மாவட்டச் செய்திகள்

புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலர் பல கோடி ரூபாய்க்கு சொத்துகள் குவிப்பு!! அதிர்ச்சி தகவல்!ஓய்வு பெறுவதற்கு முன்பு தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா!?

மே மாதம் புதுக்கோட்டை மாவட்ட புதிய ஆட்சியராக மெர்சி ரம்யா IAS பொறுப்பேற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடக்கும் ஊழல் முறைகேடுகள் குறையவில்லை! மாவட்ட ஆட்சியர் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பதுதான் நிதர்சனம்!

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா

திருச்சி ஆணையரகத்தில் ஒழுங்கு நடவடிக்கை குழு ஆணையரக பணியாற்றி வந்த செல்வி அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் வருவாய் அலுவலராக /1/12/2021 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பிறந்த ஊர் பெரம்பலூர் மாவட்டம்
இவருடைய பிறந்த தேதி 10/04/1964. இவர் பன்னிரண்டாம் வகுப்பு மட்டுமே படித்து விட்டு அரசியல்வாதிகள் பின்பலத்துடன் வருவாய்த் துறையில் பணியில் சேர்ந்து தற்போது புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலராக பதவி உயர்வு பெற்று கடந்த ஒரு 20 மாதங்களாக பணியில் இருந்து வருகிறார். இவர் ஓய்வு பெற இன்னும் ஒரு வருட காலம் மட்டுமே இருப்பதாக தகவல்!

புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலர்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வட்டாட்சியர் அலுவலகங்களில் ஊழல் முறைகேடு நடப்பதாக சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தால் அந்தப் புகாரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய டிஆர்ஓ எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் கல்லா கட்டுவதில் மட்டுமே புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி இருப்பதாகவும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலராக வந்த பின்பு பல கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்து வைத்துள்ளதாக தற்போது குற்றச்சாட்டு வைத்துள்ளனர். அது மட்டுமில்லாமல் புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி திமுக எம்பி ஆ.ராசா அவர்களின் நெருங்கிய உறவினர் என்றும் பரவலாக பேசப்படுகிறது. எது எப்படியோ மாவட்ட வருவாய் அலுவலர் தன்னுடைய மக்கள் பணியில் நேர்மையாகவும் சரியாகவும் செயல்பட வேண்டும் என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக இருக்கிறது. திமுக ஆட்சிக்கும் கட்சிக்கும் இருக்கும் நற்பெயரை கலங்கப் படுத்தும் வகையில் எந்த அதிகாரிகள் நடந்து கொண்டாலும் தமிழக முதல்வர் உடனே அந்த கருப்பு ஆடுகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் திமுக அடிமட்ட தொண்டனின் ஒட்டுமொத்த குரலாக உள்ளது. அதேபோல வருவாய்த்துறை அமைச்சர் அவர்களும் புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலர் மீது வந்துள்ள புகார் குறித்து உரிய விசாரணை நடத்த அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்!
அதுமட்டுமில்லாமல் புதுக்கோட்டை மாவட்டம்
இலுப்பூர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகிறது .இந்த கல்குவாரிகள் அரசு அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக இயங்கி வருவதாகவும் இதற்கு உடனடியாக இலுப்பூர் RDO குழந்தைசாமி இருப்பதாகவும் மாதம் 25 லட்ச ரூபாய் குவாரி உரிமையாளர்களுக்கு அப்பம் கட்டி வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. குளத்தூர் வட்டாட்சியர் அலுவலரின் ஊழல் முறைகேடு மற்றும் அழகு நிலா ஊழல் முறைகேடு பற்றி தகவல் கொடுத்த தகவல் உரிமைச் சட்டம் பொது தகவல் அலுவலரரின் பதில் அழகு நிலா ஓய்வு பெற்றதால் அது சம்பந்தமாக எந்த பதிலும் தர முடியாது என்று கூறியிருப்பது மிகவும் வேதனை அளிக்க தக்க சம்பவம் ஆகும்.


புதுக்கோட்டை முன்னாள் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு இருந்தபோது குளத்தூர் வட்டாட்சியர் சக்திவேல் ஊழல் முறைகேடு செய்து வருவதாகவும் அதனால் வட்டாட்சியர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட பல கோப்புகளை தகவல் அறியும் சட்டத்தில் சமூக ஆர்வலர்கள் கடந்த ஓராண்டாக கேட்டும் இதுவரை எந்த பதிலும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தும் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்தும் இருந்து தரவில்லை என்ற தகவலும் வந்துள்ளது. இந்த நிலையில் வட்டாட்சியர் மண்டலத் துணை அலுவலர் அழகுநிலாவுடன் சேர்ந்து சப் டிவிஷன் பட்டா மாறுதல் , பட்டா வழங்குதல் போன்ற அனைத்திலும் ஊழல் முறைகேடு செய்து வருவதாக தகவல் உரிமைச் சட்டம்18 /2 கீழ் தகவல் உரிமை ஆணையம் தமிழ் நாடு மாநில தலைமை அலுவலருக்கு சமூக ஆர்வலர்கள் அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மாநில தகவல் உரிமை ஆணைய அலுவலர்கள் இந்த பதிலும் தராமல் மூடி மறைக்க முயற்சி செய்து வருகிறார் என்ற குற்றச்சாட்டை சமூக ஆர்வலர்கள் வைத்துள்ளனர்.
929 வழக்கு மற்றும் 10/508 2020 ஆம் ஆண்டு கரம்பக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO)10 கோடிக்கு மேல் ஊழல் செய்ததாக தகவல் உரிமை சட்டத்தின் கீழ் அனுப்பிய புகாருக்கு 31/05/2023 இல் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில தகவல் அலுவலர் விசாரணை மேற்கொண்டு அந்த அதிகாரிக்கு 5000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது மாநில தகவல் ஆணையம் .தற்போது தகவல் உரிமைச் சட்டம் கேள்விக்குறியாகி உள்ளது என்பதுதான் அதுமட்டுமில்லாமல் பொது தகவல் அலுவலர் மீதுள்ள நம்பிக்கை தற்போது பொதுமக்களுக்கு முற்றிலும் இல்லை என்பதுதான் நிதர்சனம். ஆகையால் தான் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் மனுக்களை கொடுக்க குவிந்து வருகின்றனர்.

ஆகஸ்ட் மாத ரிப்போர்ட்டர் விஷன் இதழில் புதுக்கோட்டை மாவட்டம் வருவாய் அலுவலர் செல்வி அவர்களின் ஊழல் முறைகேடு பற்றி ஆதாரங்களுடன் வெளிவர உள்ளது!


புதுக்கோட்டை மாவட்ட கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் 2022 ஜூலை மாதம் பத்தாம் தேதி சட்டத்துக்கு புறம்பாக அதிகார துஷ்பிரயோகம் செய்யும் புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.


2022 ஜுலை 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலரின் (ஊழல் ராணி)சட்ட விரோத போக்கை கண்டித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

எதற்காக கண்டன ஆர்ப்பாட்டம்!?
கடந்த 2021 ஆண்டு அக்டோபர் மாதம் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகாவிற்குட்பட்ட அறந்தாங்கி கோட்டாட்சியர் அலுவலகத்தில்கிராம நிர்வாக அலுவலர்கள் பணி மாறுதல் கலந்தாய்வு புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலர் முன்பு நடந்தது. அப்போது கலந்து கொள்ளாத கிராம நிர்வாக அலுவலர் கதிர்வேல் என்பவர் நான் மருத்துவ விடுப்பில் இருந்ததால் கலந்து கொள்ளவில்லை ஆகையால் இந்த பரிமாறுதல் கலந்தாய்வு செல்லாது என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு எண் (WP MD) nos.19266 மற்றும் 20575) இந்த வழக்கு விசாரணை 2022 ஜனவரி மாதம் வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி அறந்தாங்கி கோட்டாட்சியர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலர் நடத்திய பணி மாறுதல் கலந்தாய்வு கூட்டம் ரத்து செய்தும் மறு கலந்தாய்வு நடத்தவும் 2022 ஜனவரி 5ஆம் தேதி உத்தரவிட்டது.



அதன் பின் மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து முறையிட்டதால் அலுவலக 24/6/2022 அன்று PAG மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு நீதிமன்ற உத்தரவுப்படி பணி மாறுதல் மறு கலந்தாய்வு நடத்த முடிவு செய்யப்பட்டது அதன்படி மறு கலந்தாய்வு நடத்த புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலர் ஒப்புதல் அளித்தார். இந்தக் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று மாநில வருவாய் நிர்வாக ஆணையர் அவர்களிடம் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பாக 26/06/2022 அன்று முறையிட்டு மனு அளித்தனர். மாநில வருவாய் நிர்வாக ஆணையர் அவர்களும் கலந்தாய்வு நடத்த மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு உத்தரவிட்டார்.(கடித எண்
5 (1)2694891/2022)
மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் 29 6 2022 அன்று காலை10 மணிக்கு அறந்தாங்கி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பணி மாறுதல் கலந்தாய்வு நடக்க இருந்த நிலையில் திடீரென்று ரத்து செய்யப்பட்டது என்று அறிவித்தனர்
இது சம்பந்தமாக மாவட்ட வருவாய் அலுவலரிடம் கேட்டதற்கு அருண் நேரு புவனேஸ்வரி இரண்டு கிராம நிர்வாக அலுவலர்கள் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு செய்து உள்ளார்கள் ஆகவே நீதிமன்ற வழக்கு முடியும் வரை பணி மாறுதல் சம்பந்தமாக மறு கலந்தாய்வு நடத்த முடியாது என்று கூறிவிட்டார். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்ததை தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கம் மாநில வருவாய் நிர்வாக ஆணையர் அவர்களிடம் மறைத்து விட்டனர் இதற்குக் காரணம் இதற்கு முன்னால் இருந்த மாநில வருவாய் நில ஆணையர் சித்தி மணிமாறதல் சென்றவுடன் புதிதாக பிரபாகர் ஐஏஎஸ் பொறுப்பேற்றுள்ளதாகவும் இது சம்பந்தமாக அவர் தெரிந்திருக்க முடியாது என்றும் அதேபோல் கலந்தாய்வில் கலந்துகொண்டு பணியில் இருக்கும் இரண்டு பேர் மாநில வருவாய் நிலா ஆணையர் அவர்கள் உத்தரவை ரத்து செய்யவும் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.

நீதிமன்றம் உத்தரவு மற்றும் மாநில வருவாய் நில நிர்வாக ஆணையர் உத்தரவு இருந்தும் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்தும் மாவட்டத்தை சீர் செய்யவும் மாவட்ட ஆட்சியாளர்களுக்கு ஆட்சியாளர்களுக்கு இடம் வலியுறுத்தி 15/07/2022 கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


கண்டன அறிக்கையில் முக்கியமாக புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலர் ஒரு ஊழல் ராணி என்றும் ஊழல் முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் பணி மாறுதல் பெறுவதற்கு சட்டவிரோதமாக அதிகார துஷ்பிரயோகம் செய்து பல லட்சம் லஞ்சம் பெற்றுள்ளதாகவும் மற்றும் வாஷிங் மெஷின் பீரோ போன்ற விலை உயர்ந்த பொருள்களையும் கையூட்டாக பெற்றிருப்பதாகவும் கடுமையாக விமர்சித்து உள்ளனர்.

இது சம்பந்தமாக நாம் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் உள்ள நிர்வாக அலுவலகத்தில் விசாரித்த போது கடந்த 2021 ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த பணி மாறுதல் கலந்தாய்வு கலந்து கொண்ட கிராம நிர்வாக அலுவலர்கள் பணி மாறுதல் பெற்று சென்று தற்போது பத்து மாதமாக கிராம நிர்வாக அலுவலர் பணி செய்து வரும் நிலையில் திடீரென்று மறுக்கலந்தாய் வைத்து பணி மாறுதல் செய்தால் எப்படி என்றும் கடந்த வருடம் கலந்தாய்வில் பணி மாறுதல் பெற்று பணியில் இருக்கும் பல கிராம நிர்வாக அலுவலர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்கள். அது மட்டும் இல்லாமல் கலந்தாய்வில் முறையாக பணி மாறுதல் பெற்று பணியில் இருக்கும் நபர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதால் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலவில் இருக்கும் போது பணி மாறுதல் கலந்தாய்வு நடத்த வலியுறுத்துவது நீதிமன்ற அவமதிப்பு ஆகும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இது எப்படியோ அரசு அலுவலர்கள் தங்களுக்கு நீதி கேட்டு நீதிமன்றம் சென்று விட்டாலே நீதிமன்ற உத்தரவு வரும் வரை காத்திருப்பது தான் நல்லது. அதை விட்டுவிட்டு நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருக்கும் போது மாவட்ட உயர் அதிகாரிகள் முறைகேடாக நடப்பதாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வழிவகுக்கும் என்றும் இதனால் பல கிராம நிர்வாக அலுவலர்கள் வேலையை இழக்கக்கூட நேரிடும் என்று நன்கு அறிந்த சிவில் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளார்கள்.

LinkedIn Tumblr Pinterest Reddit VKontakte Share via Email Print
Related Articles

Watch “முதியோர் ஓய்வூதியம் கேட்டு மனு கொடுத்த பெண்மணியை தலையில் அடித்த வருவாய்த்துறை அமைச்சர் KKSSR!? அதிர்ச்சி வீடியோ வைரல்! on YouTube
July 13, 2022

40 வருடம் முன்பு தகரத்தில் கூரை போடப்பட்ட ஒரு கடைக்கு 40,000ரூபாய் வாடகை! இல்லை என்றால் 25 லட்சம் ரூபாய் லஞ்சம் !பேரம் பேசி பல கோடி ரூபாய் நூதன மோசடி ஊழல் செய்ய ஆரம்பித்திருக்கும் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக BDO ..! அதிர்ச்சி தகவல் !நடப்பது என்ன!?
December 31, 2021

பெண் ஊழியருடன் உல்லாசமாக இருந்த கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய ABDOஅதிரடி பணியிட மாற்றம்!??
December 15, 2021
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

Comment *

Name *

Email *

Website

Save my name, email, and website in this browser for the next time I comment.

Archives
July 2023
June 2023
May 2023
April 2023
March 2023
February 2023
January 2023
December 2022
November 2022
October 2022
September 2022
August 2022
July 2022
June 2022
May 2022
April 2022
March 2022
February 2022
January 2022
December 2021
November 2021
October 2021
September 2021
August 2021
July 2021
Categories
Uncategorized
அரசியல்
அரசியல் காமெடி
அரசு நலத்திட்டங்கள்
ஆன்மிகம்
ஆன்மீகத் தளம்
இந்தியா
இராணுவம்
ஈழத் தமிழர்கள்
உணவு பாதுகாப்பு
உலகம்
கல்வி
கனிம வளங்கள்
காவல் செய்திகள்
காவல்துறை விழிப்புணர்வு
கூட்டுறவு சங்கம் வங்கி
கொரோனா தடுப்புப் பிரிவு
கோலிவுட்
கோலிவுட் சினிமா
சினிமா
சினிமா தொழிலாளர்கள்
சென்னை மாவட்டச் செய்தி
தகவல் அறியும் உரிமைச் சட்டம்
தமிழக அரசு
தமிழக தேர்தல்
தமிழ்நாடு
தமிழ்நாடு அரசு செய்திகள்
தொழில் துறை
தொழில்துறை
தொழிற்கல்வி
நகராட்சி
நகராட்சி தேர்தல்
நகைச்சுவை
நீதி மன்றம் தீர்ப்பு
நெடுஞ்சாலைத் துறை
பாலிவுட்
பொதுப்பணித்துறை
போக்குவரத்துத் துறை
மத்திய அரசு
மருத்துவத் துறையில் வேலை
மருத்துவம்
மாநகராட்சி
மாவட்டச் செய்திகள்
மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி
மின்சார வாரியம்
முதல்வர் கொரோனா பொது நிவாரண நிதி
ரயில்வே
லஞ்ச ஒழிப்புத் துறை
வனத்துறை
வானிலை
விருதுநகர்
விவசாயம்
விளையாட்டு
வேலைவாய்ப்பு
வேளாண்துறை கடனுதவி
© Copyright 2023, All Rights Reserved.
Facebook
Twitter
WhatsApp
Telegram

Related Articles

One Comment

  1. Excellent coverage on a timely subject. I’d like to know more about the historical context leading up to this occurrence.
    Perhaps a future report could explore that?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button