ஆன்மீகத் தளம்

புதுக்கோட்டை திருவப்பூர்
அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் பணம் முறைகேடா!? இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் நடவடிக்கை எடுப்பாரா!?

திருச்சிக்கு ஒரு சமயபுரம் திருக்கோயில் போன்று புதுக்கோட்டைக்கு மிகச் சிறப்பு வாய்ந்தது திருவப்பூர்
அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தை கூறலாம்.


ராஜாக்கள் ஆண்ட காலங்களில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த புதுக்கோட்டை திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரி அம்மன் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
கோவிலின் எதிர்புறத்தில் அமைந்திருக்கும் நுழைவு வாயிலில் அமைந்திருக்கும்  வளைவு மற்றும் கோபுரமானது பல வருடங்களாக பராமரிப்பு செய்யாமல் சேதம் அடைந்து இடிந்து விழும் அளவுக்கு மிகவும் மோசமான நிலையில் சிதளம் அடைந்து வர்ணங்கள் பூசப்படாமல் காணப்படும் அவல்நிலையை கண்டு பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில்


மிகவும் பிரசித்தி பெற்ற திருவப்பூர் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில்  இன்னும் ஒரு சில தினங்களில் திருவிழா நடக்க உள்ளது. ஆனால் கோவிலில் எந்த ஒரு பராமரிப்பும் செய்யாமல் மிக மோசமான நிலையில் அலங்குலமாக காணப்படுவதால் இது சம்பந்தமாக கோவிலுக்கு காப்பு கட்டி வழிபடும் பக்தர்களிடம் கேட்டபோது கோவில்களில் ஆண்டுக்கு ஒரு முறை பராமரிப்பு என்று பல லட்ச ரூபாய் செலவு செய்வதாக கணக்கு காட்டி வருவதாகவும் ஆனால் அந்த பணத்தை கோயிலுக்கு செலவு பண்ணுவதில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.அதேபோல் கோவில் வளாகம் முழுவதும் குப்பை மற்றும் மது பாட்டில்கள் ஆங்காங்கே கிடப்பதால் பக்தர்கள் மிகவும் வேதனைப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். கோவில் வளாகங்கள் எப்பொழுதுமே பராமரித்து சுத்தமாக வைத்துக் கொள்வதில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் கோவில் திருவிழாவில் பெண்கள் முதியவர்கள் பக்தர்கள் காவடி பால்குடம் தீச்சட்டி போன்றவைகளை எடுத்து அம்பாளுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு பக்தர்கள் அந்த வழியாகத்தான் வரவேண்டும் அப்படி பால்குடம் காவடி வரும் பொழுது  ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக  வரும் அவ்வழியில் சில சமூக விரோதிகள்  மது குடித்துவிட்டு மது பாட்டில்களை உடைத்து போட்டுவிட்டு செல்வதால் கோவில் வளாகம் அருகே ஆங்காங்கே கண்ணாடி துண்டு பாட்டில்கள் சிதறி கிடப்பதாலும் குப்பைகள் நிரம்பி வழிவதாலும் அவ்வழியே செல்லும் பெண் பக்தர்கள் முகசுழிப்புடன் செல்லும் அவல நிலையில் தள்ளப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் . இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் முத்துராமன் இந்த நுழைவாயில் வளைவு கோபுரம் வர்ணம் பூசி விட்டதாக கணக்கு காண்பித்து விட்டு லட்சக்கணக்கான பணத்தை  அபேஸ் செய்து கொண்டு விட்டாரோ என்று அப்பகுதி மக்கள்  சந்தேகத்தை எழுப்பி வருகின்றனர் .
முத்துமாரியம்மன் ஆலய காணிக்கை அளிக்கும் உண்டியல் திறக்கப்பட்டு  பல லட்சம் ரூபாய் அதில் இருந்ததாக தகவல்கள் வந்துள்ள நிலையில்.

ஒரு சில நாட்களில் மிகவும் பிரசித்தி பெற்ற பூச்செரிதல் விழா நடைபெற உள்ள நிலையில்   மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்ய வரும் நிலையில் ஆலயத்தின் முற்பகுதியில் உள்ள கோபுரம் சேதமடைந்து இருப்பதும் அது மட்டும் இல்லாமல் கோயில் வளாகத்தில் குப்பைக் கழிவுகள் நிறைந்து சுகாதாரமற்ற நிலையில் காட்சியளிப்பதால் பக்தர்கள் தங்களது வேதனையை தெரிவித்தனர் .

புதுக்கோட்டை இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலர் முத்துராமன்

புதுக்கோட்டை திருகோ கரணம் பிரகதாம்பாள் கோவிலில் அமைந்துள்ள இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலர் தான் புதுக்கோட்டையில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கோவில்களுக்கு செயல் அலுவலராக பெயருக்கு இருந்து கொண்டு செயல்படாமல் மெத்தனப்போக்கில் இருப்பதாகவும் இந்த அவல நிலையை போக்க ஊழலற்ற முறைகேடு இல்லாத செயல் அலுவலரை நியமிக்க இந்து சமய அறநிலைத்துறை ஆணையராக பொறுப்பேற்றுள்ள முரளிதரன் அவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்   என்றும் புதுக்கோட்டையில் உள்ள பழமை வாய்ந்த பல ஆலயங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Articles

11 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button