காவல் செய்திகள்

பிரபல துணிக்கடையில் வேலை பார்க்கும் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லையா !? அதிர்ச்சி ஆடியோ! விபரீதம் நடக்கும் முன்பு நடவடிக்கை எடுப்பாரா தென் மண்டல ஐ ஜி!?

ஆள்வதும் பெண்ணாலே ..
அழிவதும் பெண்ணாலே..
என்ற பழமொழிக்கு ஏற்றார் போல்
தமிழ்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் உச்சத்தில் இருந்த ஹோட்டல் சரவண பவன் உரிமையாளர் பெண்களுக்கு ஆசைப்பட்டு தன்னுடைய மதிப்பு மரியாதை அனைத்தையும் இழந்து கடைசி காலத்தில் கடையில் வேலைப்பார்த்த ஊழியரின் மனைவி ஜீவா என்ற பெண்ணை திருமணம் செய்ய ஆசைப்பட்ட ஒரே காரணத்திற்கு அந்தப் பெண்ணின் கணவரை கொலை செய்த குற்றவாளியாக சிறைக்குச் சென்று இறந்து போன வரலாற்றை மறக்க முடியாது!


ஆதே போல் மூன்று முக்கிய நகரங்களில் பிரபலமான துணிக்கடை இயங்கி வருகிறது. ஒவ்வொரு கடையிலும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண் பெண் ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். ஊர் பெயரை ஆரம்பித்தில் வைத்து ஆனந்தத்தில் முடியும் கடையின் பெயரைக் கொண்ட உரிமையாளர் பெண் ஊழியர்களுடன் ஆனந்த தாண்டவத்தில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடையின் உரிமையாளரின் பெயர் சிதம்பரத்திற்கு பேர் போனவர் ஆவார்.
முக்கிய நகரத்தில் கல்லூரி படிப்பை முடித்து பிரபல துணிக்கடையில் வேலை பார்க்கும் பெண் ஊழியர்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடை உரிமையாளருக்கு உதவியாளராகவும் இருக்கும் பெண் உரிமையாளருடன் நெருக்கமான தொடர்பு வைத்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். கடை உரிமையாளர் உடன் நெருக்கமாக இருக்கும் இந்த பெண் உதவியாளர் கடையில் வேலை பார்க்கும் பெண் ஊழியர்களை அதுவும் குறிப்பாக கல்லூரி படிக்கும் படித்து முடித்த பெண் ஊழியர்களை கடை உரிமையாளரிடம் கட்டாயப்படுத்தி அனுப்பி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடை உரிமையாளர் உடன் நெருக்கமாக இருக்கும் பெண் உதவியாளர் சொல்வதை கேட்காத பெண் ஊழியர்களை தகாத வார்த்தையில் பேசுவதும் கடினமான வேலையை கொடுப்பதும் இல்லையென்றால் அவர்களை வேலையை விட்டு நீக்கி விடுவதும் தொடர் கதையாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது சம்பந்தமாக நாம் களத்தில் ஒரு பெண் ஊழியரிடம் விசாரித்த போது அதிர்ச்சி தரும் தகவல்களை தெரிவித்தார். திண்டுக்கல்லில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குடும்ப வறுமையின் காரணமாக கல்லூரிகளில் சேர முடியாத மற்றும் படிப்பை பாதியில் நிறுத்தி விட்ட மாணவிகள் தங்கள் குடும்ப சூழ்நிலை கருதி இது போன்ற பிரபல துணிக்கடையில் வேலைக்கு சேர்ந்து வேலை செய்து கல்லூரி படிப்பை தொடர்ந்து படிக்க வேண்டும் என்பதற்காக காலை 9 மணிக்கு கடைக்கு சென்றால் இரவு 9 மணிக்கு தான் வீட்டுக்கு வருவதாகவும் அதன் பின்பு தான் கல்லூரி சம்பந்தமான படிப்பை படித்துவிட்டு தூங்குவதாகவும் அந்த பெண் ஊழியர் மனவேதனையுடன் தெரிவித்தார்.

ஆனால் அந்தப் பெண் ஊழியர் பேசும்போது அச்சத்துடன் பயத்துடனும் மனரீதியாக பாதிக்கப்பட்டவர் போல் பேசினார். என்ன என்று நாம் தெளிவாக கேட்ட போது கடை உரிமையாளருக்கு நெருக்கமாக இருக்கும் பெண் உதவியாளர் கடையில் வேலை பார்க்கும் ஒரு சில பெண்களை அழைத்து நீங்கள் தொடர்ந்து இங்கு வேலை பார்க்க வேண்டும் என்றால் நான் சொல்வதற்கு ஒத்துப் போக வேண்டும் என்று மறைமுகமாக மிரட்டி வற்புறுத்தி வருவதாகவும் இல்லை என்றால் வேலையை விட்டு நீக்கி விடுவேன் என்று பயமுறுத்தி அந்த பெண் ஊழியர்களை பாலியிலுக்கு அடிபணிய செய்கிறார் . கடை உரிமையாளருக்கு நெருக்கமாக இருக்கும் பெண் உதவியாளர் சொல்வதைக் கேட்காமல் மனரீதியாக பாதிக்கப்பட்ட ஒரு சில பெண்கள் வேலை வேண்டாம் என்று வேலையை விட்டு சென்று விடுவார்கள். ஒரு சில பெண்கள் தங்கள் குடும்ப சூழ்நிலையை கருதி வேறு வழி என்று கடை உரிமையாளரின் பெண் உதவியாளர் சொல்பவரிடம் சென்று வருவதாகவும் இதை வெளியே சொல்ல முடியாமல் இருப்பதாகவும் இதனால் பல பெண் ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். கடை உரிமையாளரின் பெண் உதவியாளர் கடையில் வேலை பார்க்கும் பெண் ஊழியர்களை யாரிடம் அனுப்பி வைக்கிறார் என்றும் இது சம்பந்தமாக கடை உரிமையாளரிடம் ஏன் புகார் கொடுக்கவில்லை என்றும் கேட்டபோது அந்தப் பெண் கூறிய பதில் அந்த நபரே கடை உரிமையாளர் தான் என்றும் நாங்கள் யாரிடம் போய் சொல்லுவோம் என்று மிகவும் வேதனையுடன் தெரிவித்தார் . அது மட்டும் இல்லாமல் கடை உரிமையாளர் உதவியாளராக வேலை செய்யும் பெண் தன் கணவரை விட்டு குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வருவதாகவும் இதனால் கடை உரிமையாளர் அந்த பெண்ணுக்கு அடைக்கலம் கொடுத்து வைத்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவலையும் தெரிவித்தார். ஆகையால் இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட பெண் ஊழியர்கள் கடை உரிமையாளரின் மகனிடம் புகார் கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். ஏனென்றால்
கடை உரிமையாளரின் மகன் மருத்துவர் என்பதால் அவர் நல்லவர் என்றும் கடையில் வேலை பார்க்கும் பெண் ஊழியர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்வார் என்றும் தங்கமான மனிதர் என்பதால் இந்தத் தகவலை அவரிடம் சொன்னால் உதவியாளராக இருக்கும் அந்தப் பெண்ணை பணியிலிருந்து நீக்கி விடுவார் என்றும் அதன் பின்பு அந்தக் கடையில் வேலை செய்யும் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை போன்ற எந்தப் பிரச்சினை இருக்காது வராது என்றுநம்பிக்கையுடன் தெரிவித்தார்.


இது சம்பந்தமாக மனரீதியாக பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் ரிப்போர்டர் விஷன் பத்திரிகை நிருபருக்கு நெருங்கிய நண்பருக்கு தொடர்பு கொண்டு பத்திரிக்கையில் செய்தி வெளியிடுமாறு பேசிய ஆடியோவை பெண் ஊழியரின் வருங்கால வாழ்க்கை மற்றும் குடும்ப நலன் கருதியும் நாகரீகம் கருதியும் வெளியிட மாட்டோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். பெண் ஊழியர் பேசிய ஆடியோவை தேவைப்படும் போது பத்திரிகை நிறுவனம் சார்பாக நீதிமன்றத்தில் ஒப்படைக்க இருக்கிறோம். இருந்தாலும் இந்தக் குற்றச்சாட்டு சம்பந்தமாக நேர்மையான முறையில் விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தென்மண்டல ஐஜி அவர்களிடம் புகார் கொடுக்க உள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button