மதுரை சோழவந்தானில் மீண்டும் ஒரு பெட்ரோல் பங்க் துவக்கம்! மகிழ்ச்சியில் பொதுமக்கள்!

புதிய பெட்ரோல் பங்க் துவக்கம்!
மதுரை மாவட்டம் சோழவந்தான் நகரில் ஒரே பெட்ரோல் பங்க் இருப்பதால் பொதுமக்கள் தங்களது வாகனங்களுக்கு பெட்ரோல் டீசல் போடுவதற்கு காலை மற்றும் மாலையிலும் நீண்ட நேரம் காத்திருந்து பெட்ரோல் டீசல் போட்டுச் சென்று சிரமப்பட்டு வந்தனர். அது மட்டும் இல்லாமல் தற்போது வெயில் காலமாக இருப்பதால் நீண்ட நேரம் பெட்ரோல் பங்குகளில் நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் இந்த சிரமங்களை மனதில் கொண்டு மேலும் பெட்ரோல் பங்க் திறக்க எம் வி எம் குழுமத்தினர் எச் பி நிறுவனத்திடம் அனுமதி பெற்று ஏற்பாடு செய்தனர் . பெட்ரோல் பங்க் பணிகள் முடிந்த நிலையில் 30/03/2023 துவக்க விழா இன்று காலை நடந்தது.

இவ்விழாவிற்கு எம் வி எம் குழுமத் தலைவரும் பாஜக மாநில விவசாய அணி செயலாளர் மாண மணிமுத்தையா தலைமை தாங்கினார் .
இந்த பெட்ரோல் பங்க் துவங்கி இருப்பதால் சோழவந்தான் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மற்றும் வேலைக்கு செல்லும் இளைஞர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். சோழவந்தான் சுற்றுப்பகுதியில் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் அனைவரது வீட்டிலும் இரண்டு சக்கர வாகனங்கள் இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை தற்போது உருவாகி இருப்பதால் பெட்ரோல் டீசல் தேவை அதிகரித்து இருக்கிறது. ஆனால் சோழவந்தான் காவல் நிலையம் எதிரில் ஒரே ஒரு பெட்ரோல் பங்க் இருப்பதால் அனைத்து பொதுமக்களும் அங்கு சென்று பெட்ரோல் டீசல் போட்டு வருவதாகவும் தற்போது மற்றொரு பெட்ரோல் பங்க் திறந்திருப்பதால் சிரமம் இன்றி விரைவில் பெட்ரோல் போட்டு கொண்டு தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு தகுந்த நேரத்திற்கு செல்ல இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
எச் பி பெட்ரோல் பங்க் துவக்கு விழாவில் கவுன்சிலர் வள்ளி மயில் முன்னிலை வகித்தார் சோழவந்தான் லயன்ஸ் கிளப் தலைவர் கவுன்சிலர் டாக்டர் மருது பாண்டியன் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார் இதில் பேரூராட்சி தலைவர் ஜெயராமன் துணைத் தலைவர் லதா கண்ணன் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் முன்னாள் சேர்மன் எம் கே முருகேசன் கவுன்சிலர் டீக்கடை கணேசன் ஓய்வு ஊதிய நலச்சங்க நிர்வாகி சோனைமுத்து ஊத்துக்குளி ராஜாராம் பிரகதீஸ்வரன் எம்வி எம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் செல்வம் வர்த்தக பிரமுகர் மாரியப்பன் வர்த்தக சங்க முன்னாள் செயலாளர் ஆதி பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர் தளபதி அதிபதி ஆகியோர் நன்றி தெரிவித்தனர்