பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஜே .எஸ். கே வுக்கு ஆறு மாத சிறை தண்டனை !
2016 ஆம் ஆண்டு பைனான்சியர் ஜெகன் போத்ரா என்பவரிடம்
தயாரிப்பாளர் ஜே எஸ் கே 97 லட்சம் கடன் வாங்கியுள்ளார்
அதற்காக மூன்று காசோலைகள் வழங்கியுள்ளார்.
குறிப்பிட்ட காலத்தில் கடனை திருப்பி செலுத்தாததால் தயாரிப்பாளர் கே எஸ் கே அளித்த காசோலைக்கு வங்கியில் பணம் இல்லை என திருப்பி அனுப்பப்பட்டது தொடர்பாக 2017 ஆம் ஆண்டு
சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஜெகன் போத்ரா வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஜார்ஜ் டவுன் விரைவு நீதிமன்றம் நீதிபதி சந்திர பிரபா காசோலை வழக்கில் தயாரிப்பாளர் ஜே எஸ் கே மீது உள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டிருப்பதால்.
ஆறு மாத சிறை தண்டனையும் மற்றும் வாங்கிய கடன் தொகையுடன் ஆண்டுக்கு மூன்று சதவீத வட்டியுடன் திருப்பி வழங்க வேண்டும் என்றும். அப்படி வழங்கத் தவறும் பட்சத்தில் மேலும் ஒரு மாதம் குறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து கே எஸ் கே மேல்முறையீடு செய்ய இருப்பதாக கூறியதை அடுத்து தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.