பொதுமக்களிடம் வசூல் செய்யும் வரிப்பணத்தை நூதன முறை கேடு செய்யும் பேரூராட்சி இளநிலை உதவியாளர்!
திருவண்ணாமலை மாவட்டம் ஆட்சியரின் நடவடிக்கை பாயுமா!?

பொதுமக்களிடம் வசூல் செய்யும் வரிப்பணத்தை முறை கேடு செய்யும் பேரூராட்சி கிளார்க்!?
திருவண்ணாமலை மாவட்டம் ஆட்சியரின் நடவடிக்கை பாயுமா!?
திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் பேரூராட்சியில் நிரந்தர செயல் அலுவலர் இல்லாததால் அரசு நல திட்ட பணிகள் முழுமையாக முடியாமல் தேக்கமடைந்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் தற்போது டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் வேண்டும்.இனிமேல் மழைக்காலம் என்பதால் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுப்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் உஸ்மா பீ கடந்த மே மாதம் பணி ஓய்வு பெற்றாா்.
அந்தப் பணியை போளூா் பேரூராட்சி செயல் அலுவலா் முகமது ரிஸ்வான் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறாா்.
அந்த செயல் அலுவலரை யாரும் பாா்க்க முடியாத நிலை உள்ளதாம் அவா் எப்போது வருகிறாா். எப்போது அலுவலகத்தில் இருக்கிறார். என்பதுகூட பொதுமக்களுக்கும் வாா்டு உறுப்பினா்களுக்கும் தெரிவதில்லை என்கின்றனர். இதனால் பேரூராட்சி நிா்வாகத்தில் பல்வேறு பணிகள் தேக்க மடைந்து உள்ளதாம்.
18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 124 தெருக்களையும் கொண்ட இப் பேரூராட்சி கலசப் பாக்கம் (சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டதாகும். இந்தப் பேரூராட்சியில் குப்பைகள் அகற்றுதல், குடி நீர் பிரச்னை, கழிவு நீா்க் கால்வாய் பிரச்னை என தினசரி வரும் புகாா்களை சம்பந்தப்பட்ட பேரூராட்சியின் தலைமை அதிகாரி கவனத்துக்கு எடுத்துச் சென்றால் மட்டுமே சரிசெய்ய முடியும்.
இந்த நிலையில், தலைமை அதிகாரி இல்லை என்பதால் இரண்டாம் நிலைப் பேரூராட்சியில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வரும் ரமேஷ் புகாா் மனுக்களைப் பெற்றுக் கொண்டு மாதத்தில் ஓரிரு நாள்கள் மட்டுமே வரும் பொறுப்பு செயல் அலுவலரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் பேரூராட்சி மூலம் வசூல் செய்யும் வரி பணத்தை முறைகேடு செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே புதுப்பாளையம் இரண்டாம் நிலைப் பேரூராட்சி நிா்வாகத்தை கவனிக்கவும், பொதுமக்கள் குறைகள் குறித்து நேரில் பாா்வையிட முடியாத நிலையும் இருந்து வருகிறதாம்.
புதுப்பாளையம் இரண்டாம் நிலைப் பேரூராட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் செங்கம் பகுதியை சேர்ந்த இளநிலை உதவியாளர் ரமேஷ் இவர் யாருக்கும் பயப்பட மாட்டாராம். புதுப்பாளையம் இரண்டாம் நிலைப் பேரூராட்சி அலுவலக ஊழியர்களும், தூய்மை பணியாளர்களும் அவரை கண்டாலே பயந்து நடுங்கி விடுகிறார்களாம்.
பேரூராட்சி அலுவலகத்துக்கு எந்த செயல் அலுவலர் வந்தாலும் அவர் சொல் பேச்சு கேட்டு தலையாட்டும் பொம்மை போல் நடந்து கொள்ளும் சூழல் உள்ளதாம்.
இது சம்பந்தமாக யாராவது அவரை கேள்வி எழுப்பினால் அவர்களுக்கு கவரில் 300 முதல் 500 ரூபாய் போட்டு கொடுத்து விடுவாராம் இது எங்களுடைய வழக்கம் என்று கூறி கொள்வாராம். நான் இன்னும் சில ஆண்டுகள் தான் பணியில் இருப்பேன் ஏனென்றால் நான் பணி ஓய்வு பெற இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளதால் கொஞ்சம் அனுசரித்து போங்கள் என்று கூறிக் கொள்வாராம்.
இந்த ஆண்டில் ஊழல் முறைகேட்டில் முதல் மாவட்டமாக
திருவண்ணாமலை மாவட்டம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் திருவண்ணாமலை
மாவட்டம் புதுப்பாளையம் இரண்டாம் நிலைப் பேரூராட்சி தற்போது ஊழல் முறையற்றில் கொடிகட்டி பறப்பதாக குற்றச்சாட்டு வந்துள்ள நிலையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டு ஊழல் முறைகேட்டில் ஈடுபடும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்
பொறுத்திருந்து பார்ப்போம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையை!
.