மாவட்டச் செய்திகள்

மதுரை சமயநல்லூர் அருகே சுப்ரீம் நெசவுத் தொழிற் சாலையிலிருந்து சட்ட விரோதமாக விவசாய நிலங்களில் விடும் சாயக் கழிவுகளால் வீணாகும் விவசாய விளைநிலம் !!
கொடிய தொற்று நோயினால் உயிருக்குப் போராடும் கால்நடைகள்!!
அச்சத்தில் விவசாயிகள் !!
கண்டுக் கொள்ளாமல் கல்லாக் கட்டும் மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள்!!
நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியாளர் !?

மதுரை சமயநல்லூர் அருகே சுப்ரீம் நெசவுத் தொழிற் சாலையிலிருந்து சட்ட விரோதமாக விவசாய நிலங்களில் விடும் சாயக் கழிவுகளால் வீணாகும் விவசாய விளைநிலம் !!
கொடிய தொற்று நோயினால் உயிருக்குப் போராடும் கால்நடைகள்!!
அச்சத்தில் விவசாயிகள் !!
கண்டுக் கொள்ளாமல் கல்லாக் கட்டும் மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள்!!
நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியாளர் !?

சுப்ரீம் நேசவு தொழிற்சாலை நகரி மதுரை மாவட்டம்
தொழிற்சாலை வெளிப்புற தோற்றம்

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அடுத்துள்ள நகரி என்ற கிராமத்தில் சிறு தொழிற்சாலைகள் அமைந்துள்ளது.
இந்தப் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோத்தாரி என்னும் கெமிக்கல் தயாரிக்கும் பெரிய தொழிற்சாலை இயங்கிக் கொண்டிருக்கும் போது அந்தத் தொழிற்சாலை கழிவுகளால் மற்றும் வெளியேறும் புகையாலும் விளை நிலங்கள் வீனாய் போவதாகவும், ஆடு மாடுகள் போன்ற கால்நடைகள் தொற்று நோயால் பாதிக்கப்படுகிறது என்று பொதுமக்கள் ஒட்டுமொத்தமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அறிந்த மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் தொழிற்சாலைக்கு சீல் வைத்து நிறந்தமாக மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது!!தற்போது நகரியில் 100க்கும் மேற்ப்பட்ட ( small industries ) சிறு தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது, இதில் நகரியில் இருந்து சோழவந்தான் செல்லும் சாலையில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான சுப்ரீம் நெசவு சாயத் தொழிற்சாலை இயங்குகிறது , இந்தத் தொழிற்சாலையிலிருந்து தான் சாயக்கழிவுகள் அருகே உள்ள உணவுப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் விளைநிலங்களிலும் இரவு நேரங்களில் யாருக்கும் தெரியாத வகையில் சட்ட விரோதமாக சாயக்கழிவு நீரை மோட்டார் மூலம் பைப் வழியாக வெளியேற்றி வருகின்றனர் என்றக் குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளது.

இது சம்மந்தமாக சமூக ஆர்வலர்கள் நெசவுத் தொழிற்சாலை நிறுவனத்தினரிடம் கேட்டால் அச்சுறுத்தும் வகையில் மிரட்டி வருகிறார்கள் என்று குற்றம் சாட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.
இது சம்மந்தமாக பல முறை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தகவல் வந்துள்ளது. அதற்கு காரணம் தொழிற் சாலைகளில் ஆய்வு மேற்கொள்ளும் அதிகாரிகள் பேரம் பேசி பல லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிக் கொண்டு யார் வீட்டில் சாவு விழுந்தால் நமக்கு என்ன நம் வீட்டில் தீபாவளி கொண்டாடுவோம் என்ற பழமொழிக்கு ஏற்றாற்போல் சென்று விடுவார்களாம் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்தக் குற்றச்சாட்டின் உண்மை தன்மை அறிய நேரில் சென்று பார்வையிட பத்திரிகை நிருபர் சென்ற போது அந்த இடத்தை பார்த்தவுடன் ஒரு கணம் தலை சுற்ற வைத்தது விட்டதாம்.,அந்த அளவுக்கு அங்கு குளம் போல் தேங்கி நிற்கும் கெமிக்கல் இரசாயன சாயத்தின் நச்சு கழிவுகளின் துர்நாற்றம் மூச்சுத் திணறல் ஏற்படும் அளவுக்கு கலங்க வைத்தது என்று கூறுகிறார்.
இதனை தொடர்ந்து ஆடைகளில் வடிவமைப்புகளில் வண்ணம் சாயம் பூசும் அந்த நெசவு தொழிற்சாலையை சுற்றி பார்த்தில்
அதன் பக்கத்தில் குளம் ஒன்று சிறிய ஊரணியாக மாறி இருக்கிறது .
அங்கு தான் அருகில் உள்ள கிராம விவசாயிகள் தங்கள் வளர்க்கும் கால்நடையான ஆடு மாடுகள் தண்ணீர் குடிக்க பயன்படுத்தி வருகின்றனர். இந்த குளத்தில் இருக்கும் தண்ணீரை சட்ட விரோதமாக நிலத்தின் வழியாக மண்ணில் பைப்பை பதித்து அதன் வழியே விவசாய வயல் வெளிகளில் கொண்டு செல்வதும் தெரியவந்தது,

விஷத்தன்மை உள்ள நெசவு சாய தொழிற்சாலை சாயக்கழிவை முறையாக கையாளமல் அருகிலிருக்கும் உணவுப் பொருட்கள் தயாரிக்கும் கம்பெனியில் உள்ளே இருக்கும் நீர் தொட்டிக்குள்,இரவு நேரத்தில் பைப் வழியாக சாயக்கழிவுநீரை சட்ட விரோதமாக கடத்தி விடுகின்றனர்,
உணவு தராரிக்கும் தொழிற்சாலை பொறுப்பாளர் நெசவு தொழிற்சாலை உரிமையாளர்களிடம் கேட்டால் குண்டர்களை வைத்து மிரட்டி அடித்தனர் என்று தெரிவித்தார்.
இதை பற்றி உணவு பொருட்கள் தயாரிக்கும் கம்பெனியின் சூப்பர்வைசர் விக்னேஷ் கூறுகையில் சுப்ரீம் நெசவு தொழிற்சாலை ஆட்கள், அடிக்கடி எங்கள் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களை அசிங்கமாக பேசுவார்கள், சில நேரத்தில அடிக்கவும் வருவாங்க, மழை பெய்தால் போதும் உடனே மழை நீருடன் சாயக்கழிவுகளை கலந்து அருகில் இருக்கும் எங்கள் தொழிற்சாலைக்கு உள்ளே வரும் அளவுக்கு வெளியேற்றி விடுவாங்க என்று அதிர்ச்சி தகவலை அளித்தனர்.

அதே உணவு தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்து வரும் செல்வி என்ற பெண் சொன்னது தான் ஷாக், ஆமாம் சார் அந்த சாய பேக்டரிக்காரங்க எங்க கம்பெனிக்குள், நுழைந்து அசிங்கமாக கெட்ட வார்த்தையில் பேசுவாங்க, அப்புறம் அசிங்க, அசிங்கமா சைகை செய்து மிரட்டுவாங்க என்றார்,

சரி இதை பற்றி சாயக்பேக்டரி நிறுவனத்திடும் சாயக்கழிவுகள் கலப்பதை பற்றி விசாரித்தால் மிரட்டும் தொனியில் பார்த்தார்கள்,
சரி என்று அங்கு இருந்து சாதுர்யமாக கடந்து வந்து விட்டோம், சுப்ரீம் நெசவு தொழிற்சாலை சாயக்கழிவுகளால் விளை நிலங்களும், கால்நடை ஜீவராசிகளும் தொற்று நோய் தாக்குதலுக்கு உள்ளாகி உயிருக்கு போராடி வருவதை காணும் போது கண்ணீர் வருகிறது,
பெரிய உயிர் விபத்துகள் நடக்கும் முன், இத்தகைய தனியார் நெசவு தொழிற்சாலை சாயக்கழிவுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் அது மட்டுமில்லாமல் சட்டவிரோதமாக கழிவு நீரை விலை நிலங்களில் விடுவதால் தொழிற்சாலையை சீல் வைத்து தொழிற்சாலையின் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் ஊர் பொது மக்களும் மதுரை மாவட்ட ஆட்சியரும், நிர்வாகமும், அரசு மாசுக்கட்டுப்பாடு துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைக்கிறார்கள்.

எது எப்படியோ தற்போது தமிகத்தில் நல்லாட்சி நடத்தி வரும் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சம்பந்தப்பட்ட மாசுகட்டுப் பாட்டு துறை நிர்வாக அதிகாரிகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு தொற்று நோயினால் உயிருக்கு போராடும் ஆடு மாடுகளின் உயிரை காப்பாற்ற நிரந்தர தீர்வுக்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி விவசாயிகள், சமூக ஆர்வலர்கள்,பொதுமக்களின் பெரிய எதிர் பார்ப்பாக உள்ளது ..

நோய் வரும் முன் காப்பதே கடமை, அதை சரியாக அதிகாரிகள் செய்கிறார்களா என்றால் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது என்பது தான் நிதர்சனம்!!நடவடிக்கை எடுக்குமா அரசு, பொறுத்திருந்து பார்ப்போம்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button