Uncategorized

பொதுமக்களின் கோரிக்கையை தனியார் பேருந்துகளின்  உரிமையாளர்கள் ஏற்றுக் கொண்டதால் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரை திரும்பப் பெற்றதாக தகவல்!

பொதுமக்களின் கோரிக்கையை தனியார் பேருந்துகளின்  உரிமையாளர்கள் ஏற்றுக் கொண்டதால் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரை திரும்பப்பெற்ற சமூக ஆர்வலர்கள்!

தனியார் பேருந்து உரிமையாளரிடம் நடந்த பேச்சு வார்த்தையில் பொதுமக்களின் கோரிக்கை  ஏற்ற நிலையில்
அனைத்து தனியார் பேருந்துகளும் பகல் மற்றும் இரவு நேரங்களில் வாடிப்பட்டி பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் என்று உறுதியளித்த தனியார் பேருந்து நிர்வாகம்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேருந்து நிலையத்திற்கு ஒரு சில தனியார் மற்றும் அரசு பேருந்துகள் வருவதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர் .

இந்த நிலையில்
வாடிப்பட்டி
வட்டார ஆடு புலி அரசியல்
தளத்தில் இருக்கக்கூடிய
அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும்
அனைத்து பொதுமக்களின் நீண்டகால பிரச்சனைக்கு நிரந்தர   தீர்வை காண  முதல் கட்ட பேச்சுவார்த்தையில்
காவல் நிலையத்தில் புகார் கொடுத்து   அதில் பொதுமக்கள் கோரிக்கையை தனியார் பேருந்துகள் வாடிப்பட்டி பேருந்து நிலையம் வந்து செல்ல வேண்டும்.
மற்றும் இரவு நேரங்களில்
பகல் நேரங்களில் வாடிப்பட்டி பேருந்து நிலையத்திற்கு வந்து பயணிகளை இறக்கிவிட்டு செல்ல  வேண்டும்.
பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளிடம் பேருந்து நடத்தினார்கள் ஓட்டுநர்கள் தகாத வார்த்தைகளில் ஏளனமாக பேசக்கூடாது என்று ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இனி வருங்காலங்களில்
அனைத்து அரசு பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் வாடிப்பட்டி உள்ளே வந்து நின்று செல்ல வேண்டும் என்பதை வாடிப்பட்டி காவல் நிலைய காவல் ஆய்வாளர் இடம் புகார் கொடுத்துள்ளனர். இது சம்பந்தமாக அரசு மற்றும் தனியார் பேருந்து  அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்துச் செல்வோம் என்று காவல் நிலைய காவல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

வாடிப்பட்டி வட்டார   பொதுமக்கள் பாதுகாப்பு குழு சமூக ஆர்வலர்கள் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் அடுத்த கட்டமாக சனிக்கிழமை மாலை 6 மணிக்கு
மீண்டும் ஆலோசனை கூட்டம் நடத்த இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.


வரும் வெள்ளிக்கிழமை தனியார் பேருந்துகள் உரிமையாளர்கள் நலச்சங்கம்  நிர்வாகிகளை நேரில் சந்தித்து 
தனியார் பேருந்துகளும்  வாடிப்பட்டி பொதுமக்களின் கோரிக்கையை  ஏற்றுக்கொண்டு
பயணிகளை வாடிப்பட்டி பேருந்து நிலையத்தில் வந்து இறக்கிவிட வேண்டும்
என்பதை எழுத்து மூலமாக கொடுக்க பட்டது.
பொதுமக்களின் கோரிக்கையை தனியார் பேருந்து  நிறுவனத்தை சேர்ந்த பொறுப்பாளர்கள் ஏற்றுக் கொண்டதால்
வாடிப்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மீது எந்த ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று  பொதுமக்கள் சார்பாக எழுத்து மூலமாக எழுதிக் கொடுத்துள்ளனர்.

அனைத்து அரசு போக்குவரத்து பேருந்துகள்  
இரவு நேரங்களில்  வாடிப்பட்டி பேருந்து நிலையத்திற்கு  வந்து செல்ல வேண்டும் என்ற பொதுமக்களின்  நீண்ட நாள் கோரிக்கையை திங்கள் கிழமை மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்தித்து கொடுக்க உள்ளனர்.

நமது கோரிக்கையை தனியார் நிறுவனம் சேர்ந்த பொறுப்பாளர்கள் ஏற்றுக் கொண்டதால்

வாடிப்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மீது எந்த ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று நாமும் எழுத்து மூலமாக கொடுத்துள்ளார்கள்
இந்த பிரச்சனைக்கு முதல் முற்றுப்புள்ளி வைத்து உள்ளதாதாக கூறப் படுகிறது.

வாடிப்பட்டி காவல்நிலையத்தில் மாலை 5.30 மணிக்கு பொதுமக்கள் பயணம் செய்வதில்  தனியார் பேருந்தின் சேவைக்
குறைபாடுகள் பற்றி நடைபெற்ற விசாரனையில்  வாடிப்பட்டி பொதுநலனில் அக்கரை கொண்டு. கலந்துகொண்ட பாதிக்கப்பட்ட பயணிகள், பொதுமக்கள், வர்த்தகர்கள், வழக்கறிஞர்கள், பல்வேறு சிறு, குறு தொழில்முனைவோர் மற்றும் மக்களுக்காக குரல் கொடுக்கும் சமூக ஆர்வலர்கள், சமுதாய அமைப்புகள், மறத்தமிழர் சேனை,
இந்து முன்னணி,  த.மா.கா, தே.மு.தி.க மற்றும் வி.சி.க பிரதிநிதிகள். மக்கள் நலனுக்காக   ஒன்று கூடினர்.
  
விரைவில் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் வாடிப்பட்டிக்குள் குறிப்பாக இரவு நேர சேவையை சிரமமின்றி பெற ஏற்பாடுகள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்  அவர்களின் முயற்சியால் கைகூடும் என்று நம்புகிறார்கள் இல்லையெனில் மீண்டும் பொதுமக்கள்  போராட்டம் நடைபெறும். என வலியுறுத்தப்பட்டுள்ளது.
நன்றிஎன்றும் உங்களில் ஒருவன் முஆதிமுத்துக்குமார் மாநில துணை பொதுச்செயலாளர்  (M.T.S)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button