மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் பல கோடி ரூபாய் ஊழல் முறைகேடு! ஊரக வளர்ச்சி முதன்மைச் செயலாளர் அவர்கள் நடவடிக்கை எடுப்பாரா!??
2022 2023 ஆண்டுக்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் பல கோடி ரூபாய் ஊழல் முறை கோடு!
ஆட்களே இல்லாத டீக்கடையில் யாருக்கு டீ ஆர்த்துகிறார் என்ற காமெடி தான் தற்போது நினைவுக்கு வருகிறது. அவசர கோலத்தில் வேலையை முடித்து பணம் ஆட்டையை போட்ட ஒப்பந்ததாரர்கள்!
ஊரக வளர்ச்சி முதன்மைச் செயலாளர் அமுதா IAS நடவடிக்கை என்ன!?
+Replenishment. Category, )
விருதுநகர் மாவட்டத்தில் ஒவ்வொரு அடி குழாய் சுற்றிமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் நலத்திட்டங்கள் செயல்பட்டு வருகிறது . இதில் முக்கியமாக மயானங்களில் சுடுகாடு) களில் கோடை காலங்களில் பொதுமக்கள் பயன்படுத்த அடி குழாய்கள்( கை பம்புகள்) அமைக்கப்பட்டுள்ளது .அந்த அடி குழாய்கள் தற்போது இருக்கிறதா அப்படியே இருந்தாலும் அது பழுதடைந்து இருக்கிறதா இல்லை பயன்பாட்டில் இருக்கிறதா இல்லையா என்பதை கூட உறுதி செய்யாத புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர் அலட்சியப் போக்கை கடைபிடிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதைவிட ஒரு அதிர்ச்சி தகவல் தேனி மாவட்டத்தில் இருந்த திட்ட இயக்குனர் தண்டபாணி தான் தற்போது விருதுநகர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திட்ட இயக்குனர் தண்டபாணி மீது தேனி மாவட்டத்தில் பல குற்றச்சாட்டுகள் பல மோசடி புகார்கள் வந்த வண்ணம் இருந்த நிலையில் தற்போது விருதுநகர் மாவட்டத்தின் திட்ட இயக்குனராக (PD) project director பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விருதுநகர் மாவட்டம் ஒரு வறட்சி நிறைந்த மாவட்டமாக இருப்பதால் கோடை காலங்களில் மக்கள் குடிநீருக்காக மிகவும் சிரமப்பட்டு வரும் அவல நிலை தொடர்ந்து இருப்பதால் அந்த நிலையை மாற்ற பல திட்டங்களின் மூலம் கோடை காலங்களில் மக்கள் மட்டுமல்ல கால்நடைகள் பறவைகள் அனைத்து உயிரினங்களும் பயன்படுத்தும் தண்ணீருக்காக மத்திய அரசு வழங்கும் பல கோடி ரூபாய் நிதியிலிருந்து மாவட்ட ஆட்சியாளர்களின் நேரடி பார்வையில் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
தற்போது ஊராட்சி மன்றங்களில் உள்ள சுடுகாட்டில் அமைந்துள்ள அடி குழாய்கள் அருகே மீள் நிரப்பு வடிவம் ( recharge shopt) என்ற பெயரில் திட்டங்கள் தற்போது செய்து முடிக்கப்பட்டுள்ளது.
அப்படி மீள் நிரப்பு வடிவம் அமைக்கப்பட்ட இடங்களில் உள்ள அடி குழாய்கள் பெரும்பாலான இடங்களில் பயன்பாடு இல்லாமலும் அது மட்டும் இல்லாமல் அதைவிட அதிர்ச்சியான தகவல் என்னவென்றால் அடிக் குழாய்களே இல்லாத இடத்தில் நீர் மீள் நிரப்பு வடிவம் அமைத்து இருப்பது வேதனையாக உள்ளது.
இந்த திட்டத்தில் நடைபெறும் இந்தப் பணிக்கு ஒரு இடத்தில் மீள் நிரப்பு வடிவம் அமைப்பதற்கு 31 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் உள்ள திட்ட இயக்குனரின் கீழ் நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றிய ஊராட்சிகளில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 450 ஊராட்சிகளில் நடைபெற்றுள்ள சம்பந்தப்பட்ட இடங்களை ஆய்வு மேற்கொண்டு அதன் அடிப்படையில் அந்தப் பணி நிறைவு செய்யப்பட்டதா இல்லையா அதில் முறைகேடு நடந்துள்ளதா என்ற அறிக்கை தாக்கல் செய்து அதற்கான நிதியை ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கி வருகிறது. ஆனால் இந்த இந்த பணியில் குறைந்தது ஆயிரம் இடங்களில் இந்தப் பணி நடைபெற்று இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் ஒரு இடத்தில் குறைந்தது 15000 வரை ஊழல் முறைகேடு நடைந்து இருப்பதாகவும் அப்படி என்றால் குறைந்தது 15 கோடி வரை ஊழல் முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த முறைகேடுகளுக்கு உடந்தையாக மாவட்ட திட்ட இயக்குனரும் (PD) காரணம் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஏனென்றால் ஒரு மாவட்டத்தில் திட்டங்கள் நிறைவேற்றப்படுவது அந்தந்த மாவட்ட திட்ட இயக்குனர் கீழ் அந்தத் திட்டங்களுக்கு அனுமதி வழங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்படி இருக்கும் நிலையில் இது போன்ற முறைகேடுகளை விருதுநகர் மாவட்ட திட்ட இயக்குனர் தவறவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அது போன்று திட்டக் கழிவு
தூய்மை பாரத இயக்கம்( ஊரகம்)
திட்டக் கழிவு மேலாண்மை இயக்கத்தின் கீழ் அடிகுழாய்கள் அருகே நீர் உறிஞ்சு வடிவமைப்பு அமைக்க விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்றங்களிலும் உள்ள அடி குழாய்கள் அருகில் நீர் உறிஞ்சு வடிவமைப்பு அமைக்க பல கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 ஊராட்சிகள் ஒரு ஊராட்சியில் குறைந்தது ஐந்து அடி குழாய்கள் அமைக்கப்பட்டு இருக்கும் அப்படி என்றால் மாவட்டம் முழுவதும் சுமார் 2500 க்கும் மேற்பட்ட அடி குழாய்கள் கண்டிப்பாக தற்போது ஆயிரக்கணக்கான அடிகுழாய் அருகில் இந்தத் திட்டத்தின் கீழ் வேலைகள் நடந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அப்படி என்றால் ஒரு அடிகுழாய் அருகே 13 ஆயிரம் ரூபாய் என்றால் ஆயிரம் அடிகளாய் களுக்கு சுமார் 5 கோடி ரூபாய் வரை ஊழல் முறைகேடு நடந்திருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா டி மீனாட்சிபுரம் ஊராட்சியில் ஏற்கனவே பெண்களுக்கான கழிப்பறை கட்டி தற்போது இடிந்த நிலையில் இருப்பதாகவும்
அதை பராமரிப்பு செய்ய அல்லது புதிதாக கட்டித் தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை . இதனால் இரவு நேரங்களில் பெண்கள் திறந்த வெளியில் கழிப்பிடமாக பயன்படுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் வந்துள்ளது.
எது எப்படியோ மக்களுக்கான நலத்திட்டங்களை மத்திய அரசோ மாநில அரசோ தங்களுடைய நிதியில் இருந்து பல திட்டங்களை நிறைவேற்றி வரும் இந்த நிலையில் இது போன்ற ஊழல் முறைகேடுகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியாளர்கள் தங்களது கவனத்தில் எடுத்துக் கொண்டு நியாயமான முறையில் திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாகும். இன்னும் பல ஊழல் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் அதை ஆதாரப்பூர்வமாக விரைவில் சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியாளரிடம் புகார் கொடுக்க உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.