காவல் செய்திகள்

போலி ஆதார் அட்டையை பயன்படுத்தி திருப்பூரில் 100 க்கும் மேற்பட்டோர் பதுங்கி இருப்பதாக அதிர்ச்சி தகவல்!தேடுதல் வேட்டையில் திருப்பூர் மாநகர காவல் துறை!

திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ‘பனியன் தயாரிக்கும் நிறுவனங்களில் ஆட்கள் பற்றாக்குறை நிலவுவதால், அனுபவம் உள்ள வங்கதேச மக்கள் எந்தவித ஆவணங்கள் இன்றி திருப்பூர் மாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வாடகை வீடு எடுத்து பதுங்கி வாழ்ந்து வருவதாகவும் .வங்க தேசத்தினர் ஊடுருவும் வகையில்,5000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை இடைத்தரவர்களிடம் கொடுத்து போலி ஆதார் அட்டைகளை பெற்றுள்ளார்கள் என அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது!வங்கதேசத்தில் கடந்த சில மாதங்களாக அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இதனால் அங்குள்ள இளைஞர்கள் வேலைதேடி .

மேற்கு வங்கம் மாநிலம், ‘பர்கானாஸ் 24’ மாவட்டம் வழியே இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ள வங்கதேசத்தினர், எவ்வித ஆவணங்களும் இல்லாமல் அதுவும் குறிப்பாக தமிழகத்திற்குள் திருப்பூர் நகரத்திற்குள் நுழைந்து இருப்பதாக
மத்திய அரசிடம் இருந்து திருப்பூர் மாநகர காவல் துறைக்கு எச்சரிக்கை வந்த நிலையில் திருப்பூர் தெற்கு போலீசார் மற்றும் அதிவிரைவு படையினர் (24.09.2024) திருப்பூர் மத்திய பஸ் நிலையம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்குச் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த 6 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அவர்களிடம் உள்ள ஆவணங்களை போலீசார் பரிசோதனை செய்தனர். அதில் ஆறு பேரிடம் இருந்த ஆவணங்கள் அடிப்படையில் அவர்கள் வங்கதேசத்தினர் என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து 6 பேரும் கைது செய்யப்பட்டனர். அதே சமயம் அவர்களிடம் போலியான ஆதார் அட்டையும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் உரிய ஆவணங்களின்றி வேலைக்கு வந்தவர்கள் தன்வீர், முகமது அஸ்லம், முகமது அல் இஸ்லாம், ரசீப் தவுன், முகமது, சவுமுன் சேக் என்பது தெரியவந்தது. தொடர்ந்து இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு வங்கதேசத்தில் இருந்து பணியன் நிறுவனத்தில் பணிபுரிவதற்காகத் திருப்பூர் வந்துள்ளனர். அங்குள்ள ஆலை ஒன்றில் பணிபுரிய அடையாள அட்டை பரிசோதனை செய்யப்பட்டபோது வங்கத்தேசத்தினர் என்பதால் சம்பந்தப்பட்ட நிறுவனம் பணி வழங்க மறுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து பல்லடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியத் திருப்பூர் பேருந்து நிலையத்திற்கு வந்தபோது 6 பேரும் போலீசாரிடம் சிக்கியது குறிப்பிடத்தக்கது. இதனால் திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இயங்கி வரும் தொழிற்சாலைகளுக்கு சில கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. முன் அனுபவம் இல்லாத வங்கதேசத்தினர், குறிப்பாக சாய ஆலைகளை தேர்வு செய்து பணியில் சேர்வதாக தகவல் கிடைத்துள்ளது. ‘ அதில் முன்பின் அறிமுகம் இல்லாத வெளிமாநில மக்களை பணிக்கு சேர்க்கும் போது சொந்த மாநிலத்தில் உள்ள பிற ஆவணங்களை கேட்டு வாங்கி, சரிபார்த்த பிறகே பணிக்கு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்றுமதி நிறுவனங்கள் மட்டுமல்ல, அனைத்து பனியன் தொழில் பிரிவினரும் கவனமாக இருக்க வேண்டும். பணிக்கு அமர்த்தப்படுபவர்களின் முழு விவரங்கள் அடங்கிய ஆவணங்களை ஆய்வு செய்து பணியில் அமர்த்த வேண்டும்.அதே போல் சந்தேகத்துக்கு இடமான நபர்கள் வீடு வாடகைக்கு கேட்டு வந்தால் வீட்டு உரிமையாளர்கள் விசாரித்து கொடுக்க வேண்டும். சந்தேகம் வந்தால் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கும்படி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மேற்கு வங்கத்தில் இருந்து வருவோரை பணிக்கு எடுக்கும் போது, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆவணங்களை சரிபார்த்து எடுக்க வேண்டும்.வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக குடியேறி வந்தவர்களை பணிக்கு வைத்தால், சட்டச் சிக்கல் ஏற்பட்டு, வீண் பிரச்னைகளை சந்திக்க நேரிடும். எனவே, மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என காவல்துறை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமில்லாமல் திருப்பூரில்
பதுங்கி இருக்கும் வங்கதேச இளைஞர்களை தினமும் திருப்பூர் காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். திருப்பூர் காவல்துறையினர் தேடுதல் வேட்டையை வேகப் படுத்தியுள்ளனர். போலி ஆதார் அத்தைகளை வங்கதேசம் இளைஞர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். இது சம்பந்தமாக திருப்பூர் மாநகரில் இ-சேவை மையம் நடத்தி வரும் ஊழியர்கள் அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளனர் . “ஆதார் அட்டை பெறுவது தொடர்பாக, இணையத்தில் பல்வேறு விஷயங்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. அவ்வளவு எளிதாக யாரும் ஆதார் அட்டை பெற முடியாது. வாக்காளர் அடையாள அட்டை, வங்கிக் கணக்கு மற்றும் இருப்பிடச் சான்று ஆகியவற்றைக் கொண்டு ஆதார் அட்டை வழங்கப்படுகிறது. வாக்காளர் அடையாளர் அட்டை ஆவணத்தை மட்டும் சரிபார்த்துக் கொள்ளலாம். மற்ற ஆவணங்களை சரிபார்க்க வாய்ப்பில்லை. உரிய ஆவணங்களின்றி தமிழ்நாட்டில் உள்ள திருப்பூர் நகரத்திற்குள் வங்கதேசத்தினர் ஊடுருவும் வகையில், கடந்த 4 ஆண்டுகளில் போலியாக 100 ஆதார் அட்டைகளை தயாரித்து கொடுத்த இடைத்தரகர் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளார் திருப்பூரைச் சேர்ந்த இடைத்தரகர் மாரிமுத்து (43) என்பவர், போலி ஆதார் அட்டை தயாரித்து கொடுத்தது தொடர்பாக கைது செய்யப்பட்டார். இவர், பல ஆண்டுகளாக, எந்தஆவணங்களுமின்றி ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளைப் பெற்றுத்தந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக திருப்பூர் மாநகர போலீஸார் கூறும்போது, “திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்துக்கு தினமும் வந்து செல்லும் மாரிமுத்து, பலருக்கும் மனு எழுதிக் கொடுத்துள்ளார். தொடர்ந்து, அதிகாரிகளுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு, திருப்பூர் வருபவர்களுக்கு எந்த ஆவணங்களுமின்றி ஆதார் அட்டைகளை தயார் செய்து அளித்துள்ளார். இதற்காக ரூ.3 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை பெற்றுள்ளார். ஆதாருக்குத் தேவையான இருப்பிடச் சான்றை இணைப்பதற்காக, பல்லடத்தில் உள்ள அரசுமருத்துவர் ஒருவரின் கடிதத்தைஇணைத்துக்கொடுத்துள்ளார். வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஆதார் பெற்றுத்தர அதிக தொகை வசூலித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகளை மாரிமுத்து பெற்றுத் தந்துள்ளார். இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். மேலும், திருப்பூர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாரிமுத்துவை காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளோம்” என்றனர். ஆதார் மைய ஊழியர்கள் தொகுப்பூதியப் பணியாளர்கள். அவர்கள் நிரந்தரமாக ஒரே இடத்தில் பணிபுரிவதால், தரகர்களுடன் இணைந்து செயல்பட முடியும். இவர்களை ஆண்டுக்கு ஒருமுறையாவது வேறு இடங்களுக்கு மாற்றினால் மட்டுமே, முறைகேடுகளைத் தடுக்க முடியும். மாரிமுத்து விவகாரத்தில், வேறு பலரும் இருக்கக்கூடும். இருப்பிடச் சான்று வழங்கிய அரசு மருத்துவர் உள்ளிட்டோரிடமும் விசாரித்தால் உண்மை தெரியவரும்” என்றனர். “போலி ஆவணங்கள் மூலம் ஆதார் அட்டைகளைப் பெற்றுள்ளனர். மாரிமுத்து யாருக்கெல்லாம் ஆதார் அட்டை வாங்கித் தந்துள்ளார் என்பது தொடர்பாக விசாரித்து வருகிறோம். ஆதாருக்கு இருப்பிடச் சான்று அளித்த அரசு மருத்துவரையும் விசாரித்து வருவதாக திருப்பூர் மாநகர காவல் ஆணையர் லட்சுமி தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button