மண் கடத்திய லாரியை விடுவிக்க பல லட்சம் லஞ்சம் வாங்கிய பேராவூரணி காவல் ஆய்வாளர்!
டி ஐ ஜி நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகா புதூர் ரோடு கிராமத்து அருகே 25/04/23 அன்று கனிம வளம் கடத்தி வந்த அசோக் லைலாண்ட் லாரி ஒன்று( TN 46 L 2601)பள்ளத்தில் சிக்கி நின்றுள்ளது.
இதை அறிந்த சதீஷ்குமார் s/o சிவசாமி (பேராவூரணி 11 வார்டு கிளை திமுக இளைஞரணி துணை அமைப்பாளர்) அங்கு சென்றுள்ளார். லாரி இருந்த இடத்தில் கொரட்டூர் பாலா என்பவர் சதீஷ்குமாரை தகாத வார்த்தைகள் திட்டி உள்ளார். அதன் பின்பு தாக்கவும் வந்துள்ளார்அதன் பின்பு கொரட்டூர் பாலா என்பவர் யாருக்கோ போன் செய்ததாகவும் உடனே சொகுசு கார் ஒன்று வந்த தாகவும் அந்த காரில் வந்த நான்கு பேர் சதீஷ்குமாரை தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும். இதை அறிந்த சதீஷ்குமாரின் மனைவி தடுக்க சென்றதும் அவரையும் தகாத வார்த்தைகளால் திட்டி சதீஷ்குமார் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதாகவும் உடனே சதீஷ்குமார் பேராவூரணி காவல் நிலையத்தில் தகவல் கொடுத்துள்ளார் சம்பவ இடத்திற்கு சென்ற பேராவூரணி காவல் ஆய்வாளர் காவேரி அவர்கள்
கொலை வெறி தாக்குதல் நடத்திய மணல் கடத்திய லாரியை விடுவித்து அவர்களுக்கு சாதகமாக ஒருதலைப் பட்சமாக செயல்பட்டதாகவும் மணல் எடுக்க அனுமதி ரசீது பெற்றுக் கொண்டு கனிம வளம் கடத்தி வந்த லாரியை விடுவிக்க பல லட்சம் லஞ்சம் வாங்கிக் கொண்டு பாதிக்கப்பட்ட சதீஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் .
உடம்பு முழுவதும் பலத்த காயங்களுடன் சதீஷ்குமார் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் மணல் எடுத்துச் செல்ல அனுமதி பெற்றுள்ள ரசீதை ஏரி குளங்களில் மண் வெட்டி கடத்தி சென்றதாகவும் அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.
தொடர்ந்து சட்ட விரோதமாக கனிம வளம் கடத்தல் சம்பந்தமாக பொதுமக்கள் புகார் கொடுத்தாலும் தடுக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகள் கடத்தலுக்கு உடந்தையாக செயல்பட்டு வருவது தொடர் கதையாக உள்ளது. சில தினங்களுக்கு முன்பு கனிம வளம் கடத்துவதை தடுத்து நிறுத்திய தூத்துக்குடி மாவட்ட கிராம நிர்வாக அலுவலரை அலுவலகத்தில் புகுந்து வெட்டி கொலை செய்தது குறிப்பிடத்தக்கது. ஆகவே சட்டவிரோதமாக போலி ரசீது வைத்து சட்ட விரோதமாக கிடைக்கும் கனிம வளங்களை கடத்தும் கடத்தல் காரர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் டி ஐ ஜி அவர்கள் முன் வர வேண்டும் .அது மட்டும் இல்லாமல் சட்ட விரோதமாக கனிம வளங்களை கடத்துபவர்களுக்கு உடந்தையாக செயல்படும் காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்