அரசியல்சினிமா

பிஜேபி அண்ணாமலை ஒரு கருவாடு!! சவால் விட்ட திருச்சி திமுக ராணி.

அண்ணாமலை அவர்களுக்கு வணக்கம் … கடலில் இருக்கும் வரைக்கும் தான்  மீனுக்கு மரியாதை, கரைக்கு வந்துட்டா கருவாடுதான்

நீங்க காவல் துறையில இருந்து வெளில வந்தீங்க, நானும் காவல் துறையில இருந்து தான் சார் வெளியில வந்தேன். நீங்க பாஜக வுல பதவியில இருக்கீங்க .நான் திமுக வுல தொண்டர்கள்ல ஒருத்தியா தன்மானமுள்ள தமிழச்சியா இருக்கேன்.

உங்க ஆர்ப்பாட்ட பேச்சு கேட்டேன் படு கேவலமா இருக்கு. மீனவர்களுக்காக குரல் கொடுத்ததை பார்த்தேன், உண்மையிலே உங்க அறிவு இவ்வளவு குறுகியதுன்னு இப்ப தான் தெரியுது.

தமிழக முதல்வர் பதவி ஏற்று இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகுது, எதுவுமே செய்யல, மீனவர்களுக்கு பணம் கொடுக்கலன்னு கொய்யா முய்யான்னு கத்துறீங்களே? உங்க அய்யா மோடி தேர்தல் அறிக்கையில 15 லட்சம் குடுக்குறேன்னு சொல்லி, ஏழு வருசம் ஆகுதே அத கேட்டு மக்களுக்கு வாங்கி தர முடியில நீங்கள்லாம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பற்றி பேசுறீங்க?

வெட்கமா இல்லன்னு? கேட்கனுன்னு தான் தோணுது, ஆனா காக்கி உணர்வு சரி போயி தொலையிதுன்னு உங்கள விடுறேன்.

அப்புறம் அண்ணாமலை சார் முதலமைச்சர் வீட்டுக்கு முன்னாடி ஆர்ப்பாட்டம் பண்ண போறதா சொல்றீங்க உண்மையிலயே சிரிப்பு தான் சார் வருது.

சார் ஒன்னு சொல்லவா? முதலமைச்சர் பார்க்காத போராட்டமும் இல்ல, ஆர்ப்பாட்டமும் இல்ல, மிசாவையே கண்டவர் முதல்வர். அதனால நீங்க ஆர்ப்பாட்டம் பண்ணுனாலும், போராட்டம் பண்ணுனாலும், சட்டம் தன் கடமையை செய்யும். அளவுக்கு மீறி போனா அண்ணாமலையை கைதும் செய்யும் நம்ம காவல் துறை.

எனவே கொரோனா தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற முதல்வர் இது நாள் வரை போராடினார் என்பதை உலகம் அறியும். சும்மா முதலமைச்சர் வீட்டுக்கு முன்னாடி ஆர்ப்பாட்டம் பண்ண போறேன் ,ஆட்டுக்குட்டி வளர்க்க போறேன்னு கத்திக்கிட்டு இல்லாம, உங்க கட்சி தமிழ் நாட்டுல எங்க இருக்குன்னு தேடி கண்டு பிடிங்க அண்ணாமல சார்.?

அப்புறம் அண்ணாமலை சார், நானும் டெல்லி கிளம்பி போயி 15 லட்சம் தேர்தல் வாக்குறுதி என்ன ஆச்சுன்னு கேட்டு, துணிய விரிச்சிப்போட்டு, மோடி வீட்டுக்கும் முன்னாடி உட்காரலாமுன்னு இருக்கேன். எப்புடி ஐடியா? முடிஞ்சா நீங்களும் வாங்க, மீனவர்களுக்காக ஒரு துண்ட விரிச்சிப்போட்டு உட்காருங்க, மக்களுக்கு 15 லட்சம் இரண்டு காக்கிகள் போராடி வாங்கி குடுத்தாங்கன்னு பேராவது இருக்கும்.

படிச்சும் முட்டாள் சார் நீங்கன்னு சொல்ல மாட்டேன். கடல்ல இருக்குற வரைக்கும் தான் சார் மீனுக்கு மரியாதை, கரைக்கு வந்துட்டா கருவாடு நீங்களும் அப்படி தான் . காலமும் நேரமும் வரும்போது உங்கள போராட்ட களத்துல சந்திக்கிறேன்.

கவி செல்வ ராணி திருச்சி.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button