மதுரை திமுகவிடம் 5 லட்சத்துக்கு விலைபோன அதிமுக வேட்பாளர் !?வேட்புமனு வாபஸ் பெற்றதால் கொதித்தெழுந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார்! நடந்தது என்ன!?

நடக்கவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக ,அதிமுக, பிஜேபி ,அதிமுக ,நாம் தமிழர் கட்சி ,மக்கள் நீதி மய்யம், மற்றும் சுயேச்சையாக வேட்பாளர்களாக களம் இறங்கி உள்ளனர்.
இதில் தமிழ்நாட்டில் பெரும்பாலான பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு வருகின்றன.தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் வாபஸ் பெற கடைசி நாள் 07/022022. என்று தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த இரண்டு நாட்களுக்கு முன்பே ஆளுங்கட்சியினர் இடம் எதிர்க் கட்சி வேட்பாளர்கள் பேரம் பேச வேட்பாளர்களை கடத்தி கொண்டு செல்வதாக குற்றச்சாட்டை ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அவர்கள் எழுப்பினர்.

திமுக வேட்பாளர்





மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியில் 91 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் 12 பேர் வாபஸ் பெற்ற நிளையில் 79 வேட்பாளர்கள் தற்போது களத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது! இதில் முக்கியமாக 9வது வார்டில் முன்னாள் திமுக பேரூராட்சித் தலைவர் கிருஷ்ணவேணி தற்போது நடக்க உள்ள பேரூராட்சி தேர்தலிலும் திமுகசார்பாக வேட்பாளராக அறிவிக்கப் பட்டிருந்தார். இவருக்கு எதிராக அதிமுகவில் இந்திராணி என்ற பெண்மணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
.இதையடுத்து மதுரை மாவட்டம் T.வாடிப்பட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. 18-வார்டுகளுக்கும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் 7/02/22 மாலை 5 மணி வரை மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் ஆகும். இதையடுத்து வாடிப்பட்டியில் பேரூராட்சியில் 9 வது வார்டில் அதிமுக சார்பாக வேட்பாளராக களமிறக்கப்பட்ட இந்திராணி என்ற பெண்மணி இன்று தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்று உள்ளார். இதையடுத்து திமுக சார்பாக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்த கிருஷ்ணவேணி பால்பாண்டி பெண்மணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதை அடுத்து அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அதிமுக அமைச்சரும் ஆர் பி உதயகுமார் அதிமுக வேட்பாளரை காரில் கடத்தி வைத்துக் கொண்டு மிரட்டி 5 லட்சம் வரை பணம் கொடுத்து வேட்பு மனுவை வாபஸ் பெற வற்புறுத்தி உள்ளதாக குற்றம் சாட்டி வாடிப்பட்டி பேருந்து நிலையம் அருகே அதிமுக கட்சி நிர்வாகிகளுடன் உட்கார்ந்து ஆர் பி உதயகுமார் தர்ணாவில் ஈடுபட்டார்.இந்த சம்பவம் வாடிப்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அசம்பாவிதம் நடக்காத வகையில் காவல்துறையினர் அதிமுக வினருடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லுமாறு வற்புறுத்தினார். ஆனால் அதற்கு அதிமுக கட்சி நிர்வாகிகள் மறுத்த நிலையில் அதிமுக கட்சி வேட்பாளர் இந்திராணி அவர்கள் என் குடும்ப சூழ்நிலை மற்றும் உடல் நலம் கருதியே வேட்பு மனுவை வாபஸ் பெற்றதாக காவல் துறையினர் முன்பு பத்திரிக்கையாளர்கள் பேட்டி அளித்தார்.இதையடுத்து அதிமுக வினரரிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லுமாறு கூறினர். இதையடுத்து ஆர் பி உதயகுமார் தலைமையில் நடந்த தர்ணா போராட்டத்தை கைவிட்டனர். இதையடுத்து நாம் களத்தில் நடந்த உண்மையை விசாரிக்க தொடங்கினோம் . அப்போதுதான் ஒரு அதிர்ச்சித் தகவல் காத்திருந்தது !! இரண்டு நாட்களுக்கு முன்பு 9வது வார்டில் நிற்கும் அதிமுக வேட்பாளர் இந்திராணி வாடிப்பட்டி பேரூராட்சி அதிமுக நிர்வாகிகளிடம் செலவுக்கு பணம் கேட்டதாகவும் ஆனால் 6வது வார்டில் நிற்கும் அதிமுக வேட்பாளருக்கு கட்சியில் இருந்து பணம் கொடுத்ததாகவும் 9வது வார்டில் நிற்கும் அதிமுக வேட்பாளர் இந்திராணிக்கு பணம் கொடுக்க மறுத்ததாகவும் பணம் இல்லை என்று தெரிந்தும் என்னை வேட்பாளராக நிறுத்தினார்கள் நான் இப்போது என்ன செய்வது வேட்புமனு தாக்கல் செய்ததிலிருந்து பத்தாயிரம் ரூபாய் கடன் கேட்டாலும் யாரும் தர மறுக்கிறார்கள். தேர்தல் முடியும்வரை எப்படி செலவு செய்வது என்று சண்டை போட்ட அதிமுக வேட்பாளர் இந்திராணி வேறு வழியின்றி அதே 9வது வார்டில் திமுக வேட்பாளர் கிருஷ்ணவேணி அவர்களை சந்தித்து நான் வாபஸ் பெற்றுக் கொள்கிறேன் என்றும் எனக்கு கடன் தொல்லை இருப்பதால் அந்தக் கடனை அடைப்பதற்கு நீங்கள் உதவுங்கள் என்றும் கேட்டுள்ளார். என்று அதிர்ச்சித் தகவல் வந்துள்ளது.
நடந்த சம்பவத்தை பற்றி அதிமுகவில் இருக்கும் ஒருசில நம்மிடம் கூறியபோது 6/02/22 அன்று அதிமுக வேட்பாளர் இந்திராணி அவரது கணவரை திமுக கட்சியினர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் பேச்சுவார்த்தையில் முதலில் இரண்டு லட்சம் தருவதாகவும் அதற்கு இந்திராணி கணவர் மறுத்ததாகவும் அதன்பின் 3 லட்சம் தருவதாகவும் அதற்கு அதிமுக வேட்பாளர் இந்திராணி அவருடைய கணவர் எங்களுக்கு கடன் பிரச்சனை நிறைய உள்ளதாகவும் 5 லட்சம் கொடுத்தால் வாபஸ் வாங்கிக் கொள்கிறோம் என்றும் பேச்சுவார்த்தையில் முடிவு செய்து இந்திராணி மற்றும் அவரது கணவரை திமுக கட்சி முக்கிய பிரமுகரின் சொகுசு காரில் ஏற்றி இரவு வாடிப்பட்டியை விட்டு வேறு இடத்திற்கு அழைத்துச் சென்று தங்க வைத்ததாகவும் 7/02 /22அன்று காலை வேட்புமனு வாபஸ் பெற வாடிப்பட்டி பேரூராட்சிக்கு அழைத்து வந்ததாகவும் மிரட்டி பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுக்க சொன்னதாகவும் நடந்த உண்மை இதுதான் என்றும் கூறினார்கள். இது மட்டும் இல்லாமல் இன்னும் 5 அதிமுக வேட்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாகவும் அவர்கள் தேர்தல் பணியை செய்ய வேண்டாம் என்றும் அவர்களுக்கு இதே போன்று பணம் கொடுப்பதாகவும் திமுகவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அதிமுகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் திமுகவில் வேட்பாளராக நிற்கும் முக்கிய பிரமுகர் ஒரு ஓட்டுக்கு பத்தாயிரம் வரை கொடுக்கவும் தயாராக இருப்பதாகவும் அதிமுகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை எல்லாம் திமுக கட்சியினர் மறுத்துவிட்டனர். அதிமுக கட்சி வேட்பாளர்கள் தோல்வி அடைந்து விடுவார்களோ என்ற பயத்தில் அதிமுக கட்சியின் தலைவர்கள் திமுக கட்சி வேட்பாளர்கள் மீது பழி சுமத்துகிறார்கள் என்றும் தற்போது ஸ்டாலின் தலைமையில் நடக்கும் ஆட்சி சிறப்பாக நடப்பதாகவும் பொதுமக்களிடம் அதிமுக மீது உள்ள அதிற்பதி இன்னும் இருக்கிறது என்றும் இந்த பயத்தால் திமுக மீது ஏதாவது பழி சுமத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகிறார்கள் என்றும் திமுக கட்சியினர் கூறுகின்றனர். எது எப்படியோ பத்து வருடம் அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தாமல் முட்டுக் கட்டை போட்டதை தற்போது திமுக ஆட்சியில் நடக்க உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேர்மையான முறையில் நடக்க வேண்டும் என்பதே சுயேச்சை வேட்பாளர்களின் கோரிக்கையாக உள்ளது.
canadian pharmacy reviews
canadian drugs pharmacy
sildenafil 50
prescription drugs online
canadian online pharmacies legitimate
sildenafil india