பொள்ளாச்சி கேரளா சோதனைச்சாவடியில் அமோக மாமூல் வசூல்!

தற்போது கோவை மாவட்டம் பொள்ளாச்சி
வடக்குபாளையம்
காவல் நிலையம்
நடுப்பூனி சோதனைச் சாவடி மற்றும்
ஆனைமலை காவல் நிலையம் மீனாட்சிபுரம் ரயில்வே கேட் சோதனைச் சாவடி வழியாக கேரள எல்லைக்குள் அளவிற்கு அதிகமான 50 டன் முதல் 60 டன் வரை மண், கல், எம் சான்ட் டாரஸ் லாரிகளில் எடுத்துச் செல்வதாக தகவல் வந்துள்ளது.


இப்படி சட்டவிரோதமாக இரவு 8.00 மணிக்குமேல் அளவுக்கு அதிகமான லாரியில் எம்சான்ட், ஜல்லி எடுத்துச் செல்வதற்கு VP அன் கோ என்ற தனியார் நிறுவனத்தின் ரசீதை வைத்து வஞ்சி என்ற வஞ்சிக்குமார் மணல் மாபியா அடியாட்களை வைத்து டாரஸ் லாரிகளை சட்டவிரோதமாக நடுபுநி மற்றும் மீனாட்சிபுரம் ரயில்வே சோதனைச்சாவடி வழியாக கேரள எல்லைக்குள் செல்ல அனுமதித்து வருவதாக தகவல் வந்துள்ளது.
ஒரு லாரிக்கு ஒரு ரசீதுகொடுப்பதன் மூலம் 2000 முதல் 2500 வரை VP அன்கோ மாமூல் வாங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இப்படி சுமார் இந்த வழி செல்லும் 500 முதல் 1000 லாரிகளிடம் ஒரு நாளைக்கு ஐந்து கோடி வரை மாமூல் வாங்குவதாக தகவல் வந்துள்ளது.
இதுபோன்று கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் அதிமுகவின் முக்கிய புள்ளியான பொள்ளாச்சி ஜெயராமன் பெயரை பயன்படுத்தி சட்டத்துக்குப் புறம்பான இந்த செயல்களை செய்துவருவதாக தகவல் வந்துள்ளது.
இப்படி அரசு விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக மண் மற்றும் ஜல்லி மணல் ஆகியவற்றை கேரளாவுக்கு கடத்தும் மாபியா கும்பல் மற்றும் அளவுக்கு அதிகமாக எடுத்துச் செல்லும் லாரிகள் மற்றும் லாரி உரிமையாளர் மீதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அவர்கள் சட்டவிரோதமாக அனுமதிக்கும் சோதனைச்சாவடியில் உள்ள அதிகாரிகளை நேரடி விசாரணை செய்து உடனே நடவடிக்கை சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.