மதுரை அன்புச் செழியன் அலுவலகத்திலிருந்து எடப்பாடியின் 500 கோடி ரூபாய் பணம் அதிமுக கட்சி நிர்வாகிகளுக்கு பட்டுவாடா !? பிஜேபியின் முக்கிய தலைவரிடம் ஒபிஎஸ் புகார் !?வருமானவரித் துறை அதிகாரிகளுக்கு டெல்லியில் இருந்து பறந்த உத்தரவின் பெயரில் சோதனை!?

தமிழகத்தில் வருமானவரி சோதனை நடப்பது அன்றாட நிகழ்வாகி வருகிறது. அவ்வப்போது பணம், நகைகள் கைப்பற்றப்படுவதாக செய்திகள் வருகின்றன. அப்படிக் கைப்பற்றப்படும் பணம், நகைகளை என்ன செய்வார்கள்? திரும்பவும் சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைத்து விடுவார்களா? ” என்ற கேள்வி சாமானிய பாமர பொது மக்களிடம்எழுகிறது
சோதனை ஒருபுறம் நடந்துகொண்டு இருக்கும்போதே, வரி செலுத்துவோரிடம் முதல்கட்ட அறிக்கை (preliminary statement) பெற்றுவிடுவார்கள். சோதனையின்போது கிடைத்த ரொக்கம், தங்கம் விலை உயர்பொருள்கள், ஆவணங்கள் அடிப்படையில், நிறைவு அறிக்கை (final statement) தயாரிக்கப்படும். கணக்கில் காட்டப்படாத, முறையாக விளக்கம் அளிக்கப்படாத ரொக்கம், தங்கம், விலையுயர் பொருள்கள் தற்காலிகமாகப் பறிமுதல் செய்யப்படும். இவற்றை முறையாகப் பட்டியலிட்டு முத்திரைக் கையெழுத்துடன் ஒரு பிரதி அப்போதே வரி செலுத்துவோருக்கு வழங்கப்படும்.
இதன்பிறகு முறையாக முழு விசாரணை நடைபெறும். சோதனைக்கு உள்ளானவர், தனது தரப்பு வாதங்கள்/ விளக்கங்களைத் தாராளமாக முன்வைக்கலாம். இவற்றைப் பரிசீலித்து அதன் பிறகு வரி ஏய்ப்பு தொடர்பான ஆணை பிறப்பிக்கப்படும். தமக்கு நியாயம் கிடைக்கவில்லை என்று பாதிப்படைந்தவர் கருதினால், அந்த ஆணை மீது, மேல் முறையீடு செய்யலாம் இதுதான் வருமானத்துறையின் நடவடிக்கை.
இரண்டு வருடங்களுக்கு முன்பு 2020 ஆம் ஆண்டில் வரி ஏய்ப்பு தொடர்பான புகாரின் பேரில் சென்னை தி. நகர் ராகவேந்திரா சாலை யில் உள்ள அன்புச்செழியன் வீடு மற்றும் அலுவலகங்கள் உறவினரின் இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில் கணக்கில் வராத பணம் மற்றும் நகை மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. அதன் மதிப்பு ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும் என்று தகவல் வந்தது.
அதன் பின் வருமான வரித்துறை அதிகாரிகள் 350 கோடி ரூபாய் பணத்தை செலுத்தி வழக்கை நடத்த நோட்டீஸ் அனுப்பியதாக தகவல் வந்தது. அதன் பின்னர் 160 கோடி கட்டச் சொல்லி பேச்சு வார்த்தை நடந்ததாக தகவல் வந்தது.
அதன் பின்பு வருமானத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்ததாக தகவல் வந்தது.
வருமான வரி தாக்கல் செய்ய கடந்த ஜூலை 31ஆம் தேதி கடைசி நாள்.
அதன்பின் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் தங்களது அசைன்மென்ட் டை ஆரம்பிக்க தொடங்கினர். இதில் ஒட்டுமொத்த தமிழக மக்களையே திரும்பி பார்க்க வைத்த சினிமா பைனான்ஸ் கொடுக்கும் அன்பு செழியன் வீடு மற்றும் அலுவலகங்கள் உறவினர் வீடு மற்றும் அலுவலகங்கல் உட்பட 40 இடங்களில் வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை செய்து வந்தனர்..
இதில் வருமான வரி துறை அதிகாரிகள் அன்புச் செழியன் தம்பி அழகர் அலுவலகத்தில் சோதனை நடத்திய போது அங்கு உள்ள ஒரு ரகசிய அறையின் கதவு தொழில்நுட்பத்துடன் இருந்ததை கண்டு வியந்து போன வருமானத்தை அதிகாரிகள் அன்புச் செழியன் மற்றும் தம்பி அழகரை அழைத்து அந்த அறையின் கதவை திறக்க சொன்னார்கள்.
அப்போது அழகர் மற்றும் அவரது அண்ணன் அன்புச்செழியன் இருவரில் யாராவது ஒருவர் கைரேகை வைத்து கதவில் உள்ள கேமரா முன் நின்ற பின்னர் கதவு திறக்கப்பட்டது. அதன் பின் அந்த ரகசிய அறையில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத கருப்பு பணத்தை வருமானத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக தகவல் வெளியானது.
அதன் பின்னர் இரண்டு வருடம் கழித்து 2022 ஆகஸ்ட் மாதம் மூன்றாம் தேதி அன்புச் செழியன் அவரது சகோதரர் அவரது உறவினர்கள் அலுவலகங்கள் வீடு போன்ற 40 க்கும் மேற்பட்ட இடங்களில் அனைத்து இடங்களிலும் காலை ஐந்து மணி முதல் வருமான வரி துறையினர் சோதனை நடத்த ஆரம்பித்தனர் அந்த சோதனை நான்கு நாட்களாகதொடர்ந்து நடந்து வந்தது.
அன்றைய தினமே திரைப்பட தயாரிப்பாளர்கள் ஆன கலைப்புலி எஸ் தான சத்தியஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் நடிகர் சூர்யா கார்த்திக் அவரது உறவினரான ஞானவேல் மற்றும் SR. பிரபு வேலூர் எஸ் பிலிம்ஸ் சீனு
கோவை கந்தசாமி பிச்சர்ஸ் மன்னார் அது மட்டும் இல்லாமல் சினிமா பைனான்சியர் தஷ்வந்த் பண்டாரி அவரது வீட்டிலும் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இதில் தஸ்வந்த் பண்டாரி அலுவலகம் மற்றும் வீடுகளில் சோதனை நடித்தது 100 கோடி ரூபாய் வரை கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணங்களை எடுத்துச் சென்றதாக தகவல் வெளியானது.
மற்றும் நடிகர் சூர்யா உறவினரான ஞானவேல் அலுவலகத்தில் இருந்தும் கணக்கில் வராத ஆவணங்கள் கைப்பற்றதாக தகவல் வந்தது.
இதில் முக்கியமாக வருமான வரித்துறையினர் சோதனை இட்டதில் மதுரை அன்புச் செழியன் அலுவலகம் மற்றும் வீடுகளில் 500 கோடி ரூபாய்க்கு மேலாக பணம் மற்றும் நகை மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.
ஆனால்
இந்த சோதனையில் முறையாக கணக்கில் காட்டாத ஆவணங்கள், குறிப்பாக மின்னணு ஆவனங்கள், கணக்கில் வராத பணப்பரிவர்த்தணைக்கான ஆவணங்கள், உள்ளிட்ட முக்கிய ஆதாரங்கள் கிடைக்கப் பெற்று இருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பைனான்சியர் அன்புச்செழியனுக்கு தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.200 கோடி ரூபாய் வருவாய் மறைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் 40 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரொக்கம் ரூ.26 கோடி ரூபாய் பணம், 3 கோடி மதிப்புள்ள தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த சோதனையின் அடிப்படையில் சம்மந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த வருமான வரித்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
வருமான வரித்துறையினர் அன்புச் செழியன் அலுவலகம் மற்றும் உறவினர் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தியதற்கு காரணம் என்ன என்று புலனாய்வு செய்ததில் திடுக்கிடிடும் தகவல் கிடைத்துள்ளது.

அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற நிலை எடுக்கப்பட்ட நாள் முதல் ஓபிஎஸ் இபிஎஸ் இரண்டு பேரும் இரு துருவங்களாக செயல்பட்டனர். அதன்பின் அவசர அவசரமாக பொதுக்குழு நடத்தப்பட்டது அந்த பொதுக்குழுவில் ஓபிஎஸ் வெளியேறினார் அதன் பின் செயற்குழு உறுப்பினர்களை வைத்து எடப்பாடி தற்காலிக பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். எடப்பாடி தற்காலிக அதிமுக பொதுச் செயலாளர் தேர்ந்தெடுப்பதற்கு தமிழகத்தில் உள்ள 39 மாவட்டச் செயலாளர்கள் மற்றும் 70க்கும் மேற்பட்ட ஒன்றிய செயலாளர்கள் மற்றும் மாவட்ட பிரதிநிதிகள் தலைமைக் கழக குழு நிர்வாகிகள் என 2500 பேர் பொது குழுவில் கலந்து கொண்டனர். 2500 பேரில் முன்னாள் அமைச்சர்கள் தவிர மற்ற அனைவர்களுக்கும் மூன்று கோடியிலிருந்து ஐந்து கோடி வரை பணம் கொடுக்கப்பட்டதாகவும் ஒன்றிய செயலாளர் மாவட்ட பிரதிநிதிகள் தலைமை குழு நிர்வாகிகள் தலா ஒரு கோடியில் இருந்து மூன்று கோடி வரை கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது. இப்படி எடப்பாடி 2500 பேருக்கும் கொடுத்த பணம் குறைந்தது ஆயிரம் கோடி ரூபாய் வரை இருக்கும் என்று பரவலாக பேசப்பட்டது.
இதில் முக்கியமாக கொங்கு மண்டலம் மாவட்ட பிரதிநிதிகள் ஒன்றிய செயலாளர்கள் மாவட்ட செயலாளர்கள் அனைவருக்கும் பணம் பட்டுவாடா செய்வதை எஸ்பி வேலுமணி மற்றும் தங்கமணி இரண்டு பேரும் பார்த்துக்கொண்டார்கள் என்றும் தென் மாவட்டங்களில் உள்ள மாவட்டச் செயலாளர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் மாவட்ட பிரதிநிதிகள் அனைவரையும் ஒருங்கிணைக்க ஆர் பி உதயகுமார் நியமிக்கப்பட்டதாகவும். அதற்கு 500 கோடி ரூபாய் வரை தென்மாவட்டங்களுக்கு கொடுத்ததாகவும் அந்த பணத்தை மதுரை சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் அலுவலகத்தில் இருந்து தான் பிரித்துக் கொடுக்கப்பட்டதாகவும் இந்த தகவலை ஓபிஎஸ் டெல்லியில் உள்ள முக்கிய பிஜேபி புள்ளியிடம் கூறியதாகவும் அதன் பின்னரே வருமானத்துறை சோதனை நடத்தியதாகவும் திடுக்கிடும் தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

அது மட்டும் இல்லாமல் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு அதிமுகவில் உள்ள எஸ் பி வேலுமணி ஆர் பி உதயகுமார் தங்கமணி போன்ற முக்கிய முன்னாள் அமைச்சர்களின் கருப்பு பணங்களை அன்புச் செழியன் வசம் கொடுத்து சினிமா தயாரிப்பாளர்களுக்கு மூன்று வட்டிக்கு கொடுக்கச் சொன்னதாகவும் அதன் அடிப்படையிலேயே வருமானவரித்துறையினர் சினிமா துறையினர் வீட்டிலும் சோதனை நடத்தியதாகவும் தற்போது நமக்கு தகவல் வந்துள்ளது.
வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து எடுத்துச் செல்லும் கணக்கில் வராத பணம் நகை மற்றும் ஆவணங்களை எவ்வளவு என்று தெரிவிக்கின்றனர்.
அதன் பின்பு ஒரு சில வருடங்களுக்குப் பின்பு மறுபடியும் அதே நபர் வீடு அலுவலகங்களில் சோதனை இட்டு மறுபடியும் கணக்கில் வராத பணம் நகை ஆவணங்களை பறிமுதல் செய்து எடுத்துச் செல்கின்றனர். இப்படியே இரண்டு வருடம் 3 வருடத்திற்கு ஒருமுறை சோதனை செய்து ஆவணங்களை பறிமுதல் செய்து அதன்பின் அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. ஆகவே மோடி பிரதமர் ஆன பின்பு கருப்பு பணத்தை முழுவதுமாக ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஐந்து வருடம் முன்பு டி மானிடேஷன்( பண மதிப்பு இழப்பு )கொண்டு வந்து ஒரே இரவில் கருப்பு பணத்தை அனைத்தையும் கணக்கில் கொண்டு வந்தார்.
ஆனால் அதன் பின்பு தொடர்ந்து இந்தியா முழுவதும் கணக்கில் வராத கருப்பு பணம் இருப்பதாக வருமானவரித்துறை என சோதனை இட்டு பல லட்சம் கோடி ரூபாயை பறிமுதல் செய்ததாக தகவல் வந்துள்ளது.
ஆனால் பிஜேபிக்கு ஆட்சிக்கு வந்து எட்டு வருடங்கள் கடந்த பின்பும் படித்த இளைஞர்களுக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை என்றும் கேஸ் மற்றும் பெட்ரோல் விலை உயர்வால் சாதாரண பாமர மக்களின் வாழ்க்கை நிலை தற்போது கேள்விக்குறியாக உள்ளது என்பதையும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.