புதுக்கோட்டை பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சமூக விரோதிகளின் கூடாரமாக அரசு ஊழியர்களின் வீட்டு வசதி வாரியம்!”நடவடிக்கை எடுக்காத புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!? on YouTube
புதுக்கோட்டை நகராட்சியில் நாளுக்கு நாள் பொதுமக்களின் அடிப்படை தேவைக்கான குடிநீர் பிரச்சனை மற்றும் கழிவு குப்பைகள் ஆங்காங்கே வீதிகளில் தேங்கி கிடக்கும் அவல நிலையில் தற்போது புதுக்கோட்டை நகராட்சி முதல் நிலை வகித்து வருகின்றது.
இந்நிலையில் புதுக்கோட்டையில் இராணியார் அரசு பெண்கள் மேல்நிலைபள்ளியின் எதிர்புறத்தில் குப்பைகள் குவியல் குவியலாக குவிந்து கிடப்பதால் காற்றில் தூற்நாற்றம் வீசி வருவதால் பள்ளி மாணவிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதாகவும் குப்பைகளில் இருந்து வரும் நச்சு காற்றினால் டெங்கு போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆங்காங்கே பள்ளங்களில் தேங்கியிருக்கும் மழை நீரால் கொசுக்கள் உற்பத்தி நிலையமாக மாறி உள்ளதாகவும்.
மேலும் அரசு அலுவலர்கள் மற்றும் உழியர்களுக்கான வீட்டு வசதி வாரியத்தில் கட்டப்பட்ட குடியிருப்புகள் 25 வருடங்கள் ஆகிவிட்டதால் தற்போது மறு சீரமைப்பு செய்யாமல் கட்டிடங்கள் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருப்பதால் அரசு ஊழியர்கள் அனைவரும் இந்த வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து காலி செய்துவிட்டனர் என்றும் தற்போது இந்த கட்டிட வளாகம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி இருப்பதாகவும் இந்த கட்டிடத்திற்க்குள் உள்ளே யாருக்கும் தெரியாமல் சமூக விரோதிகள் உட்கார்ந்து கொண்டு மது குடிப்பதோடு சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட போதை ஊசி மற்றும் கஞ்சா போன்ற போதைப் பொருள்களை பயன்படுத்தி வருவதாகவும் மற்றும் விலைமாதர்கைளை அலைத்து வந்து உல்லாசமாக இருப்பதாகவும் இந்த அடுக்குமாடி கூடியிருப்பு பகுதியில் இவர்கள் மறைமுகமாக தங்கி கொண்டு தனியார் உணவு சப்பளை செய்யும் நிறுவனத்திற்கு ஆர்டர் செய்து மது பாட்டில்கள் மற்றும் பிரியாணி போன்றவற்றை வரவழைத்து இந்த கட்டிடத்தில் உட்கார்ந்து கொண்டு உல்லாசமாக சட்டம் விரோதமாக தற்போது இவர்கள் பயன்படுத்தி வருகின்றர் என்றக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் அரசு இராணியார் பெண்கள் மேல்நிலைபள்ளி வளகத்தின் எதிர்புரத்தில் உள்ள இந்த பழைய அரசு உழியர்களின் குடியிப்பு அடுக்குமாடி கட்டிடங்கள் தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக அமைந்துவிட்டதால் வழிப்பறி கொள்ளை கொலை மேலும் இப்பகுதியில் பெரும் அசம்பாவிதம் நடப்பதற்க்கு வாய்ப்புள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆகவே சட்ட ஒழுங்கு பிரச்சனை மற்றும் அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் புதுக்கோட்டை நகராட்சி இயக்குனர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் உரிய நடவடிகை எடுப்பார்களா!?.என்பது பொதுமக்களின் கேள்வியாக உள்ளது என்பது கூறிப்பிடதக்கது.