பிரபல திரைப்பட தயாரிப்பாளர் தந்தையின் நிலத்தை எழுதி வாங்கிக் கொண்டு பல கோடி ரூபாய் மோசடி செய்து கொலை மிரட்டல் விடும் காங்கிரஸ் எம்எல்ஏ மீது புகார்!?
நில மோசடி மற்றும் அபகரிப்பு வழக்கில் சிக்கி தவிக்கும் ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் அமிர்தராஜ் .
அமிர்தராஜ் எம்எல்ஏ யார்!?
முன்னால் மறைந்த காங்கிரஸ் கட்சி சட்ட மன்ற உறுப்பினர் ஊர்வசி செல்வராஜின் மகன்தான் அமிர்தராஜ் எம்எல்ஏ . பிறந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள மரந்தலை கிராமம்..
செல்வராஜ் எம்.ஏ., எம்.பில். பட்டதாரி. தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் துணை தலைவராக 2 முறை பொறுப்பு வகித்துள்ளார்.
ஊர்வசி சலவைக் சோப் நிறுவனம் மற்றும் பொழுதுபோக்கு பூங்காவான குயின்ஸ்லேண்ட் நிறுவனத்தின் நிறுவனராவார்.
2006 ஆம் ஆண்டு ஸ்ரீ வைகுண்டம் தொகுதியின் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
இவர் மாரடைப்பு காரணமாக ஜூலை 5, 2009 ஆம் ஆண்டு காலமானார்.
அவருக்கு அப்பொழுது வயது 58. அவருக்கு நளினி என்ற மனைவியும்
அமிர்தராஜ் மற்றும் ஆனந்தராஜ் என்ற இரண்டு மகன்களும் ராஜ பிரியா என்ற மகளும் உள்ளனர்.இவரது மகனான ஊர்வசி அமிர்தராஜ் கிங்ஸ் பொறியியல் கல்லூரியை நிர்வாகம் செய்துவருகிறார்.
ஊர்வாசி செல்வராஜின் குயின்ஸ்லாண்ட் தீம் பார்க் அமைந்துள்ள 177 ஏக்கர் நிலம் காஞ்சிபுரம் மாவட்டம், ஶ்ரீபெரும்புதூர் வட்டம், அருள்மிகு காசிவிஸ்வநாதர் மற்றும் வேணுகோபால சுவாமி திருக்கோயிலுக்கு சமுத்திரமேடு கிராமத்தைச் சார்ந்த உதயகிரி சாமைய்ய ஜமின்தார் என்பவரின் மகன் வெங்கைய்யா என்பவர் திருக்கோயிலின் பூஜை மற்றும் பராமரிப்பு பணியைத் தொடர்ந்து நடத்துவதற்குச் சொத்துகளை உயில் சாசன ஆவணம் எழுதிப் பதிவு செய்துள்ளார். அதன் பின்பு பல்வேறு காரணங்களால் சில நபர்கள் ஆக்கிரமிப்புகள் செய்துள்ளனர். இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது என்று குறிப்பிடத்தக்கது.
சென்னை கிண்டி எம் கே என் ரோடு கதவு இலக்கு எண் 1B to 10B சர்வே நம்பர் 4/1 இல்( ஏழு கிரவுண்ட்) 2112 சதுரடி உள்ள சுமார் 100 கோடி மதிப்புள்ள மூன்று பேர் பெயரில் இருந்துள்ளது.
இந்த இடத்தை கதவு எண் 21, மயிலை ரங்கநாதன் தெரு,
டி நகர் சென்னை-17 என்ற முகவரியில் வசிக்கும் ஊர்வசி செல்வராஜ் மனைவி நளினி மற்றும் அவரது மகன் அமிர்தராஜ் விலைபேசி 29/09/2011 அன்று ஆலந்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவு (121/2011 )செய்யப்பட்டுள்ளது.
பத்திரப்பதிவு நடந்த அன்று மூன்று பேரில் 2 பேருக்கு முழுத் தொகையை செலுத்திவிட்டு
அறியான் ,தேன்கூடு ,கருப்பு ஆடு , போன்ற திரைப்படங்களின் தயாரிப்பாளர் பிரபாதிஷ் சாமுவேல். அவரது தந்தை சாமுவேல் த/பெ தாசைய்யா என்3/5 பாளையக்காரன் தெரு,போரூர்.சென்னை 600116 இவருக்குமட்டும் 2.40 கோடி ரூபாயை ( 2 கோடியே 40 லட்சம்)நிறுத்தி வைத்து ஒரு சில நிபந்தனைகளை விதித்து அதை அனைத்தையும் சரி செய்தால் இந்தத் தொகையை கொடுத்து விடுகிறேன் என்று சாமுவேலும் ஊர்வசி அமிர்தராஜ் நலினி செல்வராஜ் ஒப்பந்தம் போட்டுள்ளனர். இந்த ஒப்பந்தம் மற்றும் பத்திரப்பதிவு நடந்த அன்று போரூரை சேர்ந்த எ எஸ் பாஸ்கர் நடுவராக இருந்து முடித்து வைத்து உள்ளார் என்ற தகவல் வந்துள்ளது.
இந்த நிபந்தனை என்னவென்றால் அந்த இடத்தில் உள்ள கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் அது மட்டுமில்லாமல் அந்த இடத்தை ஒட்டி உள்ள சம்பத்குமார் இடத்தையும் விலைபேசி தர வேண்டும் என்ற நிபந்தனை போட்டுள்ளாரகள் ஊர்வசி நலினி செல்வராஜ் மற்றும் அவரது மகன் அமிர்தராஜ்.
இதற்குச் சம்மதிக்கும் மாறும் 2 கோடியே 40 லட்சம் பணத்தை வாங்கித் தருவதற்கு நான் பொறுப்பு என்று போரூரை சேர்ந்த ஏ எஸ் பாஸ்கர் கூறியதை நம்பி சாமுவேல் ஒத்துக் கொண்டுள்ளார்.
அதன் பின்பு அங்குள்ள கடைகளை எல்லாம் அகற்றிவிட்டு ஊர்வசி அமிர்தராஜ் அவர்களிடம் சென்று தனக்கு சேரவேண்டிய 2 கோடியே 40 லட்சம் பணத்தை கேட்டுள்ளார் சாமுவேல். அப்போது ஊர்வசி அமிர்தராஜ் அருகிலுள்ள சங்கீதா ஹோட்டலை காலி செய்ய வேண்டியுள்ளது என்றும் காலி செய்த பிறகு உங்கள் பணத்தை கொடுத்து விடுகிறேன் என்று சொல்லி அனுப்பி உள்ளார்.
அப்போது போரூரை சேர்ந்த ஏ எஸ் பாஸ்கர் சாமுவேலை பொறுமையாக இருங்கள் உங்கள் பணம் வந்து விடும் என்று கூறியதை நம்பி சாமுவேல் பொறுமையாக இருந்துள்ளார்.
சில மாதங்கள் கழித்து மறுபடியும் ஊர்வசி அமிர்தராஜ் அவர்களிடம் பணம் கேட்கும் போது சிராஜ் என்பவரது வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அந்த வழக்கு முடிந்த உடன் உங்களுக்கு தர வேண்டிய பணத்தை கொடுத்து விடுகிறேன் என்று கூறியுள்ளார்.அதற்கும் சம்மதித்து திரும்பி வந்துவிட்டார் என்று தெரிகிறது. அதன் பின்பு சிராஜ் வழக்கு நீதிமன்றத்தில் முடிவடைந்ததை அறிந்த சாமுவேல் மறுபடியும் ஊர்வசி அவரிடம் பணம் கேட்டுள்ளார்.
இதை அறிந்த போரூர் எம்எஸ் பாஸ்கர் சாமுவேலை அழைத்து நீங்கள் ஒரு சாம்ராஜ்யம் போய் பணம் கேட்டு தொந்தரவு செய்தால் உங்களுக்கு பணம் வேண்டுமா உங்கள் உயிர் வேண்டுமா என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள் என்று கொலை மிரட்டல் விடுவது போல் பேசியுள்ளார் . ஏழு வருடங்களாக தனக்கு தரவேண்டிய பணத்தை கேட்டு சாமுவேல் போராடி கொண்டுள்ள நிலையில் பணம் கொடுக்காமல் தன்னையே கொலை மிரட்டல் விடுகிறார்களே என்று மன உளைச்சலில் இருந்த சாமுவேல் என்ன செய்வதறியாது இது சம்பந்தமாக சென்னை மாநகராட்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் 27/03/207 அன்று தனக்கு நடந்ததை அனைத்தையும் மனுவில் எழுதி புகார் கொடுத்தார். உடனே மாம்பலம் காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் இது சம்பந்தமாக விசாரிக்க காவல் ஆணையர் உத்தரவிட்டார். அதையடுத்து மாம்பலம் காவல் துணை ஆணையர் இது சம்பந்தமாக விசாரணை நடத்திய போது அமிர்தராஜ் சார்பாக வந்த வழக்கறிஞர் குணராஜ் பி ஏ பி எல் அவர்கள் இது சிவில் சம்பந்தப்பட்ட புகார் இதை நீங்கள் விசாரிக்கக் கூடாது என்றும் நாங்கள் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்கிறோம் என்று எழுதிக் கொடுத்து சென்றுவிட்டார். உடனே சாமுவேல் அவர்களிடம் நீங்கள் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளுங்கள் என்று எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பிவிட்டார்கள்.
அதன்பின் 2 கோடியே 4 லட்சத்திற்கு பிணைத்தொகை நீதிமன்றத்தில் கட்டினால் மட்டுமே வழக்கு தொடர முடியும் என்ற நிலையில் சாமுவேல் என்ன செய்வது அறியாது நீதிமன்றத்தில் தனது நண்பர்களை வைத்து வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல்கள் கொடுத்துள்ளதாக சாமுவேல் கூறியுள்ளார்.
அமிர்தராஜ் மீது நில மோசடி புகார்கள் பல நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது . பல கோடி ரூபாய் சொத்துக்களை விலைபேசி தன்வசம் வைத்துக்கொள்வதுதான் அமிர்தராஜ் எம்எல்ஏவின் சூசகமான நூதன மோசடி என்கின்றனர்.அதேபோல் சென்னையில் நிறைய இடங்கள் நிலமோசடி செய்துள்ளதாகவும் பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. எது எப்படியோ பத்து வருடமாக தமிழ்நாட்டில் திமுக ஆட்சி செய்யவில்லை! ஆகையால் கடந்த அதிமுக ஆட்சியில் இருந்த முன்னாள் அமைச்சர்கள் மீது பல ஊழல் முறைகேடு நில மோசடிகள் தற்போது தூசி தட்டி எடுத்து வழக்குப்பதிவு செய்து வருகின்ற நிலையில் தற்போது திமுக ஆட்சியில் கூட்டணியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் அமிர்தராஜ் இதுபோன்ற நில அபகரிப்பு மோசடி செய்ததாக புகார் கொடுப்பவர்கள் இடம் பேசி அதை முடித்து வைக்காமல் தன்னுடைய பண பலத்தால் அதிகார பலத்தால் நீதிமன்றத்தை நாடி பல வருடங்கள் அந்த வழக்கை கொண்டு செல்வதால் எந்த ஒரு பயனும் இல்லை இதனால் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் கெட்ட பெயர்தான் உண்டாகும் என்பதுதான் நிதர்சனம். நாஞ்சில் சாம்ஸ்