இருந்தபோது  ராமமூர்த்தி அழகுமலை, முருகன்,  மகாராஜன்  நான்கு பேரும் மது அருந்திக்கொண்டு பேசிக்கொண்டு இருந்ததாகவும் அப்போது மது பாட்டில் அருகே பூச்சிக்கொல்லி மருந்து  (மோனோ பொட்டாஷ்)பாட்டில் இருந்ததாகவும் அப்போது அங்கு வந்த ரமேஷ் என்பவர் பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில் எதற்கு என்று கேட்டுள்ளார் அதற்கு அங்கிருந்த பாண்டி அழகுமலை ராமமூர்த்தி முருகன் ஆகியோர் முனியாண்டி தென்னந்தோப்பிற்கு வாங்கி வர சொன்னார் என்று சொல்லி உள்ளனர் என்ற தகவல் வந்துள்ளது. அதன் பின்பு  5.மணிக்கு கன்னிமா நகர் வீட்டிற்கு பாண்டி வரும்போது அதன் பின்பு அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்திற்கு மது போதையில் இருந்த பாண்டியை அன்பு என்பவரது இருசக்கர வாகனத்தில் ராமமூர்த்தி அனுப்பி இருக்கிறார்.   சிறிது நேரத்தில் அம்மைநாயக்கனூர் காவல் நிலையத்திற்கு  வந்த ராமமூர்த்தி  ஆய்வாளர் சண்முக லட்சுமிமிடம்  பாண்டி மகன் சதீஷ் கண்ணன் கொடுத்த புகார் மீது ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை என்றும்   வழக்கறிஞர் சங்கர் ராமமூர்த்தியை திட்டிய ஆடியோவை வைத்து வழக்கறிஞர் சங்கர்  மற்றும் இதற்கு காரணமான  நாச்சியப்பன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்ய சொல்லி ஆய்வாளரிடம் தகராறு செய்துள்ளார் ராமமூர்த்தி.  போதையில் இருந்த பாண்டி கையில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து தலையில்  ஊற்றியுள்ளார் .மகாராஜனின் உறவினரான பெண் காவலர்  காளீஸ்வரி அவருடன் இருந்த மற்றொரு பெண் காவலரிடம் செல்போனில் வீடியோ பதிவு செய்யச் சொல்லியும் அந்த வீடியோ பதிவை பாண்டியின் தம்பி டாஸ்மாக்கில் வேலை செய்யும் முனியாண்டிக்கு அனுப்பி சமூக வலைதளங்களில் திட்டமிட்டு வெளியிடப்பட்டது என்று  அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் முதலில் இந்த வீடியோவை வெளியிட்டது யார் என்றும் பூச்சிக்கொல்லி மருந்து எந்த கடையில் வாங்கப்பட்டது என்றும் எத்தனை மணிக்கு யார் வாங்கி வந்தார்கள் என்றும் காவல் நிலையத்திற்கு வருவதற்கு முன்பு பாண்டி எங்கு இருந்தார் அவர்களிடம் யார் யார் இருந்தார்கள் என்றும் இதுவரை நிலக்கோட்டை துணைக் காவல் கண்காணிப்பாளர் விசாரணை  நடத்தி கண்டுபிடிக்கவில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை வைத்துள்ளனர்

விஷம் அருந்தி உயிரிழந்த பாண்டியின் உடன் பிறந்த தம்பி முனியாண்டி டாஸ்மார்க் கடையில் வேலை பார்க்கிறார். இவரது நண்பர் ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான (குள்ளலக்குண்டு ரயில்வே கேட் அருகில்  டாஸ்மார்க் எதிரில்) சால்னா கடை  நடத்தி வருகிறார். அந்தக் கடையில் வாட்டர் பாட்டில் பிளாஸ்டிக் கப் , அவிச்ச முட்டை ஆம்லெட் ,வறுத்த சிக்கன் . வறுத்த மீன் விற்பனை செய்து வருகின்றனர். அந்த கடையில் பாண்டி பல வருடங்களாக வேலை  செய்து   வந்துள்ளார்.
அந்தக் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போதே   பாண்டி மீது   ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் பதிவு  செய்யப்பட்டுள்ளது.  அந்த வழக்கில் பாண்டி , அழகுமலை, மகாராஜன், முனியாண்டி ராமர் மற்றும் (பாண்டி மகன் சதீஷ் கண்ணன்).இவர்கள் அனைவரது பெயரும்   உள்ளது.
ஆனால் இதில் முக்கியமாக திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாண்டி மீது உள்ள திருட்டு வழக்குகள் சம்பந்தமாக  விசாரித்த போது உயிரிழந்த பாண்டியின் உறவினர் சொன்ன அதிர்ச்சித் தகவல்  என்னவென்றால் சந்தன மரத்தை வெட்ட ஆட்களை அழைத்து வர சொன்னதாகவும் அதற்கு முடியாது என்று சொன்னவுடன் வருசநாட்டில் இருந்து ஆட்களை அழைத்து வந்த பாண்டி  சௌந்தரபாண்டி என்பவர் தோப்பில் இருந்த மூன்று லட்சம் மதிப்புள்ள மூன்று  சந்தன மரம் வெட்டி கேரளாவுக்கு கடத்தியதாகவும் மற்றும் வேலி போடுவதற்காக  வைத்திருந்த ஒரு லட்சம் மதிப்புள்ள இரும்பு வலை மற்றும் 50 ஆயிரம் மதிப்புள்ள கேபிள் வயர்கள் திருடிச் சென்றுள்ளதாக பாண்டி மீது  சௌந்தரபாண்டியன் மனைவி லதா பூரணம் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் 24/12/1/2018 புகார் கொடுத்ததின் பெயரில் பாண்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது(குற்ற எண் 4/2019 ) என்று கூறினார். மரம் வெட்டி கடத்தியதற்கு  நாச்சியப்பன் மற்றும் சின்ன கருப்பு இரண்டு பேரும் முக்கிய சாட்சியாக இருந்தனர்.


அதே போல் ராமமூர்த்தி நடத்தி வரும் கடை அருகே பாக்கு கம்பெனி உரிமையாளர் மரம் கேட்டதாகவும் அதற்கு மூன்று லட்சம் ரூபாய் பாண்டி பெற்றுக் கொண்டு சிறுமலையில் தோதகத்தி மரத்தை  ஆட்களை வைத்து சட்டவிரோதமாக வெட்டி கொடுத்ததாகவும்  அதுமட்டுமில்லாமல் பாண்டியின் தம்பி முனியாண்டி வீடு கட்டுவதற்கு பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மரங்களை சிறுமலையில் சட்டவிரோதமாக வெட்டி கடத்திக் கொண்டு வந்ததாகவும் உயிரிழந்த பாண்டி மீது அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் பொட்டுசெட்டிபட்டி அரண்மனை தெருவில் உள்ள ஒரு வீட்டில் பாத்திரங்கள் திருடி விற்றதாகவும் உயிரிழந்த பாண்டி மீது ஒரு வழக்கு உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
பள்ளப்பட்டி சிப்காட்டில் உள்ள ஜியோ கம்பெனி அருகில் உள்ள யுவராஜ் கம்பெனியில்  பல லச்சம் மதிப்புள்ள  காப்பர் கம்பிகள் திருடி விற்றதாக பாண்டி மற்றும் பெருமாள் என்ற களவாணி பெருமாள் மீது வழக்குப் பதிவு செய்து உள்ளதாக தகவல்.
கொடைக்கானலில் பூட்டிய வீட்டில் உள்ள பல லட்சம் மதிப்புள்ள பொருள்களை கடத்தி வந்ததாக  பாண்டியின் கூட்டாளி பெருமாள் மீது வழக்குப் பதிவு செய்து உள்ளதாக தகவல் வந்துள்ளது. பாண்டி உயிரிழந்ததற்குப் பின்பு அந்தப் பெருமாளை ராமமூர்த்தி கடையில் வேலைக்கு வைத்துள்ளதாகவும் தகவல்.

நாச்சியப்பன் கொடுத்த புகாருக்கு சாட்சி சொல்லச் சென்ற சின்னக் கருப்பு என்பவரின் மனைவியின் சேலையை பிடித்து இழுத்ததாக  பாண்டி மீது 58/2022 வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.
இதை விட அதிர்ச்சித் தகவல் என்னவென்றால் உயிரிழந்த பாண்டி மீது உள்ள இத்தனை திருட்டு வழக்கிற்கும்  மூளையாக செயல்பட்டு வந்தவர் மகாராஜன் என்பவர் தான் என்கின்றனர். மகாராஜன் மீது நான்கு வழக்குகள் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
1. 2013 இல் விவசாய கிணற்றில் இருந்த மோட்டார் மற்றும் சாட்டர் கேபிள் திருடியதாக குற்ற எண் 120/2013  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
2. அம்பாத்துரையில் உள்ள காவல் நிலையத்தில் பணி செய்த பெண் காவல் உதவியாளர்  இருசக்கர வாகனத்தில் பணிக்குச் சென்றபோது (கொடைரோடு நக்கம் பட்டி பாலம் அருகே ) இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் நகையை பறித்து தப்பி ஓடியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழிப்பறி செய்ய மூன்று பேர் பயன்படுத்திய இருசக்கர வாகனம் மகாராஜனுடையது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நகை பறிப்பு வழக்கில் இருந்து தன்னை காப்பாற்ற மகாராஜன் 80 ஆயிரம் ரூபாய் காவல் நிலையத்தில் கட்டி  நகை பறிக்க பயன்படுத்திய தன்னுடைய இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்றதாகவும் தகவல். தற்போது மகாராஜன் அந்த வாகனத்தை தான் பயன்படுத்தி வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.
3. சசி க/பெ சத்ய பாலா என்பவரை காவல் நிலையம் எதிரே மகாராஜன் என்ற கருப்பையா  கேலி கிண்டல் செய்ததாக குற்ற எண் 166/2013   வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல் அடிதடி மற்றும் கட்டப்பஞ்சாயத்து போன்ற புகார்கள் காவல் நிலையத்தில் கொடுத்துள்ளதாகவும் அதன் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.
அது மட்டும் இல்லாமல் உயிரிழந்த பாண்டியினுடைய தாயின் நிலத்தின் அருகே உள்ள ஓய்வு பெற்ற காவல் உயர் அதிகாரியின் நிலத்தில் உள்ள மாங்காய் தேங்காய் வாழை மற்றும் கோழிகள் ஆடுகள் போன்றவற்றை திருடியதாக பாண்டி மீது பல குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர். பாண்டியின் கூட்டாளியான அழகுமலையிடம் மேய்ப்பதற்கு விட்ட 45 ஆடுகளையும் விற்று விட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் ராமமூர்த்தி கடையில் டாஸ்மார்க் கடை திறப்பதற்கு முன்பும் மூடிய பின்பும் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்து வரும் வீடியோ ஆதாரங்களும் வந்துள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் உயிரிழந்த பாண்டியின் உடன்பிறந்த சகோதரர் முனியாண்டி இடம் விசாரித்த போது இந்த குற்றச்சாட்டை எல்லாம் மறுத்துவிட்ட  அவர் பல குற்றச்சாட்டுகளை வைத்தார். அதில் மலை அடிவாரத்தில்  ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிக்கு பல ஏக்கர் தோட்டம் உள்ளது. அந்தத் தோட்டத்தில் மேற்பார்வையாளராக இருக்கும் நாச்சியப்பன்  என்பவர் பாண்டி மகன் சதீஷ் கண்ணனை மிரட்டியதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளதாகவும் . அந்த புகார் மீது காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்காததால் பாண்டி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார் என்றும் குற்றச்சாட்டை கூறினார்.
பாண்டி தற்கொலை செய்ததற்கு பல காரணங்களை சொல்கிறார்களே என்று முனியாண்டியிடம் கேட்டதற்கு அதெல்லாம் இல்லை என்றும் இந்தப் பிரச்சினை தான் என்றும் கூறினார். அதன் பின்பு பாண்டி காவல் நிலையத்திற்கு செல்லும் முன்பு காலையிலிருந்து எங்கு இருந்தார் என்று கேட்டதற்கு அது தெரியாது என்றும் மாலை 5 மணிக்கு வீட்டிற்கு வந்து மகன் சதீஷ் கண்ணனுக்கு போன் செய்து வீட்டு சாவியை கேட்டதாகவும் சாவி  இருக்கும் இடத்தை சொன்னதாகவும் சாவியை எடுத்து வீட்டைத் திறந்து பாண்டி தனது செல்போன் மற்றும் பணத்தை வைத்து விட்டு காவல் நிலையத்திற்கு சென்றது மட்டும் தெரியும் மற்றது எதுவும் தெரியவில்லை என்றும் கூறினார். பாண்டி மது போதையில் இருந்தாரா என்றும் பாண்டியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றது யார் என்றும் கேட்டதற்கு  பாண்டி மது அருந்தவில்லை என்றும் யார் அழைத்துச் சென்றார்கள் என்று தெரியவில்லை என்றும் கூறினார்.
ஆனால் நாம் அப்பகுதியில் விசாரித்த போது மாலைய கவுண்டம்பட்டி ரயில்வே கேட் அருகில் உள்ள ராமமூர்த்தி கடையில் மதியம் 3 மணிக்கு ராமமூர்த்தி, பாண்டி,
அழகுமலை, முருகன், மகாராஜன் இவர்கள் அனைவரும் மது அருந்தி கொண்டிருந்ததாகவும் அந்த மேஜயில்  உயிரிழந்த பாண்டி பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில் வைத்து இருந்ததாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த பூச்சிக்கொல்லி மருந்து எதற்கு என்று கேட்டதற்கு தென்னந்தோப்பிற்கு எடுத்துச் செல்கிறோம் என்று பாண்டி கூறியுள்ளார். பூச்சிக்கொல்லி மருந்து எங்கே யார் வாங்கி கொண்டு வந்தார்கள் என்று நாம் விசாரித்ததில் சிலுக்குவார்பட்டியில் உள்ள உரம் விற்க்கும் கடையில் கருவண்டி மகன் அழகுமலை மற்றும்  சொக்கன் மகன் செந்தில்( கிழக்குத் தோட்டம் ) இந்த இரண்டு பேரும் பூச்சிக் கொல்லி  மருந்து வாங்கி வந்ததாகவும் தகவல்.
மாலை 5 மணிக்கு மது போதையில் வீட்டிற்கு வந்த பாண்டி வீட்டிற்குள் கையில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு அதன் பின்பு வீட்டை விட்டு வெளியே வந்து அந்த வழியில் சென்ற அன்பு என்ற இளைஞரின் இரு சக்கர வாகனத்தில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும்படி ராமமூர்த்தி கூறியுள்ளார். அந்த நபர் காவல் நிலையத்தில் விட்டு விட்டு சென்றுள்ளார் . பாண்டி காவல் நிலையத்துக்கு சென்ற சிறிது நேரத்தில்  ராமமூர்த்தி காவல் நிலையத்திற்கு  சென்று காவல் நிலையத்தில் உள்ள சேரில் உட்கார்ந்து இருக்கிறார். அதன் பின்பு மயங்கி விழுந்த பாண்டியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ராமமூர்த்தி உடன் இருந்துள்ளார் என்றும் தகவல் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பாண்டி காவல் நிலையத்தின் வெளியே மயங்கி விழும் வீடியோ காட்சியில்  காவல் நிலையத்தில் உள்ள ஒரு இருக்கையில் உட்கார்ந்து கொண்டு இருப்பது ராமமூர்த்தி தான் என்று தெரிவித்தனர். ஆனால் பாண்டி  வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை குடிக்க வில்லை என்று முனியாண்டி கூறுகிறார்.
அப்படி என்றால் வீட்டிலிருந்து காவல் நிலையத்திற்கு செல்லும் வழியில் 15 நிமிடத்திற்குள்  மதுபோதையில் இருந்த பாண்டியனிடம்  பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில் கொடுத்தது யார் !? வாங்கி வந்தது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதைப் பற்றி எல்லாம் முனியாண்டி இடம் கேட்டால் அதற்கு எதுவும் தெரியாது என்ற பதிலை மட்டும் தெரிவித்தார்.

அதுமட்டுமில்லாமல் உயிரிழந்த பாண்டியின் செயல்பாடுகளை பிடிக்காத பாண்டியின்  மனைவி தன்னுடைய தாய்  வீட்டில் இருந்துள்ளார். அதன் பின்பு ஒரு நாள் பாண்டியின் மனைவி வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து இறந்து விட்டதாகவும்  தகவல் தெரிவித்தனர். அதன் பின்பு பாண்டி கன்னிமாநகரில் உள்ள வீட்டில் வசித்து வந்த நிலையில்  குடும்பத்திற்குள் பிரச்சனை நடந்து கொண்டிருந்ததாகவும் அந்த பிரச்சனைக்காக  பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
பாண்டியின் மகன் சதீஷ் கண்ணன் அம்மைநாயக்கனூர் காவல் நிலையத்தில் தன்னை மிரட்டியதாக மூன்று பேர் மீது கொடுத்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்யவில்லை என்பதற்காக பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்தார் என்று பாண்டியின் தம்பி முனியாண்டி கூறுவது காவல்துறையின் விசாரணையில் தான் உண்மை தன்மை தெரிய வரும். அதுமட்டுமில்லாமல் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து உயிரிழந்த பாண்டி மது அருந்தி இருந்தாரா என்று மருத்துவ பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் தான் உயிரிழந்த பாண்டி மது போதையில் இருந்தாரா? இல்லையா? என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.


ஆனால் பாண்டிக்கும் விவசாயத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவர் ஒரு விவசாயி இல்லை என்றும் ஏனென்றால்  திருட்டு வழக்குகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பாண்டியை    தம்பி முனியாண்டி ராமமூர்த்தி என்பவரும் சேர்ந்து குள்ளலக்குண்டு கிராமத்திற்கு உட்பட்ட சிப்காட் அருகே விலைக்கு வாங்கி வைத்திருந்த  நிலத்தில் டாஸ்மார்க் பார் நடத்த  அனுமதி பெற்று  அந்தக் கடையை முனியாண்டியின் சகோதரர் மறைந்த பாண்டி தான் பார்த்துக் கொண்டு இருந்துள்ளார். சில வருடங்களுக்குப் பிறகு மாலைய கவுண்டன்பட்டி ரயில்வே கேட் அருகே  டாஸ்மார்க் எதிரில் உள்ள  ராமமூர்த்தி வைத்திருக்கும் கடையில் தான் பாண்டி வேலை பார்த்து வந்துள்ளார் . கடந்த நான்கு வருடத்தில் 5  மேற்பட்ட புகார்கள் மீது வழக்குகள் உயிரிழந்த பாண்டி மீது பதிவு செய்யப்பட்டுள்ளது  என்பதுதான் நிதர்சனமான உண்மை என்கின்றனர் அப்பகுதி பொதுமக்கள்.ஆனால் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட பாண்டியை  ஒரு விவசாயி என்று பாண்டி சகோதரர் முனியாண்டி குறிப்பிட்ட நபர்களை  சேர்த்துக்கொண்டு மாயத் தோற்றத்தை உருவாக்கி   பேசி வருவது தான் வேதனையாக இருக்கிறது என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாண்டியின் கூட்டாளி அழகுமலை என்பவர் கையில் பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில் கையில் வைத்துக்கொண்டு அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்திற்குள் வந்து காவல் ஆய்வாளர் முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்யப் போகிறேன் என்று கூறியுள்ளார். அதன் பின்பு அவர் கொடுத்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்துள்ளார் காவல் ஆய்வாளர். ஆனால் வழக்கு பதிவு செய்ய ராமமூர்த்தி செய்த திட்டமிட்ட நாடகம் என்றும் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். அதே போல் தான் மது போதையில் இருந்த பாண்டி கையிலும் பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில் கொடுத்து காவல் நிலையத்திற்கு அனுப்பி காவல் ஆய்வாளர் இடம் வழக்கு பதிவு செய்ய சொல்லி  தகராறு செய்யச் சொன்னதாகவும் ஆனால் பாண்டி உண்மையிலேயே அந்த பாட்டிலில் இருந்த விஷத்தை கொடுத்து விட்டதாகவும் அதை மறைக்க தற்போது பல முயற்சிகள் நடந்து வருகிறது என்றும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

காவல் நிலையத்தில் பாண்டி பூச்சிக்கொல்லி விஷம் அருந்தி தற்கொலை சம்பந்தமாக  அப்பகுதி மக்கள் சொல்லும் தகவல்களின் உண்மை நிலவரம் என்ன என்று நிலக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் நேரில் சென்று விசாரித்த போது   காவல்துறை அதிகாரி கூறியது என்னவென்றால் நடந்து முடிந்த பஞ்சாயத்து தேர்தலில் முனியாண்டி மனைவி பஞ்சாயத்து தலைவராக போட்டியிட்டதாகவும் வெற்றி பெற வைப்பதற்காக சின்னக் கருப்புவை வைத்து நாச்சியப்பன்  என்பவரிடம்  நான்கு லட்சம் கொடுத்ததாகவும்  நாச்சியப்பன் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி மூலம் சொல்லி வெற்றி பெற செய்கிறேன் என்று கூறியதாகவும்  பணத்தை கொடுத்ததாகவும் ஆனால் முனியாண்டியின் மனைவி தேர்தலில் தோற்றுப் போய் விட்டதாகவும் ஓட்டுக்கு கொடுத்த பணத்தை திரும்ப வாங்கிக் கொடுக்குமாறு முனியாண்டி கேட்டதாகவும் அதனால் வந்த பிரச்சனைதான் இது என்றும் துணை காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

ஆனால் நாம் விசாரித்ததில் ரயில்வே கேட் அருகே ராமமூர்த்தி வைத்திருக்கும் கடைக்கு சின்னக் கருப்புவை  வரவழைத்து    முனியாண்டி மற்றும் ராமமூர்த்தி  அழகுமலை, மகாராஜன் மற்றும் அவர்களது கூட்டாளிகளுடன்  நான்கு லட்சம் பணத்தை கேட்டு மிரட்டியதாகவும் அதற்கு சின்ன கருப்பு என்னிடம் எந்த பணமும் இல்லை என்று கூறியதற்கு நாச்சியப்பனுக்கு போன் செய்து பணம் கேட்டு வாங்கி கொடுக்குமாறு  ராமமூர்த்தியும் முனியாண்டியும் வற்புறுத்தி வந்ததாகவும்  சின்ன கருப்பு நாச்சியப்பனுக்கு போன் செய்து என்னிடம் பணம் கேட்கிறார்கள் என்று கூறியதற்கு எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று நாச்சியப்பன் சொன்னதாகவும்

அதன் பின்பு ஓட்டுக்கு கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதாகவும் பணத்தை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றியதாகவும் நாச்சியப்பன், சின்ன கருப்பு இரண்டு பேர் மீது டாஸ்மாக்கில் வேலை பார்க்கும் முனியாண்டி  அம்மையநாயக்கனூர்  காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததாகவும் அந்த புகார் மீது முதல் தகவல் அறிக்கை கொடுக்கப்பட்ட பின்பு நாச்சியப்பன் மற்றும் சின்ன கருப்புவை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு  வர சொன்னதன் அடிப்படையில் இரண்டு பேரும் விசாரணைக்கு வந்துள்ளனர். அப்போது காவல் உதவி ஆய்வாளராக இருந்த விஜய பாண்டி அவர்கள் இரண்டு பேரிடமும் விசாரணை நடத்தி உள்ளார். அப்போது  நாச்சியப்பன் இடம் விசாரித்த போது  என்னிடம் பணம் கொடுக்கவில்லை எனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று அதன் பின்பு சின்ன கருப்புவிடம் விசாரித்துள்ளார் . அப்போது சின்ன கருப்பு வாக்காளர்களுக்கு என்னை அழைத்துக் கொண்டு போய் பணம் கொடுத்தார்கள் என்றும் கூறியுள்ளார். அதன் பின்பு முனியாண்டியை அழைத்து நான்கு லட்சம் கொடுப்பதற்கு எங்கிருந்து உங்களுக்கு பணம் வந்தது என்றும் அப்படி கொடுத்திருந்தால் அதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்றும் வாக்குக்கு பணம் கொடுப்பது தவறு என்றும் அப்படி பணம் கொடுத்திருந்தால் முனியாண்டி  மீது வழக்கு பதிவு செய்வேன் என்று காவல் உதவி ஆய்வாளர் கூறியுள்ளார் .அதன்பின்பு முனியாண்டியுடன் வந்த ராமமூர்த்தி நாங்கள் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்கிறோம் என்று எழுதிக் கொடுத்துவிட்டு சென்றுள்ளனர்.

அதன் பின்பு  நாச்சியப்பன் சங்கர் சின்ன கருப்பு அய்யம்மாள் 4 பேர்  கொலை மிரட்டல் விடுத்ததாக பாண்டி மகன் சதீஷ் கண்ணன் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் 24/06/2022  கொடுத்த புகார் மீது வழக்கு பதிவு செய்யவில்லை என்று சதீஷ் கண்ணனின் தந்தை பாண்டி, முனியாண்டி மற்றும் ராமமூர்த்தி நிலக்கோட்டை நீதிமன்றத்தில்  வழக்கு தொடுத்துள்ளனர்..  வழக்கை விசாரித்த நிலக்கோட்டை நீதிமன்றம் சதீஷ் கண்ணன் கொடுத்த புகார் மீது உரிய விசாரணை நடத்த  அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்திற்கு பரிந்துரை செய்துள்ளது என்றும் அது சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் பாண்டி என்பவர் மது போதையில் கையில் பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில் வைத்துக்கொண்டு 07/03/2023 அன்று மாலை 5.45 மணி அளவில் காவல் நிலையத்திற்கு  வந்து ஆய்வாளர் சண்முக லட்சுமி முன்பு  குடிப்பது போல் மயங்கி விழுந்த நிலையில் அவரை நிலக்கோட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் சொல்லப்பட்டார்

அதன் பின்பு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இரண்டு நாள் கழித்து 09/03/2023 ஆம் காலை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த விட்டார் .அதன் பின்பு எந்த வித அசம்பாவிதம் நடந்து விடக் கூடாது என்று  நான்கு பேர் மீது காவல் துறை வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளோம் என்று அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளனர்.

4 லட்சம் பணம் வாங்கியதாக கொடுத்த புகார் சம்மந்தமாக  சின்ன கருப்புவிடம் கேட்டதற்கு முனியாண்டி மனையை வெற்றி பெற வைக்க வேண்டும் என்றும் அதற்காக வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுக்கு 500 ரூபாய் வீதம்  900 பேருக்கு மட்டும்  நான்கு லட்சம் கொடுத்தது உண்மை.ஆனால் பஞ்சாயத்து தேர்தலில் முனியாண்டி மனைவி  தோற்று விட்டதால் ஓட்டுக்கு கொடுத்த நான்கு லட்சம் ரூபாய் பணத்தை திரும்ப வாங்கிக் கொடுக்குமாறு   ரயில்வே கேட் அருகே ராமமூர்த்தி வைத்திருக்கும் கடைக்கு வரச் சொன்னார் . அங்கு முனியாண்டி மற்றும் ராமமூர்த்தி  அழகுமலை, மகாராஜன் மற்றும் அவர்களது கூட்டாளிகளுடன்  பணத்தை கேட்டு மிரட்டியதாகவும் அதற்கு என்னிடம் எந்த பணமும் இல்லை என்று கூறியதற்கு நாச்சியப்பனுக்கு போன் செய்து பணம் கேட்டு வாங்கி கொடுக்குமாறு  ராமமூர்த்தியும் முனியாண்டியும் வற்புறுத்தியதால் சின்ன கருப்பு நாச்சியப்பனுக்கு போன் செய்து என்னிடம் பணம் கேட்கிறார்கள் என்று கூறியதற்கு எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை நான் வெளியூரில் இருக்கிறேன் என்று நாச்சியப்பன் சொன்னதை முனியாண்டி ராம மூர்த்தி இருவரும் தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்தார்கள் . அந்த வீடியோவை வைத்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததாகவும் தற்போது பாண்டி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதால் புகார் மீது வழக்கு பதிவு செய்து  என்னையும் நாச்சியப்பனையும் கைது செய்தனர் என்று
சின்னக் கருப்பு  கூறினார்.

எது எப்படியோ வாக்காளர்களுக்கு ஓட்டுப் போட பணம் கொடுப்பது சட்டப்படி குற்றம் என்று தெரிந்தும் நான்கு லட்சம் பணத்தை கொடுத்ததாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தவர்களுக்கு ஆதரவாக தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுத்துள்ளது தான் மர்மமாக உள்ளது. தேர்தலில் வெற்றிபெறுவதற்கு பணம் கொடுத்தோம் என்று புகார் கொடுத்த அரசு ஊழியராக இருக்கும் முனியாண்டி மீது காவல்துறை ஏன் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை! யார் தவறு செய்தாலும் அவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் .ஆகையால் குற்றம் செய்தவர்கள் மீது  திண்டுக்கல் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர்  நேர்மையான முறையில் விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எது எப்படியோ நேர்மையான காவல்துறை இயக்குனர் அவர்கள்  இந்த சம்பவத்தில் நடந்த உண்மைகளை கண்டறிய நேர்மையான அதிகாரிகளை நியமித்து விசாரணை மேற்கொண்டு யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் ஆதங்கம்.

.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button