மாவட்டச் செய்திகள்

பேருந்து பணிமனை மேலாளரின் அலட்சியப் போக்கு மற்றும் காலாவதியடைந்து பல பல வருடங்கள் ஆன பேருந்து நான்கு சக்கரங்களில் பிரேக் மற்றும் டயர்கள் பராமரிப்பு இல்லாமல் இருந்ததால் விபத்துக்கு காரணம்!?கன்னியாகுமரி மாவட்ட போக்குவரத்து கழக மேலாளர் மீது நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!?

கன்னியாகுமரி அருகே அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர், நடத்துனர் உட்பட 25 பேர் காயமடைந்தனர்.

விபத்துக்குள்ளான பேருந்து



கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே தாழக்குடி பகுதிக்கு புத்தேரி மார்க்கமாக அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இன்று (ஜூன் 26) மதியம் தாழக்குடி சென்ற பேருந்து அங்கிருந்து நாகர்கோவிலுக்கு இறச்சகுளம், புத்தேரி மார்க்கமாக வந்துள்ளது.

இந்தப் பேருந்தினை டிரைவர் கிரீசன் தம்பி என்பவர் இயக்கியுள்ளார். அப்போது புத்தேரி பகுதியில் வரும் போது ஓட்டுநர் கிரீசன் தம்பியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வளைவில் ரோட்டோரமாக இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.அரசுப் பேருந்து விபத்துபேருந்து கவிழ்ந்த வேகத்தில் தலைகீழாக மூன்று முறை புரண்டு நிமிர்ந்துள்ளது. இதில் ஓட்டுநர் கிரீசன் தம்பி, நடத்துனர் பால சுப்பிரமணியன் உட்பட 25-க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில்அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், பலத்த காயமடைந்த 14 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவலறிந்த வடசேரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தினால் அப்பகுதியில் பரபரப்பு



கன்னியாகுமரி மாவட்டம்
நாகர்கோவில் புத்தேரி குளம் அருகே ஏற்பட்ட பேருந்து விபத்து குறித்து தகவல் அறிந்த குமரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும் நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான வணக்கத்துக்குரிய ரெ.மகேஷ் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார்….
அதுபோல்
நாகர்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் பார்வையிட்டார்.
மேலும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் பயணிகளை நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்…..
இது மனிதநேயம்

விபத்துக்குள்ளான பேருந்து


விபத்திற்குள்ளான பேருந்தில்
நான்கு டயரும் தேய்ந்த நிலையில்
பட்டனே இல்லாத அவல நிலையில் இருந்தது.
இந்த பஸ் எந்த ஆண்டு பண்பாட்டுக்கு விடப்பட்டது!?
அதன் ஆயுட்காலம் எல்லம் முடிந்தது எப்போது!?
இந்த பயணிகள் பேருந்து
புதிய டயர் கண்டதே இல்லையாம்!?
கடந்த அதிமுக 10 ஆண்டு ஆட்சியுலும்
சரி, தற்போது ஓராண்டு திமுக ஆட்சியுலும் சரி இதுபோன்ற பேருந்துகளில் பயணிகளை ஏற்றி ஓட்டிச் செல்லும் ஓட்டுநர்களுக்கு
சுதந்திர தினம்,
குடியரசு தினம் நிகழ்ச்சியில்
தமிழக அரசு சார்பாக
மாவட்ட ஆட்சியாளர்கள் பழக்கங்களை வழங்கி கௌரவப்படுத்த வேண்டும்!

விபத்துக்குள்ளான இந்த பேருந்தின் ஆயுட்காலம் காலவதியாகிவிட்டது என்ற அதிர்ச்சித் தகவல் வந்துள்ளது.
இதற்கு அனுமதி கொடுத்த
வட்டார போக்குவரத்து அதிகாரி, மாவட்ட ஆட்சியர் மற்றும் மண்டல போக்குவரத்து துறை மண்டல மேலாளர் தான் இந்த விபத்துக்கு பொறுப்பு ஏற்கவேண்டும்.
தற்போது விபத்துக்குள்ளான பேருந்து தகுதி நிலையைப் பற்றி
தகவல் உரிமை பெறும் சட்டத்தில்
பல்வேறு கேள்விகள் கேட்கபட்டு உள்ளது.
அதன் பின்னர்தான் போக்குவரத்துத்துறை கழகத்தில்
ஊழலுக்கு துணைபோன அதிகாரிகள் மீது
மக்கள் நீதிமன்றத்தில் சவுக்கடி கொடுக்கப்டும் என்று
பொதுமக்கள் நலன் கருதி
சமூக ஆர்வார்
சிபிஐஎம்எல்(விடுதலை)
கட்சி மாநகர செயலாளர்
வே.அய்யப்பன் தெரிவித்துள்ளார்
எது எப்படியோ கடந்த கடந்த அதிமுக ஆட்சியில் பத்தாண்டுகளாக காலாவதியான பேருந்துகளை வைத்து ஊழல் முறைகேடு நடந்துள்ளதாகவும் இது சம்பந்தமாக பல்வேறு புகார்கள் தற்போதுள்ள தமிழக முதல்வர் அவர்களுக்கு வந்துள்ள நிலையில் நேர்மையான அதிகாரிகளை நியமித்து பேருந்து பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்துகளை ஆய்வு செய்தால் மட்டுமே பணிமனைகள் நடக்கும் ஊழல் முறைகேடுகளில் ஈடுபடும் அவர்களை மீது நடவடிக்கை எடுப்பதுடன் இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் தடுக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button