அரசியல் காமெடி

பாஜகவில் இணையும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி!?  தமிழ்நாட்டில் கை வைக்க ஆரம்பித்துள்ள தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா !

தமிழ் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப் பெருந்தொகை நியமிக்கப்பட்டுள்ள நிலையில்

தமிழ் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தொகை

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணிடெல்லியில் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா முன்னிலையில் இருப்பதாக அதிர்ச்சி தகவல்!

குமரி மாவட்டம் விளவங்கோடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி

பாஜகவில்
இணைய உள்ளதாகத் தகவல் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருவது கடந்த 10 நாட்களாக குமரி மாவட்ட மக்களிடையே பெரும் பரபரப்பாக பேசும் பொருளாக மாறி உள்ளது.
விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை எம்எல்ஏவாக தேர்வான விஜயதாரணி இந்த முறை எம்பி சீட்டு கேட்டு, மேலிடம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விஜயதாரணி எம்எல்ஏவிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு விளக்கம் கேட்க தொடர்பு கொண்டால் அவர் அழைப்பை ஏற்கவில்லை. எனவே அவரின் உதவியாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்கப்பட்டது. அப்போது இது குறித்து பேசிய அவருடைய உதவியாளர் நான் எம் எல் ஏ விடம் பேசிவிட்டு உங்களுக்கு பதில் தருகிறேன் என்று மளுப்பலாக பதில் சொல்லி தொடர்பை துண்டித்து விட்டார். தற்போது டெல்லியில் தங்கி இருக்கும் விஜயதாரணி இது குறித்து மறுப்பு தெரிவித்துள்ளார்.
பாஜகவில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் இணைவதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
தற்போது டெல்லியில் உள்ள விஜயதாரணி, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.அவருடன் மேலும் இரண்டு காங்கிரஸ் எம்எல்ஏக்களையும் பாஜகவில் சேர்க்க பேச்சு நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், பாஜகவில் இன்று சேர உள்ளதாக வெளியான தகவலுக்கு மட்டும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி மறுப்பு தெரிவித்துள்ளார். பாஜகவில் இணைவீர்களா? என்ற கேள்விக்கு, இன்று சேர வாய்ப்பு இல்லை என விஜயதரணி மழுப்பல் பதில் தெரிவித்தார்.
பாஜகவில் சேர உள்ளதாக வெளியான தகவலை திட்டவட்டமாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி மறுக்கவில்லை. தேசியக் குழு கூட்டம் நேற்று தொடங்கும் நிலையில் விஜயதரணி பாஜகவில் சேருவார் என தகவல் வெளியாகி இருந்தது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள பல்லடத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பாஜக நிகழ்ச்சியில் விஜயதரணி பாஜகவில் சேர்வார் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்காமல் விஜயதாரணி கடந்த சில நாட்களாக டெல்லியில் முகாமிட்டுள்ளார்.இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸில் உள்ள முக்கிய பிரமுகர்கள் பலரும் பாஜகவில் சேர உள்ளதாக கூறப்படுகின்றது. அதனைப் போல காங்கிரஸ் தலைமை விஜயதாரணியை சமாதானப்படுத்தும் முயற்சியில் தற்போது  ஈடுபட்டு வருவதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button