போலி ஆவணங்களை கொடுத்து தேர்தலில் நின்று வெற்றி பெற்ற (சீர்காழி )வாணகிரி ஊராட்சி மன்றத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்காத மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியாளர் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா!?
மாவட்ட தேர்தல் அலுவலர், அரசு கூடுதல் முதன்மை ச மாநில தேர்தல் ஆணையத்திடம். நடராஜன் என்பவர் வானகிரி ஊராட்சி மன்றத் தலைவராக கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றார். பிச்சைமுத்து என்ற பெயரை நடராஜன் என போலி ஆவணங்கள் கொண்டு பெயர் மாற்றம் செய்ததாக புகார்.
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் 2019 டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதிகளில் இரு கட்டங்களாக கிராமப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர், பழனிச்சாமி ஆணையம் வெளியிடடார்.
அதன்படி 6ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும் முதற்கட்ட வாக்குப்பதிவு வருகிற 27ம் தேதியும், 2ம் கட்ட வாக்குப்பதிவு 30ம் தேதியும் நடைபெறும் என்றுதமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு
அறிவித்தார்.
நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து பிற மாவட்டங்களில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் தேர்தல் நடக்கும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது.
வேட்புமனு தாக்கல் டிசம்பர் 9ம் தேதி நடந்தது
வேட்புமனு பரிசீலனை டிசம்பர், 17ம் தேதி நடைபெற்றது.
வேட்புமனு திரும்பப் பெற்ற நாள் டிசம்பர் 19ம் தேதி .
முதல்கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 27ம் தேதி நடைபெற்றது.
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 30ம் தேதி நடைபெற்றது..
மாவட்ட ஒன்றிய குழு துணை தலைவர்கள் மற்றும் துணை தலைவர்கள், ஊராட்சி மன்ற துணைத் தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் 2020, ஜனவரி 11ம் தேதி நடைபெற்றது.கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் சுயேட்சயாக போட்டியிட்டனர். அதன் பின்பு வெற்றி பெற்ற அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களும் அந்தந்த ஊராட்சி மன்றங்களில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
சீர்காழி வாண்கிரி ஊராட்சி மன்றத் தேர்தலில் ஐந்து பேர் போட்டியிட்டனர்.
சீனிவாசனின் தகப்பனார் பெயர் மாரிமுத்து, செல்லத்துரை தகப்பனார் பெயர் உத்திராபதி, விஜயராஜ் தகப்பனார் பெயர் செல்வராஜ்., நடராஜன் தகப்பனார் பெயர் காசி நாதன், மூர்த்தி தகப்பனார் பெயர் மணி.
இதில் நடராஜன் தகப்பனார் பெயர் காசிநாதன் வேட்பாளர் வெற்றி பெற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
15/07/2020 அன்று (சத்தியசீலன் வானகிரி அஞ்சல் சீர்காழி நாகப்பட்டினம் மாவட்டம்) மாநில தேர்தல் ஆணையர் அலுவலகத்திற்கு புகார் மனு ஒன்றை அனுப்பி இருந்தார்.
சீர்காழி அருகே பெயரை மறைத்து உள்ளாட்சி தேர்தலில் வெற்றி: தேர்தல் அலுவலர் விசாரணை நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு..!!மாவட்ட தேர்தல் அலுவலர், அரசு கூடுதல் முதன்மை செயலருக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது
அதில் நாகபட்டினம் மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வானகிரி ஊராட்சி மன்ற தலைவர் பிச்சைமுத்து என்ற நடராஜன் வேட்பு மனு தாக்கல் செய்ததில் பெயர் வாக்காளர் விவரங்கள் உறுதிமொழி ஆவணங்கள் ஜாதி சான்றிதழில் பெயர் மாற்றம் மற்றும் போலி படிப்பு சான்றிதழ் மற்றும் பூம்புகார் தொகுதிக்குட்பட்ட no.51 வாணகிரி சுனாமி தற்காலிக குடியிருப்பு நான்காவது வார்டு மற்றும் மோ.51 கீழ வாணகிரி, வாண கிரி சீர்காழி என்ற இரண்டு முகவரியில் இரண்டு வாக்காளர் அட்டை இரண்டு குடும்ப அட்டை குடும்ப அட்டை வைத்து கொண்டு வேட்புமனுத் தாக்கல் செய்து தேர்தலில் நின்று வெற்றி பெற்றார் என்றும்
இரண்டு வாக்குச்சாவடிகளில் பிச்சமுத்து நடராஜன் என்ற இரண்டு பெயர்களில்வாக்களித்துள்ளார் என்றும் போலி ஆவணங்களை வைத்து வேட்புமனு தாக்கல் செய்து தேர்தலில் நின்று முறை கேடாக வெற்றி பெற்ற பிச்சமுத்து என்ற நடராஜன் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க வேண்டி மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி அவர்களுக்கு புகார் கொடுத்திருந்தார்.
இது சம்பந்தமாக 17/09/ 2019 அன்று மாநில தேர்தல் ஆணையர் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியாளர் பிரவீன் நாயர் IAS ( வளர்ச்சிப் பிரிவு )நாகப்பட்டினம் மாவட்டம் அவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுத்து நடவடிக்கையின் விவரத்தை விசாரணை செய்து மனுதாரருக்கு தெரிவிக்கும் படி உத்தரவிட்டு இருந்தார். இது சமாந்தாக வட்டார வளர்ச்சி அலுவலர் கஜேந்திரன். தேர்தல் நடத்தும் அலுவலர் ரெஜினா ராணி (வட்டார வளர்ச்சி அலுவலர்), உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரேமாவதி. (துணை வட்டார வளர்ச்சி அலுவலர்) இவர்கள் விசாரணை செய்து அறிக்கையை அளித்துள்ளனர்.மூன்று மாதங்கள் கழித்து இது சம்மந்தமாக விசாரனை குழு கொடுத்த விவரங்களை 19/10/2020 அன்று தமிழ்நாடு தேர்தல் ஆணையத்துக்கு நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியாளர் பிரவீன் நாயர் அனுப்பி வைத்துள்ளார். Oo
ஆனால் இந்த அறிக்கையில் அனைவருமே ஒரே பதிலை தான் சொல்லியுள்ளார்கள் .நடராஜன் வேட்புமனு தாக்கல் செய்த அன்று அவருடன் வேட்புமனு தாக்கல் செய்த 4 பேரும் எந்த ஒரு வாய்மொழி ஆட்சேபனையும் செய்யவில்லை என்று பதிலளித்துள்ளனர். ஆனால் அவர்கள் அளித்த பதிலில் உண்மைத்தன்மை இல்லை என்றும் வெற்றிபெற்ற பிச்சைமுத்துக்கு ஆதரவாகவே விசாரணை செய்த அனைத்து அதிகாரிகளும் ஒருவருக்கு சாதகமாகவே அறிக்கை கொடுத்துள்ளதால் இதை ஏற்க முடியாது என்று புகார்தாரர் மறுபடியும் மாநில தேர்தல் ஆணையத்துக்கு மேல்முறையீட்டு மனு புகார் கொடுத்திருந்தார்.
அதன் பின்பு நாகப்பட்டினம் மாவட்டம் இரண்டாக பிரித்து 38 வது மாவட்டமாக 28/12/2029 அன்று மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்கப் பட்டது அப்போது மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியராக லலிதா IAS 28/12/2020 அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டார். தற்போது ஒரு வருடம் கடந்தும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியாளர் லலிதா எந்தவித விசாரணையும் செய்யாமல் அறிக்கையும் தாக்கல் செய்யாமல் அந்த உத்தரவை கிடப்பில் போட்டு இருந்தார். அது சம்பந்தமாக பல முறை மாவட்ட ஆட்சியாளர் அவர்களை சமூக ஆர்வலர் சத்தியசீலன் அணுகி கேட்டதற்கு சரியான பதில் அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். அதற்கு காரணம் அப்போது அதிமுக ஆட்சியில் இருந்த முக்கிய புள்ளியிடம் பல லட்சங்கள் லஞ்சமாக கொடுத்ததாகவும் அதை பெற்றுக் கொண்ட அந்த அதிமுக முக்கிய புள்ளி மாவட்ட ஆட்சியாளரிடம் வானகிரி ஊராட்சி மன்ற தலைவர் பிச்சமுத்து நடராஜன் விசாரணை சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கூறியதாகவும் அதனால் மாவட்ட ஆட்சியாளர் விசாரணை செய்ய உத்தரவிட வில்லை என்றும் தகவல் வந்துள்ளது. அதிமுக ஆட்சியில் தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டு அந்த நேரத்தில் ஊராட்சி மன்றத்தில் அதிமுக கட்சியில் இருந்ததால் அவருக்கு சாதகமாகவே அனைத்து அறிக்கையும் தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. அதன் பின்பு மேமாதம் 2021 திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்றுக்கொண்டு புதிதாக தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரியை நியமித்து ஒரு வருடமாகியும் இதுவரை தேர்தல் அதிகாரியிடம் கொடுத்த புகார் சம்பந்தமாக மாவட்ட ஆட்சியாளர் எந்தவித விசாரணையும் செய்யாமல் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வேதனையாக உள்ளது. ஏனென்றால் முறைகேடாக போலி ஆவணங்களை சமர்ப்பித்து ஊராட்சி மன்றத் தலைவரான பிச்சமுத்து என்ற நடராஜன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள பச்சோந்தி போல் எந்த ஆட்சி வருகிறதோ அந்த கட்சியில் சேர்ந்து விடுவாராம். அதேபோல 2019 20 அதிமுகவில் இருந்த பிச்சமுத்து நடராஜன் தற்போது திமுக கட்சியில் இணைந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் திமுகவில் உள்ள முக்கிய புள்ளியிடம் பல லட்சங்களை லஞ்சமாக கொடுத்துள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.
. எது எப்படியோ முறைகேடாக தவறான ஆவணங்களை சமர்ப்பித்து தேர்தலில் நின்று வெற்றி பெற்ற ஒரு நபரை காப்பாற்ற தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் மற்றும் தேர்தல் அதிகாரியாக செயல்பட்ட அதிகாரிகள் அனைவரும் நீதிமன்றம் முன்பு ஒருநாள் நிற்க வேண்டிய நிலை ஏற்படும். ஆகையால் தற்போது தேர்தல் ஆணையராக இருக்கும் பழனிச்சாமி மற்றும் முதல்வராக இருக்கும் ஸ்டாலின் அவர்கள் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது போல் இரண்டு வாக்காளர் அட்டை இரண்டு குடும்ப அட்டை மற்றும் ஜாதி சான்றிதழில் பெயர் மாற்றம் மற்றும் போலி படிப்பு சான்றிதழ் இவற்றையெல்லாம் வைத்துக் கொண்டு ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் பிச்சமுத்து என்றே நடராஜனை விசாரிக்க மாவட்ட ஆட்சியாளருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் என்பது தான் அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.
அப்படி இல்லை என்றால் முறைகேடு செய்தவர்கள் யாராக இருந்தாலும் திமுக கட்சியில் இணைந்து விட்டால் அது முறைகேடு செய்யவில்லை என்று அர்த்தமாக நினைக்கிறதா திமுக கட்சி தலைமை என்ற மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். தற்போது அனைத்து புகார்களையும் உடனடியாக தீர்த்து வைக்கும் தமிழக முதல்வர் எதிர்க்கட்சியாக இருந்தபோது நடந்த இந்த முறைகேட்டை உடனடியாக தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கையுடன்.. பொறுத்திருந்து பார்ப்போம்.