பேருந்து நிலையத்தில் சுகாதாரமற்ற நிலையில் திறந்த வெளியில் சிறுநீர் கழித்து வருவதை தடுக்க முடியாமல் தடுமாறும் சிதம்பரம் நகராட்சி!
நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் சிதம்பரம் நகரம் சீர்மிகு நகரமாக மாற்றிடும் வகையில் மேற்கொள்ளவேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்த கருத்துக் கேட்பு கூட்டம் இன்று (26/03/2022) நடைபெற்றது.
சிதம்பரம் நகரம் விரைவில் சீர்மிகு நகரமாக மாற்றப்படும்”- அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உறுதி!
சிதம்பரத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும் மற்றும் சிதம்பரம் குப்பைகள் இல்லாத நகரமாக மாற்றப்படும்என்று சிதம்பரம் நகராட்சி செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதற்கு முன்பு சீர்காழி பேருந்து நிலையத்திற்கு நாளொன்றுக்கு சுமார் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் வந்து செல்கின்றனர்.
அப்படி வந்து செல்பவர்களுக்கு பேருந்து நிலையத்தில் சுகாதாரமான பொதுக்கழிப்பிடம் இல்லாமல் இருப்பதால் முதலில் பொதுமக்களுக்கு
புது இலவச பொது கழிப்பிடம் கட்டித்தர படுமா என்று சிதம்பரம் நகராட்சி தலைவர் செந்தில்குமாரிடம் சமூக ஆர்வலர் கேள்வி எழுப்பியுள்ளனர்!
மொத்தம் 33 வார்டுகளில்
ஆக்கிரமிப்பு குளங்கள் மீட்கும் பணியில்
சிதம்பரம் நகராட்சி சேர்மன் செந்தில்குமார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியன் தலைமையில் சிதம்பரம் சேர்மன் செந்தில்குமாரும்நகராட்சி ஆணையா் எம்.அஜிதா பா்வீன், பொறியாளா் மகாராஜன், நகா்மன்ற துணைத் தலைவா் முத்து உள்ளிட்டோா்
சிதம்பரம் நகரை சீா்மிகு நகரமாக மாற்றிடும் வகையில் மேற்கொள்ள வேண்டிய வளா்ச்சிப் பணிகள் குறித்த பொதுமக்களின் கருத்துக் கேட்பு நடத்தியது வெரும் கண்துடைப்பு என்று சமூக ஆர்வலர்கள் மத்தியில் குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளது
(திட்டத்தின் பெயர் :2015_2016)
யுனவர்சல் கழிப்பறை பல்வேறு இடங்களில் கட்டப்பட்டது
யுனிவர்சல் கழிப்பறை பல்வேறு இடங்களில் ரூ.13.00 லட்சத்திற்கு மக்களின் பயன்பாட்டிற்காக கட்டப்பட்டுள்ளது. முத்துமாணிக்கம் தெரு, தில்லை காளியம்மன் கோவில் தெரு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனிதனியாக, மின் நகர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனிதனியாக கட்டப்பட்டுள்ளது என்று அரசு பொதுத் தகவலில் இருக்கிறது.
ஆனால் உண்மை நிலவரம் இதற்கு மாறாக உள்ளது சிதம்பரம் பேருந்து நிலையத்தில் உள்ள பொதுக் கழிப்பிடம் சரியான முறையில் பராமரிக்காமல் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதால் பேருந்து நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் திறந்தவெளியில் சிறுநீரகம் கழித்து வருவதை கண்டு பெண்கள் முகம் சுளித்து செல்கின்றனர் .
அதுமட்டுமில்லாமல் கிராமத்திலிருந்து நகரத்திற்கு வரும் பொதுமக்கள் பேருந்து நிலையத்திற்கு வந்து பேருந்துகளுக்கு காத்திருக்கும் பொதுமக்கள்பொது கழிப்பிடம் இல்லாமல் திறந்த வெளியில் சிறுநீர் கழித்து வருவதால் அங்கு வந்து செல்லும் பள்ளி மாணவர்கள் குழந்தைகளுக்கும் மற்றும் பயணிகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது ஆகவே இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் நகராட்சியில் ஆணையர் மற்றும் ஜெர்மன் மற்றும் பொறியாளர்கள் இருப்பது தான் வேதனையாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியன் சிதம்பரம் நகராட்சியில் 2021-22-ஆம் ஆண்டில் ரூ.21 கோடியில் வளா்ச்சிப் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தாா்.
சிதம்பரம் நகராட்சியில் கடந்த ஆட்சியின்போது புதை சாக்கடை திட்டம் சரிவர நிறைவேற்றப்படாததால் குடிநீரில் சாக்கடை கழிவுநீா் கலந்துவருகிறது.
இதை கருத்தில்கொண்டு சிதம்பரம் நகராட்சி, அண்ணாமலைநகா் பேரூராட்சி மக்களுக்காக ரூ.127 கோடியில் கொள்ளிடத்திலிருந்து புதிய கூட்டுக் குடிநீா் திட்டத்தை செயல்படுத்தி புதிய குழாய்கள் அமைத்து சுத்தமான குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நகரம் விரிவாக்கம் செய்யப்பட்டு பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.
சிதம்பரம் நகராட்சி சேர்மன் செந்தில்குமார் அதிரடி
சிதம்பரத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் நகராட்சி நிர்வாகம் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், 30 ஆண்டுகளுக்கு மேலாக காணாமல் போன குளங்கள் கூட மீட்கப்பட்டுள்ளது.சிதம்பரம் பகுதியில் நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டி, 2013ம் ஆண்டு லயன்ஸ், ரோட்டரி, இந்து ஆலய பாதுகாப்பு குழு உள்ளிட்ட 35 இயங்கங்கள் இணைந்து, நகரில் ஆக்கிரமிப்பில் உள்ள குளங்கள் மற்றும் வடிகால்களை மீட்க கோரி, அரசிடம் கோரிக்கை வைத்தனர்.
அப்போதைய சிதம்பரம் டி.எஸ்.பி., ராஜாராம் ஒத்துழைப்புடன், வருவாய் மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில், முதல் கட்டமாக சிதம்பரம் திருப்பாற்கடல், யானை மேட்டுகுளம், வண்ணான் குளம் போன்ற சிறு சிறு குளங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டது.தொடர்ந்து, 2018ல் ஞானபிரகாசம் குளம், ஓமக்குளம், நாகசேரி குளம், தில்லையம்மன் ஓடை, பாலமான் குளங்கள் மீட்கப்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டது.இந்நிலையில் ஐகோர்ட் உத்தரவுபடி, தமிழக அரசு நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றுவதில் கடுமை காட்டியது. அந்த வகையில், கோவில் நகரான சிதம்பரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி தீவிரம் காட்டியுள்ளது.அதன்படி, அண்ணா குளம் அளவீடு பணி நடந்தபோது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது, பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து, ஆக்கிரமிப்புகளை படிப்படியாக அகற்றி வருகின்றனர்.தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்கடும்போராட்டத்திற்குபின் தச்சன் குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை நகராட்சி நிர்வாகம் அகற்றியது.சிதம்பரம் பஸ் நிலையம் பின்புறம், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன குமரன் குளம் மீட்கும் பணி துவங்கியது.இக்குளத்தை ஆக்கிரமித்திருந்த கான்கிரீட் அடுக்குமாடி கட்டடங்கள், வீடுகள் பொக்லைன் மூலம் அகற்றப்பட்டு வருகிறது.மேலும், சிதம்பரம் அடுத்த இளநாங்கூர் கிராமத்தில் துவங்கி, அண்ணாமலை நகர் மருத்துக்கல்லுாரி வரையில் 5 கிலோ மீட்டர் செல்லும் கான்சாகிப் வாய்க்கால் கரைகள் அளவீடு பணி நடக்கிறது. அதன் பின்பு வாய்க்கால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.சேர்மன் கோரிக்கைசிதம்பரத்தில் குளம் மற்றும் வாய்க்கால் ஆக்கிரமிப்பில் ஆயிரம் வீடுகளுக்கு மேல் அகற்றப்பட்டுள்ளது. நீர்நிலை ஆக்கிரமிப்பில் வெளியேற்றப்பட்டவர்களுக்கு தமிழக அரசு மாற்று இடம் வழங்க வேண்டும் என, பல்வேறு கட்சிகள், பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.சிதம்பரம் சேர்மன் செந்தில்குமாரும் கோரிக்கை வைத்துள்ளார். அமைச்சர் பன்னீர்செல்வம், பாதிக்கப்பட்டவர்களுக்கு அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.சிதம்பரம் நகராட்சிக்கு வரும் பொதுமக்களின் சிரமங்களை தவிர்க்க கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார் என சேர்மன் செந்தில்குமார் கூறினார். சிதம்பரம் குப்பைகள் இல்லாத நகரமாக மாற்றப்படும். கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் சிதம்பரம் நகரத்தில் தடையின்றி தண்ணீர் வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது என்று சிதம்பரம் நகராட்சி சேர்மன் செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
சிதம்பரத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும். உழவர் சந்தையில் ரூ. 5.77 லட்சம் செலவில் காய்கறி மார்க்கெட் அமைக்கப்பட உள்ளது. இப்பணி முடிந்தபின் நகரப்பகுதியில் மேலும் போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்தப்படும். கோடைக் காலத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க 4 இடங்களில் புதிய போர்வெல் அமைக்கும் பணி நடக்க உள்ளது. நீர்நிலை பகுதிகளில் இருந்து அகற்றப்பட்ட குடும்பத்தினருக்கு அரசிடம் கோரிக்கை வைத்து, அடுக்கு மாடி குடியிருப்பு கட்டி தரப்படும். மின் மயானம் அமைக்கும் பணி ரூ. 1.5 கோடியில் கூனிசம்மேட்டில் துவங்கப்பட உள்ளது.
நகரில் உள்ள குளங்கள் துார் வாரி, நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும். சிதம்பரத்தை பசுமை நகராக்க, அனைத்து வார்டுகளிலும் மரக்கன்றுகள் நடும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. அனைத்து தெரு விளக்குகளும் எல்.இ.டி., விளக்குகளாக மாற்றப்படும். இதன் மூலம் பெருமளவு மின்சார கட்டணத்தை குறைக்க முடியும். சிதம்பரம் நகராட்சிக்கு பிறப்பு, இறப்பு, வீடு கட்ட அனுமதி வாங்குவது உள்ளிட்ட பணிகளுக்காக வரும் பொதுமக்களுக்கு தாமதம் மற்றும் சிரமம் ஏற்படாத வகையில், உடனடியாக முடித்து தரப்படும்.
இதை கண்காணிக்க ஒரு கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.சிதம்பரம் நகரத்தின் வளர்ச்சி பணிகள் குறித்தும், நகராட்சியை மேம்படுத்துவது குறித்தும், ரோட்டரி சங்கம், வர்த்தக சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்களிடம் இன்று கருத்து கேட்பு கூட்டம் நடக்க உள்ளது.இதில் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பங்கேற்க உள்ளார். தொடர்ந்து நகரத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற உள்ளது.சிதம்பரம் நகரத்தின் பாரம்பரியம் காக்கும் வகையில் நகராட்சியின் செயல்பாடுகள் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.
எது எப்படியோ இதுபோன்று புது நகராட்சி தலைவர் மற்றும் ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் பொதுமக்களிடம் மக்களுக்கு பல நூறு கோடி ரூபாய் நலத் திட்டங்களை அறிவிப்பதோடு இல்லாமல் அந்தத் திட்டங்களை நல்ல முறையில் நேர்மையான அதிகாரிகளை வைத்து நேர்மையான ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் பொது மக்களுக்கு அடிப்படை வசதியான குடிநீர் கழிப்பிடம் மருத்துவம் இந்த மூன்றையும் முதலில் நகராட்சி நிர்வாகம் செய்து கொடுத்தால் மட்டுமே தற்போது நடந்து வரும் ஆட்சிக்கும் கட்சிக்கும் நற்பெயர் கிடைக்கும். முதல்வர் ஸ்டாலின் கூறுவதுபோல் இந்தியாவின் தமிழகம் முதல் மாநிலமாக வர வேண்டும் அதற்கு அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்ற கனவை நிறைவேற்ற அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.