தேசிய நெடுஞ்சாலை துறை

மதுரை நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் செல்ல நினைக்கும் வாகன ஓட்டிகளுக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துவிடும்! சுங்கச்சாவடி என்ற பெயரில் பொதுமக்களிடம் நூதன முறையில் பணத்தை கொள்ளையடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத்துறை!

இந்தியாவில் எங்கும் இல்லாத அளவிற்கு பல மடங்கு மதுரை நத்தம் சுங்கச்சாவடி கட்டணம் வசூல்
இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம் என்றும்  வாகன ஓட்டிகள் ஆவேசம்!


மதுரை முதல் நத்தம் வரை மொத்தம் 44.3 கி.மீ தூரத்திற்கு தற்போது புறவழி பறக்கும் சாலை மத்திய அரசு மூலம் கட்டப்பட்டு உள்ளது. மத்திய அரசு பாரத் மாலா பரி யோஜனா திட்டத்தின் கீழ் இந்த சாலை அமைக்கப்பட்டு உள்ளது.
44 கிமீ தேசிய நெடுஞ்சாலையில் மொத்தம் 7.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு பறக்கும் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.


ஒவ்வொரு 150 அடிக்கும் ராட்சச தூண்களை வைத்து இந்த பிரம்மாண்ட பாலத்தை கட்டி உள்ளனர்..


மொத்தம் 612 கோடி ரூபாயில் இந்த பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டிலேயே மிக நீளமான வாகன போக்குவரத்துக்கு பயன்படும் மேம்பாலம் ஆகும். இந்த சாலையை 2023 ஏப்ரல் மாதம் பிரதமர் மோடி தமிழக முதல்வர் இணைந்து மதுரையில் திறந்து வைத்தனர்.


மதுரையில் இருந்து மாட்டுத்தாவணி வழியாக மேலூர் பைப்பாஸை பிடித்து சென்றால் 136 கிமீ துரத்திற்கு மேல் வரும். அதுவும் போக்குவரத்து நெரிசலும் அதிகம். அதேநேரம் மதுரை நத்தம் சாலையில் மேம்பாலம் வழியாக சென்றால் 126 கிமீ தூரம் தான் திருச்சிக்கு.. மேலும் போக்குவரத்து நெரிசலும் இருக்காது. புதிய சாலை காரணமாக மதுரையின் மையப்பகுதியில் இருந்தே திருச்சிக்கு வெகு விரைவாக இப்போது போக முடியும் என்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்ட எல்லையில் வேம்பாரளி அருகே தேசிய நெடுஞ்சாலைத்துறை புதிதாக சுங்கச்சாவடி அமைத்துள்ளது. இந்த சுங்கச்சாவடி வழியாக செல்லக்கூடிய வாகனங்களுக்கான கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அண்மையில் அறிவித்தது.
தமிழகத்திலேயே மிக நீளமான மேம்பாலம் அமைந்துள்ள மதுரை-நத்தம் சாலையில் திண்டுக்கல் மாவட்ட எல்லையில் அமைக்கப்பட்ட புதிய டோல்கேட் வசூல் மையத்தில்  அதிகப்படியான கட்டணம் வசூலிக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

அதன்படி, ஒரு முறை செல்லும் கார்களுக்கு ரூ.180, 24 மணி நேரத்திற்குள் டோல்கேட் வழியாக திரும்பி வந்தால் ரூ.270 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலகு ரக வணிக வாகன வகை, இலகு பொருள் வாகனம் அல்லது மினி பஸ்களுக்கு ரூ.290, 24 மணி நேரத்திற்குள் திரும்பி வந்தால் ரூ.435 ஆகும். பேருந்து அல்லது டிரக்குகளுக்கு ரூ.605, 24 மணி நேரத்திற்குள் திரும்பி வந்தால் ரூ.905 ஆகும்.

3 அச்சுகள் கொண்ட வணிக வாகனங்களுக்கு ரூ.660, 24 மணி நேரத்திற்குள் திரும்பி வந்தால் ரூ.990, பல அச்சுகள் கொண்ட கட்டுமான இயந்திரங்கள் அல்லது மண் ஏற்றி செல்லும் வாகனம் அல்லது பல அச்சுகள் கொண்ட வாகனங்களுக்கு ரூ.950 , 24 மணி நேரத்திற்குள் திரும்பி வந்தால் ரூ.1,425 கட்டணம் ஆகும்.

அதிக அளவு அதாவது7 அல்லது அதற்கு மேற்பட்ட அச்சுகள் கொண்ட வாகனம் ஒரு முறை செல்வதற்கு ரூ.1,155, 24 மணி நேரத்திற்குள் திரும்பி வருவதற்கு ரூ.1,730 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வணிக உபயோகம் அல்லது உள்ளூர் வாகனங்களுக்கு (20 கி.மீ., தொலைவிற்குள்) மாதாந்திர பாஸ் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு  வருவதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது.
மதுரை நத்தம் செல்லும் சாலையில் உள்ள டோல்கேட் கட்டணத்தால் இந்தியாவில் எங்கும் இல்லாத அளவிற்கு பல மடங்கு சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும்,சுங்கச்சாவடி என்ற பெயரில் பொதுமக்களிடம் நூதன முறையில் பணத்தை கொள்ளையடிக்கும் தேசிய நெடுஞ்சாலை துறை என்றும்
இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம் என்றும்  மதுரை வாகன ஓட்டிகள்  ஆவேசம் அடைந்துள்ளனர். 

தேசிய நெடுஞ்சாலைத்துறை மக்கள் நலன் கருதி சுங்கச்சாவடி கட்டணத்தை குறைக்க வேண்டும் இல்லையென்றால்   மதுரை நத்தம் சாலையில்  அப்பகுதியில் உள்ள கிராம பொதுமக்கள் மற்றும் விவசாய சங்கங்கள் சேர்ந்து மாபெரும் மதுரை நத்தம் சாலையில்  மறியலில் ஈடுபட உள்ளதாக தகவலை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button