மாநகராட்சி

மதுரை கோவை திருச்சி நெல்லை நாகர்கோவில் ஆவடி ஆறு மாநகராட்சிக்கு புதிய ஆணையர்கள் நியமனம்!!

தமிழகத்தில் திருச்சி, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் ஆவடி ஆகிய 6 மாநகராட்சி ஆணையர் கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.
1.மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்

2.கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுங்கரா ஐ.ஏ.எஸ்

3. திருச்சி மாநகராட்சி ஆணையர்

4.நெல்லை மாநகராட்சி ஆணையர்
விஷ்ணுச்சந்திரன் ஐ.ஏ.எஸ்

5.நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர்.ஆனந்த் ஆஷா ஐ.ஏ.எஸ்


6.ஆவடி மாநகராட்சி ஆணையர் மாற்றப்பட்டு புதிய ஆணையர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆறு மாநகராட்சிகள்



சென்னை மாநகராட்சியில் தெற்கு மண்டல துணை ஆணையராக பணியாற்றி வந்த சிம்ரன்ஜித் சிங் ஐ.ஏ.எஸ், மதுரை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மாநகராட்சியில் முன்னதாக கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் ஆணையராக பணியாற்றி வந்தார்.

திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலராக பணியாற்றி வந்த பிரதாப் ஐ.ஏ.எஸ், கோவை மாநகராட்சி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவை மாநகராட்சியில் முன்னதாக ராஜகோபால் சுங்கரா ஐ.ஏ.எஸ் ஆணையராக பணியாற்றி வந்தார்.

தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலராக பணியாற்றி வந்த வைத்தியநாதன் ஐ.ஏ.எஸ், திருச்சி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.


தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்ட இயக்குனராக பணியாற்றி வந்த சிவகிருஷ்ண மூர்த்தி ஐ.ஏ.எஸ், நெல்லை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை மாநகராட்சியில் முன்னதாக விஷ்ணுச்சந்திரன் ஐ.ஏ.எஸ் ஆணையராக பணியாற்றி வந்தார்.



கோவை வணிக வரித்துறையில் இணை ஆணையராக பணியாற்றி வந்த ஆனந்த் மோகன் ஐ.ஏ.எஸ், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். நாகர்கோவில் மாநகராட்சியில் முன்னதாக ஆனந்த் ஆஷா ஐ.ஏ.எஸ் ஆணையராக பணியாற்றி வந்தார்.

மாநில விருந்தினர் மாளிகையில் இணை அலுவலராக பணியாற்றி வந்த தற்பகராஜ் ஐ.ஏ.எஸ், ஆவடி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Articles

One Comment

  1. E2Bet Pakistan
    Blog Comment: Finally, a platform that caters to Pakistani cricket fans!
    E2Bet has everything—live matches, instant betting options,
    and unbeatable odds. Loving the experience so far!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button