போலி ஆவணம் மூலம் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை பத்திரப்பதிவு செய்து மோசடி! அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கைதா!?

போலி ஆவணங்கள் மூலம் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை
பத்திர பதிவு செய்த சார் பதிவாளருக்கு கொலை மிரட்டல்!?முன்னாள் அதிமுக அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கருக்கு தொடர்பு!? முன் ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த எம் ஆர் விஜயபாஸ்கர்!?
கரூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்கள் புரோக்கர்களின் பிடியில் சிக்கி உள்ளன. இதனால் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர் நகரில் மாநகராட்சி அலுவலகம் அருகே மேல கரூர் சார்பதிவாளர் அலுவலகம் கரூர் பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் சார்பதிவாளர் -2 அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. கரூர் மாநகராட்சி மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராம பஞ்சாயத்து பகுதிகளில் இருந்து சொத்துக்கள் வாங்க விற்பனை செய்ய பத்திரப்பதிவு பணிக்காக நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள், இந்த இரண்டு அலுவலகங்களுக்கும் வந்து செல்கின்றனர். இதை பயன்படுத்தி புரோக்கர்கள் நடமாட்டம் அதிகரித்து இருப்பதாகவும் இது குறித்து திருச்சி மாவட்டம், பதிவுத்துறை துணைத் தலைவர் கரூர் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் புலம்புகின்றனர். அதேபோல் இந்த பத்திரப்பதிவு அலுவலகங்களில் போலி ஆவணங்கள் மூலம் சார்பதிவாளர்கள் அலுவலக ஊழியர்கள் மூலம் பத்திரப்பதிவு செய்து செய்து கொடுத்து வரும் நடமாடும் புரோக்கர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மேலும் கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பதிவாளர் அலுவலகங்களில் திடீர் சோதனை நடித்தி அரசு அலுவலர்கள் புரோக்கர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுகா குப்பிச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் என்பவரது மகள் சோபனா என்பவர் செட்டில்மெண்ட் மூலம் தனக்கு பாத்தியப்பட்ட சொத்தை விற்க கரூரில் உள்ள

மேலக்கரூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு
வந்துள்ளார்.
அந்த சொத்தை வாங்கிக் கொள்வதாக
ரகு சித்தார்த்தன் மாரியப்பன் செல்வராஜ் ஆகிய நான்கு பேரும் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்துள்ளனர்.
அப்போது சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு செய்ய செட்டில்மெண்ட் அசல் ஆவணம் தொலைந்து போய்விட்டதாகவும் அது தொடர்பாக சென்னை வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததாகவும் அந்த அசல் ஆவணம் கண்டுபிடிக்க முடியவில்லை என வில்லிவாக்கம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சான்றிதழ் அளித்துள்ளதாகவும் அந்த சான்றிதழை வைத்து பத்திரப்பதிவு செய்து கொடுக்கும் படி சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதர் இடம் கொடுத்து பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் மறுநாள் நிலத்தை வேறு நபருக்கு பத்திரப்பதிவு செய்த சோபனாவின் தந்தை பிரகாஷ் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி பதிவாளர் அலுவலகத்துக்கு வந்தார் . அவருடன் ரகு, சித்தார்த்தன், மாரப்பன், செல்வராஜ் ஆகிய 4 பேர் வந்திருந்தனர்.மேற்படி சொத்து வெள்ளியணை சார்பதிவக எல்லைக்குட்பட்டது என்பதாலும், சொத்தின் அசல் ஆவணம் சமர்ப்பிக்கப்படாததாலும் சட்டப்படி அந்த ஆவணப் பதிவு நிலுவையில் வைக்கப்பட்டது.
அசல் ஆவணம் கண்டுபிடிக்க முடியவில்லை என வில்லிவாக்கம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சான்றிதழ் போலியானது என்று சார் பதிவாளரிடம் புகார் கொடுத்தார். அந்த புகாரில், அசல் ஆவணம் தொலைந்துவிட்டது எனக்கூறி சென்னை வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் பெறப்பட்ட சிஎஸ்ஆர் நகலை ஆவணதாரர் சார்பாக யுவராஜ் மற்றும் பிரவீன் ஆகியோர் நேரில் என்னிடம் அளித்தனர். வெள்ளியணை சார்பதிவாளர் அலுவலகத்தில் மதிப்பறிக்கை பெற்று கடந்த மே 10-ம் தேதி மேற்படி சொத்து சட்டப்படி கிரையம் செய்யப்பட்டது என்றும் அதுமட்டுமில்லாமல் ‘எம்.ஆர்.விஜயபாஸ்கரும், அவரது தம்பி சேகரும், பிரவீன் மூலமாக என் மகளுக்கு தான செட்டில்மென்ட் எழுதி தர வைத்து, என்னை அடித்து உதைத்தனர் என்றும் நான் மருத்துவமனையில் இருந்த சமயத்தைப் பயன்படுத்தி, என் மகளையும், மனைவியையும் மிரட்டி போலி ஆவணம் மூலம் ரூ.100 கோடி மதிப்பிலான சொத்தை அவர்கள் பெயர்களில் கிரையம் செய்துகொண்டனர் என்றும் ஆனால், என் மகளுக்கு தான செட்டில்மென்ட் செய்துகொடுத்ததற்கான அசல் ஆவணம் என்னிடம் உள்ளது என்றும் போலி சான்றிதழ் கொடுத்து மோசடியாக பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பிரகாஷ் கொடுத்த அந்தப் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த புகார் சம்பந்தமாக கரூர் மாவட்ட பதிவாளருக்கு இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அவரிடம் இருந்து வரப்பெற்ற கருத்துரு தகவல் படி, வில்லிவாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் இதுபோன்ற சான்றிதழ் கொடுக்கவில்லை. எனவே பத்திரப் பதிவுக்கு கொடுக்கப்பட்ட சான்றிதழ் போலியானது உண்மை தன்மையற்றது என்பது உறுதியானது. எனவே கூட்டு சதி செய்து, சொத்தை அபகரித்து பதிவு செய்துள்ளது தெரியவந்தது

இதையடுத்து உண்மைத்தன்மை அறிய சார்பதிவாளர் சென்னை வில்லிவாக்கம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் இடம் விசாரணை செய்தார்.
அதில் வில்லிவாக்கம் காவல் நிலையத்திலிருந்து எந்த சான்றிதழும் வழங்கவில்லை என காவல் ஆய்வாளர் கூறியுள்ளார். அதன் பின்பு சார்பதிவாளர் போலி ஆவணங்கள் கொடுத்து உள்ளதை உறுதி செய்த பின் பத்திரப்பதிவு செய்த அசல் ஆவணங்களை நிலத்தை வாங்கிய யுவராஜ் பிரவீன் ஆகியோரிடம் வழங்க மறுத்துள்ளார்.
அதற்கு யுவராஜ் பிரவீன் இருவரும் இந்த நிலம்

அரசியல் அதிகாரம் மிக்கவர் களுக்கு பத்திரப்பதிவு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆகையால் பத்திரப்பதிவு செய்த அசல் ஆவணங்களை ஒப்படைக்கா விட்டால் உங்கள் வேலைக்கும் உங்கள் உயிருக்கும் பாதுகாப்பு கிடையாது என்று கொலை மிரட்டல் விடுவது போல் மிரட்டி உள்ளனர்.

உடனே கரூர் நகர் காவல் நிலையத்தில் யுவராஜ் பிரவீன் , சித்தார்த்தன், மாரப்பன், செல்வராஜ், ஷோபனா ஆகிய 7 பேர் மீது கொலை மிரட்டல் விட்டதாக சார்பதிவாளர் புகார் கொடுத்துள்ளார்.
இந்த புகாரை பெற்றுக் கொண்ட உதவி காவல் ஆய்வாளர் ரமேஷ் ஒன்பது பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரது தலைமையில்
பிரவீன் யுவராஜ் சோபனா உட்பட ஏழு பேரிடம் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் இந்த வழக்கில் தன்னுடைய பெயரும் சேர்க்கப்படும் என்பதால் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில் அரசு வழக்கறிஞர் வழக்கில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் பெயர் சேர்க்கப்படாத நிலையில் முன் ஜாமின் மனுவை தாக்கல் செய்துள்ளார் என்றும் இது சம்பந்தமாக பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும் எனவும் அரசு வழக்கறிஞர் கூறியதை அடுத்து வழக்கை கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம் ஒத்திவைத்தார்.
இந்த நிலையில் கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர்ருமான எம் ஆர் விஜயபாஸ்கர் பெயரை பிரவீன் யுவராஜ் இரண்டு பேரும் பயன்படுத்தியதால் இந்த வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் பெயரையும் இணைத்து கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் காவல் நிலைய வட்டாரத்தில் தகவல் வெளிவந்துள்ளது.
நில மோசடி செய்த வழக்கில் சில ஆவணங்கள் காவல்துறையிடம் சிக்கி உள்ளதால் அந்த ஆவணங்களின் அடிப்படையில் எம் ஆர் விஜய பாஸ்கரை கைது செய்யலாம் எனவும் அதனால் எம் ஆர் விஜயபாஸ்கர் முன் ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும் கரூர் மாவட்ட அதிமுக கட்சி நிர்வாகிகள் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
போலி ஆவணங்கள் மூலம் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை பத்திர பதிவு செய்து மோசடி செய்ததில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கருக்கு எவ்வாறு தொடர்பு உள்ளது என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகவே
முன்னாள் அதிமுக அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் முன்ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் முன்ஜாமன் கிடைக்குமா இல்லை
காவல்துறையினரால் குஞ்சாமின் கிடைப்பதற்கு முன்பே கைது செய்யப்படுவாரா !?
என கரூர் மாவட்ட அதிமுக கட்சி நிர்வாகிகள் வட்டாரத்தில் தற்போது இந்த சம்பவம் பற்றி பரபரப்பாக பேசப்பட்டு வரும் இந்த நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி க்கு மாற்றி விசாரணை மேற்கொண்டு மேற்கொண்டு வருகிறார்கள்.
எது எப்படியோ கடந்த 2023 ஜூன் 13ஆம் தேதி அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
2024 ஜூன் 13ஆம் தேதி 100 கோடி ரூபாய் நிலம் மோசடி புகாரில் சிக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.