பேருந்து நிலையமே இல்லாத பேரூராட்சி..?
சுட்டெரிக்கும் வெயிலில்
பேருந்துக்காக கை குழந்தைகளுடன் சாலைகளில் தாய்மார்கள் காத்திருக்கும் அவலம்!
நடவடிக்கை எடுப்பாரா உள்ளாட்சித் துறை அமைச்சர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்!?

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பேரூராட்சி அவல நிலை!?
தமிழ்நாட்டில் உள்ள 490 பேரூராட்சிகளை மாநில அளவில் நிர்வகிக்க, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் பேரூராட்சிகள் இயக்ககம் சென்னையில் செயல்படுகிறது.

ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சராக திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஐ பெரியசாமி இருக்கிறார்.
இந்த பேரூராட்சிகள் ஐந்து வகையில் அதன் வருவாய்க்கு ஏற்ப பிரிக்கப்பட்டுள்ளன. அவை :-
மூன்றாம் நிலை பேரூராட்சி
இரண்டாம் நிலை பேரூராட்சி
முதல் நிலை பேரூராட்சி
தேர்வு நிலை பேரூராட்சி
சிறப்பு நிலை பேரூராட்சி என வருட வருமானத்திற்கு ஏற்றவாறு பிரிக்கப்படுகின்றன. இதில் மூன்றாம் நிலை பேரூராட்சி என்பது பத்து இலட்சத்துக்கு குறைந்த வருவாய் உடையதும், இரண்டாம் நிலை பேரூராட்சி என்பது ஆண்டிற்குப் பத்து இலட்சத்திற்கு மேல் வருவாயும், முதல் நிலை பேரூராட்சி என்பது இருபத்து ஐந்து இலட்சத்துக்கு மேலும், தேர்வு நிலை பேரூராட்சி என்பது ஆண்டிற்கு ஐம்பது இலட்சத்துக்கு மேலும், சிறப்பு நிலை பேரூராட்சி என்பது ஒரு கோடிக்கு மேல் வருவாய் ஈட்டுவது, என நகராட்சியைப் போலவே அதன் வருவாய்க்கு ஏற்பப் பிரிக்கப்படுகிறது. இந்த பேரூராட்சிகள், நகராட்சியைப் போலவே தன்னிச்சையாக செயல்படும் தன்னாட்சி அதிகாரம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 23 பேரூராட்சிகள் உள்ளன.
அகரம்
அம்மைநாயக்கனூர்
ஆயகுடி
அய்யலூர்
அய்யம்பாளையம்
பாலசமுத்திரம்
சின்னாளப்பட்டி
எரியோடு
வத்தலகுண்டு
தாடிக்கொம்பு
பட்டிவீரன்பட்டி
சித்தையன்கோட்டை
சேவுகம்பட்டி
நத்தம்
பாளையம்
நத்தம்
ஆத்தன்விளை
கொடுமலையன்
புளியங்குளம்
கோட்டைப்பட்டியூர்
கார்மேல்நகர்
பொன்னமராவடி
கச்சரைபட்டி
இந்த பேரூராட்சிகள் திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ளன.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி
வடமதுரை தேர்வு நிலை பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன.
வடமதுரை பேரூராட்சி தலைவராக நிருபாராணி, துணைத் தலைவராக மலைச்சாமி, செயல் அலுவலராக பதமபிரிய பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மனோரஞ்சிதம்
உள்ளனர்.
வடமதுரை
பேரூராட்சிக்குட்பட்ட பேருந்து நிறுத்தம் அருகே காந்தி சிலை உள்ளது
அதனை சுற்றி உள்ள பகுதி அனைத்து கடைகளும் கடந்த 50 வருடங்களுக்கு மேல் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது.
வடமதுரை பேரூராட்சி சார்பாக வழக்கு தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுபடி


ஆக்கிரமிப்புகளை பேரூராட்சி நிர்வாகத்தால் அகற்றப்பட்டு அந்த இடம் மீட்கப்பட்டு தற்போது வடமதுரை பேரூராட்சிக்கு கட்டுப்பாட்டில் உள்ளது
ஆனால் வட மதுரை பேரூராட்சியில் அரசு மருத்துவமனை,காவல் நிலையம் சார் பதிவாளர் அலுவலகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் சில முக்கிய அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருவதால் தினம்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வடமதுரைக்கு அலுவலகப் பணிகளுக்கு வந்து செல்கின்றனர்.
ஆனால் தமிழ்நாட்டிலேயே ஒரு பேரூராட்சியில் பேருந்து நிலையம் இல்லை என்றால் அது வடமதுரை பேரூராட்சி தான் என அப்பகுதி பொது மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
பேரூராட்சி சார்பாக ஆக்கிரமிப்புகளை அகற்றி தன் வசம் வைத்துள்ள இடத்தில் நிரந்தர பேருந்து நிலையம் அமைக்க முடியாவிட்டாலும்



பேருந்துக்காக மலையிலும் வெயிலிலும் பல மணி காத்திருக்கும் பயணிகளின் நலன் கருதி தற்காலிக பேருந்து பயணிகள் நிழற்குடையாவது வடமதுரை பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக அமைக்க வேண்டும்.
அதுமட்டுமில்லாமல்
பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் பெண்களுக்கு கழிப்பறை வசதி இல்லாததால் உடனடியாக கழிப்பறை கட்டிடம் மற்றும் குடிநீர் வசதி உடனடியாக செய்து தர வேண்டும் என


பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அது மட்டும் இல்லாமல்
அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் கலைமகள் உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் படித்து வரும் ஆயிரக்கணக்கான பள்ளி மாணவ மாணவிகள் செல்வதற்கு மாலை 4 மணிக்கு மேல் போதுமான பேருந்து வசதி இல்லாததால் பல மணி நேரங்கள் காத்திருந்து செல்ல வேண்டிய
நேரத்தில்
கழிப்பறை வசதி இல்லாததால் பெண் குழந்தைகள் பெரும் அவதிப்பட்டு வருவதாகவும் இதனால் பல மாணவிகளுக்கு உடல் சோர்வு ஏற்பட்டு உடல்நிலை சரியில்லாமல் மறுநாள் பள்ளிகளுக்கு செல்ல முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டதாகவும் வடமதுரையில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் நிழற்குடை அமைத்துக் கொடுக்குமாறுபலமுறை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அதிர்ச்சி தகவலை வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல்
பயணிகள் நிழற்குடை இல்லாததால் பேருந்துக்காக காத்திருக்கும் நூற்றுக்கணக்கான பயணிகள் சுட்டெரிக்கும் வெயிலில் சாலைகளில் காத்திருக்க வேண்டிய அவல நிலையும் நீடித்து வருகிறது .
எனவே வடமதுரைக்கு வந்து செல்லும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நலன் கருதி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தை

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு நிரந்தர பேருந்து நிலைய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
அதுமட்டுமில்லாமல்
வடமதுரை பேரூராட்சிக்கு வருமானம் ஈட்டுவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை வணிகர்களிடம் பெற்றுக்கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றிய இடத்தில் தற்காலிக கடைகளை கட்டிக் கொடுக்க வடமதுரை பேரூராட்சி நிர்வாக முடிவு செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் ஒரு முடிவு கட்டுவதற்கு ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி முடிவு எடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
எது எப்படியோ
முதலில் பொதுமக்களுக்கு தேவையான பேருந்து நிலைய கட்டிடம் பயணிகள் நிழற்குடை
கழிப்பறை ,குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை வடமதுரை பேரூராட்சி நிர்வாகம் செய்து கொடுக்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அதற்கான நடவடிக்கையை முன் எடுக்க முன் வேண்டும் என பொதுமக்கள் சார்பாக கோரிக்கை வைக்கின்றனர்.
பொறுத்திருந்து பார்ப்போம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையை..

