மாவட்டச் செய்திகள்

போடி தனியார் சொகுசு நட்சத்திர விடுதியில் நடந்தது என்ன!? உண்மையை கண்டறிய தேனி மாவட்ட ஆட்சியர் & காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பார்களா!?

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரிலிருந்து மூணாறு செல்லும் தேசிய  நெடுஞ்சாலையில்  உள்ள தனியார் சொகுசு உணவு விடுதி நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் கதவை அடைத்து விட்டு, தகாத வார்த்தைகளால் திட்டி தன்னை தாக்கியதாக துணை வட்டாட்சியர் குமரவேல் எ தேனி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

மண்டல துணை வட்டாட்சியர் தேனி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய புகார்


24/04/2023 அன்று மதியம் மூணாறு செல்லும் வழியில்  போடி நாயக்கனூர் குரங்கணி மெயின் ரோட்டில் உள்ள கிரீன் ராயல் சொகுசு விடுதியில் உள்ள உணவகத்திற்கு சென்ற  துணை ஆட்சியர் (பயிற்சி )மற்றும் மண்டல துணை வட்டாட்சியர் குமரவேல் சாப்பிட்டுவிட்டு அதற்கான பணத்தையும் கொடுத்துவிட்டு கிளம்பிய போது வட்டாட்சியர் துணை வட்டாட்சியர் குமரவேல் அவர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கிரீன் ராயல் சொகுசு விடுதியில் கட்டிட உறுதிச் சான்று வாங்கப்பட்டுள்ளதா என்று விடுதியில் விசாரணை செய்ய சொன்னதாகவும் அதன்படி விடுதியில் இருந்த கணக்காளரிடம் ஹோட்டலில் கட்டிட உறுதிச் சான்று காண்பிக்குமாறு கேட்டுள்ளார் அதற்கு எனக்கும் ஒன்று தெரியாது ஓட்டலில் உரிமையாளர்கள் செல்வம் மற்றும் மணிகண்டன் அவர்களுக்கு இருவரிடமும் கேட்டு தெரிந்து கொள்ளவும் என்று கூறியுள்ளதாகவும் அதன் பின்பு விடுதியில் உரிமையாளர் செல்வம் அவர்களை சந்தித்து விடுதியின் கட்டிட உறுதிச் சான்று  இருக்கிறதா வாங்கி விட்டீர்களா என்று கேட்டதாகவும் அதற்கு செல்வம் அதையெல்லாம் நீ யாரடா கேட்பதற்கு என்ற ஒருமையில் பேசியதாகவும் அதன் பின்பு துணை வட்டாட்சியின் மார்பகத்தில் கையை வைத்து தள்ளி விட்டதாகவும் அதன் பின்பு ஹோட்டல் ஊழியர்களை அழைத்து துணை வட்டாட்சியர் கைகளை கட்ட சொன்னதாகவும் அது மட்டும் இல்லாமல் விடுதியில் கேட்டை அடக்கச் சொல்லி என்னை வெளியே விடாமல் கட்டிப் போடச் சொன்னதாகவும்  அரசு பணி செய்ய விடாமல் மிரட்டிய விடுதி உரிமையாளர் செல்வம்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அது மட்டுமில்லாமல் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் துணை வட்டாட்சியர் குமரவேல் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளார்.

போடிநாயக்கனூர் வட்டாட்சியர் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்பிய புகார்


அதனை அடுத்து போடிநாயக்கனூர் வட்டாட்சியர் அழகுமணி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார் .அதில்  துணை வட்டாட்சியர் குமரவேல் அரசு பணியினை மேற்கொண்ட போது அரசு பணியை செய்ய விடாமல் தடுத்ததுடன்  அரசு அலுவலர்களை தாக்கி அவதூறாக பேசியதாகவும் அது மட்டும் இல்லாமல்  அரசு பணியாளர்கள் என்று தெரிந்தும் அவர்களை அலுவலகத்துக்கே வந்து  தகராறு செய்வோம் என்று கூறிய ஹோட்டல் உரிமையாளர் செல்வம் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு புகாரில் தெரிவித்துள்ளார். ஆனால் 40 நாட்கள் ஆகிய நிலையில் இருந் ராயல் ஹோட்டல் உரிமையாளர் செல்வம் மீது எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என்று

கிரீன் ராயல் நட்சத்திர விடுதி முன்பு சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட போடிநாயக்கனூர் நகர மன்ற உறுப்பினர்கள்

போடிநாயக்கனூரில் இருந்து மூணாறு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில்  நட்சத்திர விடுதி முன்பு  போடி நகர்மன்ற உறுப்பினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வந்துள்ளனர். உடனே அங்கு விரைந்து வந்த சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அழைத்து பேசி ஹோட்டல் உரிமையாளர் மீது
உரிய நடவடிக்கை எடுப்பதாக  கூறியதைத் தொடர்ந்து, சாலை மறியல் செய்தவர்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.
நடைபெற்ற தாக்குதல் சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. அது மட்டும் இல்லாமல் ஹோட்டல் உரிமையாளர் செல்வம் மீது குரங்கணி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது .(வழக்கு குற்ற எண் 26/2023 )
ஆனால் துணை வட்டாட்சியர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பற்றி விசாரித்ததில் இரு வேறு கருத்துக்கள் கூறுகின்றனர். ஆனால் எது உண்மை என்று தெரியவில்லை. ஒரு சில ஹோட்டல் உரிமையாளர் மீது தவறு என்றும் ஒரு சிலர் துணை வட்டாட்சியர் மீது தவறு என்றும் இருவேறு கருத்துக்கள் வந்துள்ள நிலையில்

இது சம்பந்தமாக உண்மை தன்மை என்ன என்று கண்டுபிடிக்க தேனி மாவட்ட ஆட்சியர்  நேர்மையான காவல் அதிகாரிகள் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

ஏனென்றால் மாவட்ட நிர்வாகத்தில் முக்கியமான துறை வருவாய்த்துறை அதுவும் வருவாய்த் துறையில் வட்டாட்சியர் பொறுப்பில் இருப்பவர்கள் இரண்டாம் நிலை மாஜிஸ்திரேட்
(Mājistirēṭ ) ஆவார்கள். அது மட்டும் இல்லாமல் துணை வட்டாட்சியர் உடன் பயிற்சி துணை ஆட்சியர் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அப்படி இருக்கும் போது இப்படி ஒரு சம்பவம் உண்மையாக நடந்திருக்கும் பட்சத்தில் ஏன் 40 நாட்களாக காவல் நிலையத்தில் ஓட்டல் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது!? ஏனென்றால் வழக்கு பதிவு செய்ய சரியான ஆதாரங்கள் காவல்துறைக்கு கிடைக்கவில்லையா!? அப்படி ஆதாரங்கள் கிடைக்கும் வழக்கு பதிவு செய்ய தடுத்தது யார் என்ற கேள்விகள் பொது மக்களிடம் எழுந்துள்ளது!?

மறுபுறம் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய சாலையில் தர்ணா போராட்டம் நடத்தும் அளவிற்கு தேனி மாவட்ட நிர்வாகத்தில் வருவாய் துறை அதிகாரிகளுக்கு ஆதரவாக ஏன் ஒத்துழைப்பு தரவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கு இடையில் கிரீன் ராயல் சொகுசு விடுதி உரிமையாளர் செல்வம் அனைத்து கட்சி நிர்வாகிகளுக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார் அதில் தேவையில்லாமல் எங்கள் விடுதிக்கு முன்பு சட்ட விரோதமாக சாலை மறியல் செய்ததும் இல்லாமல் எங்கள் விடுதிக்குள் அத்துமீறி நுழைய முயற்சித்து வருவதாகவும் போடி நகராட்சி கவுன்சிலர் ராஜசேகர் அடையாளம் தெரியாத 10 நபர்களுடன் வந்து பணம் பறிக்கும் நோக்கத்திலும் ஹோட்டலுக்கு கெட்ட பெயர் உண்டாக்கும் நோக்கத்திலும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் அது மட்டும் இல்லாமல் துணை வட்டாட்சியர் சாப்பிட்டு ஊழியர்களிடம் தகராறு செய்த சிசிடிவி காட்சிகளும் இருக்கின்றது. ஆகவே போடிநாயக்கனூர் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு தரும்படி அந்த கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

கிரீன் ராயல் சொகுசு விடுதியின் உரிமையாளர் செல்வம் அனைத்து கட்சி நிர்வாகிகளுக்கு அனுப்பிய கடிதம்

தற்போது வட்டாட்சியருக்கு சாதகமாக போடிநாயக்கனூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் கிரீன் ராயல் விடுதி முன்பு சாலையில் உட்கார்ந்து போராட்டம் நடத்தியது   சாதிக் கலவரத்தை தூண்டும் விதமாக இருப்பதாக முன்னாள் போடிநாயக்கனூர் நகராட்சி முன்னாள் தலைவர் போடி வட்டாட்சியர் அவர்களை நேரில் சந்தித்து மண்டல துணை வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு கொடுத்துள்ளது மேலும் இந்த பிரச்சனையில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது

துணை வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க போடிநாயக்கனூர் முன்னாள் பேரூராட்சி தலைவர் அதிமுக

.https://youtu.be/IDjH9aOxFJ0

ஒரு சில இடங்களுக்கு அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளும் போது அதிகாரிகளுக்கும் உரிமையாளர்களுக்கும் வாக்குவாதம் மோதல் ஏற்படுவது சகஜம். ஆனால் கிரீன் ராயல் நட்சத்திர விடுதி உரிமையாளர் துணை வட்டாட்சியரை தாக்கும் அளவிற்கு  யார் முதலில் தகாத வார்த்தைகள் பேசியது என்ற கேள்வி எழுந்துள்ளது! சாதாரண பொதுமக்கள் உணவு சாப்பிடும் போது நடக்கும் வாக்குவாதத்தில் மோதல்கள் ஏற்படுவது வழக்கம். அப்படி மோதல் நடப்பதையே உடனடியாக காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து யார் மீது தவறு இருக்கிறது என்பதை கண்டுபிடித்து உடனே அவர்கள் மீது வழக்கு பதிவு செய்வார்கள். ஆனால் மண்டல துணை வட்டாட்சியர் மீது தாக்குதல் நடத்தியதாக வந்துள்ள புகார் மீது வழக்கு பதிவு செய்யாமல் கால தாமதம் ஏற்படுத்தி வந்ததால் காவல்துறையினர் மீது உள்ள நம்பிக்கை சாதாரண பொது மக்களுக்கு  இல்லாமல் போய்விடும் என்பதுதான் நிதர்சனம்.
ஆகவே உண்மையை மறைக்காமல் நேர்மையான காவல்துறை அதிகாரிகள் விசாரணை செய்து  யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து இந்த மோதல் போக்கிற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button