பெண்களுக்கான பிரத்தியோக டாஸ்மாக் உயர்தர மது பார் அனுமதியா !! ?உற்சாகத்தில் பெண் மதுப் பிரியர்கள்!தமிழ் வளர்த்த மதுரை தமிழ் சங்கத்தின் அருகே அவல நிலை! முதல்வருக்கு கோரிக்கை!

மதுரையில் மகளிர்க்கென தனி உயர்தர மதுபான டாஸ்மாக்_பார்.. நடத்த அனுமதியா!?
பெரியார் அண்ணா கலைஞர் இந்த மூன்று தலைவர்களும் பெண்களுக்கும் சம உரிமை கொடுக்கச் சொன்னது இதுதானா என்று சமூக ஆர்வலர்களின் விமர்சனமாக உள்ளது! தமிழ்நாட்டில் கடந்த பத்து வருடங்களாக மதுக்கடைகளை மூட பல்வேறு சமூக ஆர்வலர்கள் பெண்கள் போராடி வருகின்ற நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா படிப்படியாக கடைகளை மூடுவதாக நீதிமன்றத்தில் உறுதியளித்திருந்தார் அதையடுத்து 2016ஆம் ஆண்டு தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்படும் என்று அறிக்கை வெளியிட்டார் ஆனால் அதிமுக வெற்றி பெற்ற பிறகு ஜெயலலிதா ஒரு வருடத்தில் உடல்நிலை குறைவால் காலமானார் .அதன்பின் அதிமுகவின் முதல்வராக எடப்பாடி அவர்கள் 4 வருடமாக ஆட்சி செய்து வந்த நிலையில் மதுகடைகளை மூட எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை .அதற்கு பதில் புது கடைகளை திறக்க தான் முற்பட்டனர் . தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கடைகளை நீதிமன்றம் உத்தரவிட்டும் அந்த சாலைகள் நெடுஞ்சாலைகள் ஆக மாற்றி அமைத்து கடைகளை திறந்தனர் அதற்கு பல்வேறு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் .இந்த நிலையில் 2011 தேர்தல் வந்த நிலையில் திமுக அதிமுக இரண்டு கட்சிகளுமே மதுபான கடைகளை மூடுவதை பற்றி தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை! ஏனென்றால் மதுபானக்கடையினால் வருடத்திற்கு 30 ஆயிரம் கோடி தமிழக அரசுக்கு லாபம் ஈட்டி வரும் நிலையில் அதை கைவிடலாமா என்ற ஒரு ஆலோசனை நடந்து வந்த நிலையில் மறுபக்கம் கடைகளை மூடினால் மது பிரியர்கள் ஓட்டு எந்தப் பக்கம் இருக்கும் என்ற ஒரு பெரிய கேள்வி இருந்ததால் 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக திமுக மதுபான கடை மூடுவது பற்றி சொல்லாததற்கு காரணம் ஆகும். அதன்பின் தேர்தல் முடிந்து திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 500க்கு மேல் தேர்தல் அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கொடுத்ததில் 200க்கும் மேற்பட்ட திட்டங்களை நிறைவேற்றியதாக கூறிவந்த நிலையில் மதுபானக்கடைகளை பற்றி எந்த ஒரு முடிவையும் அறிவிக்கவில்லை. மாறாக தற்போது மதுரை மாநகரில் சொக்கிகுளம் விஷால் மாலில் 5ஸ்டார் அந்தஸ்துடைய பெண்களுக்கான உயர்தர தனி மதுபான கூடம் என்ற ஒன்றை தமிழக அரசு டாஸ்மாக் ஆரம்பிக்க உள்ளதை கண்டு தென்மாவட்டத்தில் உள்ள மகளிர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் தமிழ் வளர்த்த சங்கத்தமிழ் மதுரை தமிழ்தான் என்றும் அதற்கு எதிராக இங்கே பெண்களுக்கு மதுபான கூடம் ஆரம்பிக்கப்பட உள்ளது மிக வேதனையாக இருப்பதாகவும் இதை மறு பரிசீலனை செய்ய தமிழக முதல்வர் முன்வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எது எப்படியோ தமிழக முதல்வர் இந்தியாவில் தமிழ்நாடு முதல் மாநிலமாக ஆக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வருவதால் எதிர்க்கட்சிகள் சமூக ஆர்வலர்கள் இதுபோன்ற விமர்சனங்களுக்கு ஆளாக வேண்டாம் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்